நீல நிறச் சூரியன் Preview Show – Review 03 !

Share the post

நீல நிறச் சூரியன் Preview Show – Review 03

Samyuktha Vijayan‘ன் #நீலநிறச்சூரியன் ❤️
Based on true events !

ஆணாய்ப் பிறந்த ஒருவர் தன்னைப் பெண்ணாய் உணர்கிறார். அவர் சமூகத்திற்கு பயந்து தன்னை ஒளித்துவைத்துக்கொள்ள விரும்பவில்லை.
வெளிப்படுத்துகிறார். குடும்பம் ஏற்றுக்கொள்கிறது.

Family என்கிற சின்ன unit’ல கிடைக்கிற acceptance, Society’ங்குற பெரிய unit’அ face பண்ணக்கூடிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. அந்த நம்பிக்கைதான் qualification’ஆக, Profession’ஆக, financial freedom உள்ள ஒரு individual’ஆக evolve ஆக உதவியிருக்கிறது. அத்தோடு நில்லாமல் மேலும் தன் skills’ஐ வளர்த்துக்கொண்டு , தன் வாழ்வையே எழுதி, நடித்து, இயக்கி, தயாரித்து எந்த sympathy’ஐயும் கோராமல் ஒரு Filmmaker’ஆக பிரகாசமாய் மிளிர வைத்திருக்கிறது.

தனக்கு நடந்தவற்றை objective’ஆக பார்க்க முடிவது ஒரு பக்குவமான மனதின் செயல். இந்தப்படம் melodrama’வாக இல்லாமல், matter of fact’ஆக இருப்பது, coming out’ஐ normalise செய்கிற ஒரு தொனி. இது ஒரு கலைஞருக்கு சமூகத்தின் மீதிருக்கிற நம்பிக்கையும் அன்பும் தான் !

Her life is a statement !
Happy for you தோழி ❤️

  • Anandh Kumaresan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *