தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆவது எப்படி ? : ஜி.பி. முத்து சித்தார்த்துக்கு தரும் செம்மையான ஐடியா !

Share the post

தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆவது எப்படி ? : ஜி.பி. முத்து சித்தார்த்துக்கு தரும் செம்மையான ஐடியா !

பிரைம் வீடியோவிலிருந்து வெளியான தலைவெட்டியான் பாளையம் சீரிஸின் அருமையான டிரெய்லரைத் தொடர்ந்து, இந்த சீரிஸ் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஜி.பி. முத்துவும் அபிஷேக் குமாரும், இந்த சீரிஸில் நடிக்கும் கதாப்பாத்திரங்களை ஒட்டி ஒரு அட்டகாசமான புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஜி.பி. முத்து, அபிஷேக்குமாருக்கு தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங்காக மாற ஐந்து அருமையான ஐடியாக்களைத் தருகிறார்.

ஜி.பி. முத்துவுக்கும் அபிஷேக்குமாருக்கும் இடையிலான உரையாடலில் அவர் தரும் ஐந்து ஐடியாக்கள் இதோ !

  1. எப்போதும் ஸ்ட்றெஸ் ஆகக்கூடாது
  2. சம்பிரதாயமாக நடந்து கொள்ளக் கூடாது ஏனெனில் இந்த கிராமத்தில் யாரும் புதியவரில்லை
  3. இயல்பாக பழக வேண்டும் அதே நேரம் புத்திக் கூர்மையுடன் இருக்க வேண்டும்.
  4. பிரச்சனைகளிலிருந்து எப்போதும் ஒதுங்கி இரு
  5. முக்கியமாக பேய் மரத்தை விட்டு எப்போதும் ஒதுங்கியே இரு

இதையெல்லாம் ஒழுங்காக பின்பற்றினால், தலைவெட்டியான் பாளையத்தின் விசித்திரமான கிராமவாசிகளுக்கு பிடித்தவனாக இருப்பாய் என்கிறார். முத்துவின் இந்த விதிகளைப் பின்பற்றி இந்த சவாலில் அபிஷேக்கின் கதாபாத்திரமான சித்தார்த் வெற்றி பெறுவாரா?

தலைவெட்டியான் பாளையம் என்பது எட்டு எபிசோடுகள் கொண்ட காமெடி சீரிஸாகும், இது பெரிய நகரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன், தலைவெட்டியான் பாளையம் என்ற தொலைதூர கிராமத்தில், தனது புதிய பணியில், அறிமுகமில்லாத சூழலின் சவால்களை எப்படி எதிர்கொள்கிறான் என்பதைச் சொல்கிறது. இயக்குநர் நாகா இயக்கியுள்ள இந்த சீரிஸை, பாலகுமாரன் முருகேசன் தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். இந்த குடும்ப பொழுதுபோக்கு சீரிஸில், திறமையான நடிகர்களான அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி மற்றும் பால் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரைம் வீடியோவில் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் தலைவெட்டியான் பாளையம் பிரீமியர் செய்யப்படுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில சப்டைட்டில்களுடன் இது திரையிடப்பட உள்ளது.

https://www.instagram.com/reel/DAAwq_txTJE/?igsh=MWx1dWc2dnZwMG02Zg==

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *