காமராஜர் இல்லத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம்திருக்குறள் திரைப்பட குழுவினர் வழங்கினர். !!

Share the post

காமராஜர் இல்லத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம்
திருக்குறள் திரைப்பட குழுவினர் வழங்கினர்.

காந்தி தாத்தா பிறந்தநாள், காமராஜர் இறந்த நாள் என்பது பள்ளி குழந்தைகள் மனதிலும் ஆழமாக வேரூன்றி விட்ட வாசகம்.

மகாத்மாவின் வழியில் அடிப்பிறழாமல் பயணித்த காமராஜர் காந்தியின் பிறந்தநாளன்று மறைந்தது துயரம் கலந்த வினோதம்.

காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ், என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் தற்போது ‘திருக்குறள்’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நிறைவு பணி நிறைவடைந்த நிலையில் திரைப்படம் திரையிடலுக்கு ஆயத்தமாகி உள்ளது.

‘ காட்சிக்கு எளியவன் கடுஞ்சொல்லன் அல்லனில் மீக்கூறும் மன்னன் நிலம்’

என வள்ளுவம் கூறுகிறது.

திருவள்ளுவர் மன்னர்களுக்கு என விதித்த அறத்தின் வழியில் பொற்கால ஆட்சி தந்த காமராஜர் இன்றுவரை இந்தியாவில் முதல்வர்களுக்கான இலக்கணமாக திகழ்கிறார்.

பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருக்குறள் திரைப்பட குழுவினர் காமராஜரின் இல்லத்தில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

காமராஜ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் திருக்குறள் திரைப்படத்தின் பணியாற்றிய நடிக நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *