“ராக்கெட் ட்ரைவர்” திரைப்பட விமர்சனம்… !!
நடித்தவர்கள்: – விஷ்வத்,சுனைனா, நாகா விஷால், காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன், ராமச்சந்திரன் துரைராஜ் மற்றும் பலர்.
டைரக்டர் :- ஸ்ரீராம் ஆனந்தசங்கர்.
மியூசிக்:- கௌசிக் கிரிஷ்.
ஒளிப்பதிவு.ரெஜிமேல் சூரியா தாமஸ்.
படத்தொகுப்பு . இனியவன் பாண்டியன்.
தயாரிப்பாளர்கள்:- திரைக்கதை.கதை- அனிருத் வாலாப்.
விண்வெளி விஞ்ஞானியாக வேண்டும் என்று கனவை
விரும்பும் கதாநாயகன் விஷ்வத்தின் ஏழ்மை அவரது கனவை
தகர்த்து விடுகிறது. இதனால், ஆட்டோ ஓட்டுநராக தனது
வாழ்க்கையை ஓட்டும் அவர் மீது பெண் போக்குவரத்து காவலரான சுனைனா
அக்கறை காட்டுகிறார். தனது ஆசை நிறைவேறாமல்
போனதால் எப்போதும் சலிப்பான மனநிலையுடன் பயணிக்கும் போது
விஷ்வத்தின் ஆட்டோவில் ஒரு நாள், 16 வயது நிறைம்பிய ஒரு பையன் ஒருவன் தன்னை ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
என்று சொல்லி
என்று ஆட்டோவில் கையில் இருந்த சில்லறை பைசா யோடு பயணிக்கிறார்.
1948-ல் இருந்து நிகழ்காலத்துக்கு டைம்
டிராவல் மூலம் கலாம் வந்திருப்பதை விஷ்வத் புரிந்து கொள்கிறார்.
அதே சமயம், 1948-ல் இருந்து தற்போதைய காலக்கட்டத்திற்கு
வந்ததற்கான நோக்கம் பற்றி தெரியாமல் 16 வயது கலாம்
தவிக்கிறார். கலாமின் நோக்கம் என்ன? என்பதை அறிந்து அதை
நிறைவேற்றும் கட்டாயத்துக்குத் தள்ளப்படும் விஷ்வத்,
கலாமுடன் இணைந்து அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த
நோக்கம் என்ன?, அதை விஷ்வத் எப்படி கண்டுபிடிக்கிறார்?, என்பதை நெகிழ்ச்சியாக சொல்லும் டைம் டிராவல் கதை ‘ராக்கெட் டிரைவர்’.
பிரபா என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக
நடித்திருக்கும் விஷ்வத், அலட்டிக் கொள்ளாமல் பொறுப்புடன் இயல்பாக
நடித்துள்ளார். பிரபா மீது ரொம்ப அக்கறை காட்டும் தோழியாக
நடித்திருக்கும் சுனைனாவுக்கு திரைக்கதையுடன்
தொடரக் கூடிய கதாபாத்திரத்தில் , கொடுத்த வேலையை நிறைவாக தந்திருக்கிறார்.
சின்ன வயது கலாமாக நடித்துள்ள நாகவிஷால் மற்றும் கலாமின்
நண்பராக வரும் நடித்த காத்தாடி ராமமூர்த்தி இருவருக்கும் உள்ள வித்தியாசமான சிறப்பான
நடிப்பின மூலம் ரசிகர்கள் மனதில் தஞ்சம் கொள்கிறார்கள்.
இசையமைப்பாளர் கெளஷிக் கிரிஷ்,
ஒளிப்பதிவாளர் ரெஜிமெல் சூர்யா தாமஸ்,
படத்தொகுப்பாளர்
இனியவன் பாண்டியன் ஆகியோரது பணி சிறப்பாக உள்ளது.
கதைக்களத்தை தாங்கிப் பிடித்திருக்கிறது.
ஃபேண்டஸி ஜானரில் சொன்ன டிராமா வகையில் படங்கள் என்றால் பிரமாண்டம்,
திருப்பங்களுடன் நிறைந்தவாக
இருக்க வேண்டும் மென்று என்ற சில வழக்கத்தை விட மாற்றியமைக்கும்
முயற்சியில் ஈடுபட்டிருக்கும்
இயக்குநர் ஸ்ரீராம் ஆனந்தசங்கர், அறிவியலையும்
தத்துவத்தையும் கற்பனையோட இணைக்கும்
முயற்சியில் படத்தின் திரைக்கதையை திறம்பட அமைத்துள்ளர்.
நம்ம வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களின்
பின்னணியில் எவ்வளவு பெரிய சிறந்த நோக்கங்கள் இருக்கின்றன,
என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையில்
எடுத்து கொண்டு சென்று இருக்கிறார்.
இயக்குநர் ஸ்ரீராம் ஆனந்தசங்கர்,
ஃபேண்டஸி டிராமா வகை கதையை எளிமையான முறையில் படமாக்கியுள்ளார்,
இந்த கதையில் அருமையான கருத்தை
அழுத்தமாக பதிவை செய்துள்ளார். அவரது படைப்புகள் பாராட்டுகள் பெறக் கூடியது …
‘ராக்கெட் டிரைவர்’ படம் நெகிழ்ச்சியான பயணத்தை
நிறைவை தரக்கூடியது.