தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
அண்ணாசாலை
சென்னை
துணை முதல்வருக்கு
வாழ்த்துக்கள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என். இராமசாமி மற்றும் நிர்வாகிகள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் அதில், ” மகன் தந்தைக்காற்றும் உதவி அவையத்து முத்தி இருப்பச் செயல் என்ற வள்ளுவரின் குறளுக்கு எடுத்துக்காட்டாய் செயல்பட்டு வருபவர் தான் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள். தாத்தா கலைஞர் போலவே திரை உலகில் ஈடுபாடு கொண்டவர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர். நடிகர், வினியோகஸ்தராக இருந்தவர். பன்முக தன்மை கொண்டவர். அரசியலில் நுழைந்து குறுகிய காலத்தில் தன் கடின உழைப்பால் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடியவர். பின்னர் அமைச்சரானவர். அமைச்சர் பதவியில் தன் பணியை செவ்வனே செய்து மக்களின் பாராட்டுக்களை அள்ளியவர். தன்னை முன்னிலை படுத்தாமல் தமிழ்நாடு அரசின் ஆட்சியையும், நிர்வாக திறமையையும் மக்களிடம் எடுத்து சென்றவர். அவரது சீரிய பணியால் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று அவரை துணை முதல் அமைச்சராக்கியுள்ளார்.
தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு பாணியை வகுத்து வலம் வந்தவர். அரசியலிலும் எளிமையே வலிமை என அனைவரிடமும் பழகி வருபவர்.
மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று துணை முதல்வரானது திரை உலகிற்கு மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்வான தருணமாகும்.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு பல்வேறு நலப் பணிகளை செய்தவர். இனி தமிழ்நாடு முழுவதும் மக்கள் பயனடையும் வண்ணம் அவரது பணி மேன்மேலும் சிறக்கும். இனி மக்களின் மனதில் அவருக்கு நிரந்த இடம் கிடைக்கும்.
முயற்சி மற்றும்
விடாமுயற்சிக்கு
எடுத்துக்காட்டாய் பணிபுரிந்து வந்தவர்.
மக்களின்
துணைமுதல்வர்
மாண்புமிகு
உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு
திரை உலகம் சார்பில்
வாழ்த்துக்களையும்,
பாராட்டுக்களையும் அனைத்து திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பில்
தெரிவித்துக் கொள்கிறோம் “.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.