” கோட் ‘‘ திரைவிமர்சனம் .!!
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் (பி) லிமிடெட் கல்பாத்தி எஸ்.அகோரம்
கல்பாத்தி எஸ்.கணேஷ்
கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்து வெங்கட் பிரபு இயக்கி தளபதி விஜய் நடித்து வெளியாயிருக்கும் படம் கோட்
மிரட்டியுள்ள
'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'
திரைப்படம்
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அதிக பொருட்செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில்
உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, ஜெயராம், லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் பிஜிஎம் பக்காவாக அமைந்துள்ளது.
விசில் போடு மற்றும் மட்ட பாடலுக்கு
தியேட்டரில் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
கோட் படத்தில்
வெங்கட் பிரபு… பீஸ்ட், வாரிசு, லியோ என வரிசையாக விஜய்
நடிப்பில் வெளியான படங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள் .
குவிந்து வந்த நிலையில்,
அதையெல்லாம் கடந்து கோட்
திரைப்படம் அனைத்து ரசிகர்களையு பிடித்தா?
இல்லையா? என்பது தான் படத்தின் கோரிக்கை .
இந்த படத்தின் விமர்சனத்தில் பார்க்கலாம் …
கோட் படத்தின் கதை: SATS (Special Anti-Terrorist Squad) எனப்படும் .
ரகசிய படையின் தலைவராக விஜய் இருந்து வந்த
போது வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிராக
நடத்தப்படும் தீவிரவாத சூழ்ச்சிகளை விஜய்
மற்றும் அவரது குழுவினர் உள்ள பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர்
சேர்ந்து முறியடித்து வருகின்றனர்.
தனது குடும்பத்துடன் பாங்காங்கிற்கு சுற்றுலா செல்லும்
MS காந்திக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகிறது.
அந்த சமயத்தில் , தனது அங்கே மகனை இழக்கிறார். அந்த
அமைப்பே வேண்டாம் எனஇமிகிரேஷன்
அதிகாரியாக வயதான காலத்தில் வாழ்க்கையை நடத்தி
வரும் காந்திக்கு மீண்டும் SATS அமைப்பில் இருந்து
அழைப்பு வர மாஸ்கோவுக்கு செல்லும் காந்திக்கு பேரதிர்ச்சி அவருடைய
ரூபத்திலேயே இன்னோரு ( ஜீவனை ) பார்த்து அசந்து போகிறார் .
காந்தி .அதன் பின்னர் நடக்கும் மோதல்களும்,
பாச போராட்டமும் தான் இந்த கோட் படத்தின் கதை.
ஒட்டுமொத்த படத்தின்
டபுள் ஆக்ஷனில் விஜய் முமுவதையும் தனது
தோளில் சுமந்து நடித்துள்ளார். பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் என
விஜய்யின் குரூப்பில் உள்ளவர்களின் நடிப்பும்
அவர்களுக்குள் நடக்கும் ட்விஸ்ட்டும் கலக்கல்.
இளம் விஜய்யாக வரும் டீ ஏஜிங் விஜய் (ஜீவன்)
வெங்கட் பிரபு. படத்தில் அவர் பண்ணும் சேட்டைகள் மற்றும் அலப்பறைகள் தான் ரசிகர்களை
உற்சாகத்தில் ஆழ்த்துகிறது.
யோகி பாபு, பிரேம்ஜியின் காமெடி பெரும் பகுதி ரசிகர்களை சிரிக்க
வைக்கிறது.
விஜய்யும் காமெடி காட்சிகளில் தன் பங்குக்கு பலம்
சேர்த்திருக்கிறார். சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம்
உள்ளிட்டோருக்கு
சரியான ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
கேமியோக்கள் அதிரடி விஜயகாந்தின் ஏஐ
கேமியோவின் சீக்ரெட் ட்விஸ்ட் மூலமாகத்தான்
படமே தொடங்குகிறது.
ஏற்கனவே சோஷியல் மீடியாவில் லீக்கான பல
பிரபலங்களும் கேமியோவாக நடித்து
தூள் கிளப்பியுள்ளனர். அதிலும், கிளைமேக்ஸ் கேமியோ வேறலெவல். பிளஸ்:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் அந்த இறுதி கிளைமேக்ஸ்
படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்லலாம்.
ஆரம்பத்தில் இளம் விஜய்யின் டீ ஏஜிங் புதுமையாக தெரிந்தாலும்,
படம் நகர்கிற போக்கில் அந்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்ததே
இந்த படத்திற்கு வெற்றியை தந்திருக்கிறது.
வெங்கட் பிரபு விஜய் ரசிகர்களுக்கு என்ன மாதிரியான படம்
பிடிக்கும்.
என்பதை பார்த்து ஸ்க்ரீன்பிளே
செய்திருக்கும் விதம் சிறப்பு. தளபதி விஜய் இப்படியெல்லாம் நடித்து
விட்டு தமிழ் சினிமாவை விட்டே செல்லப் போகிறேன்.
என்பது நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் என சொல்லலாம்..
டீ ஏஜிங், சிஜி குறைகள் படத்தின் பட்ஜெட் பெரிதாக இருந்தாலும்,
சில இடங்களில் சஞ்சலிக்கிறது . யுவன்
சங்கர் ராஜா இசையில் இடம்பெற்றுள்ள பாடல்கள், நடனம் படைக்கிளப்புகிறது .
தளபதிக்கும் இளைய தளபதிக்கும் இடையேயான
மோதல்கள், வில்லன் போர்ஷன் உள்ளிட்ட இடங்களில் இன்னமும் அழுத்தம் கொடுத்திருக்கலாம் .
ரசிர்களுக்கு
சில இடங்களில்
வெங்கட் பிரபு எடுத்துக் கொண்ட சினிமாட்டிக் சுதந்திரம் எல்லா தரப்பு ரசிகர்களுக்கு
பிடிக்குமா ? என்கிற கேள்வி வருமா ?. சில குறைகளை விட்டு ஒட்டுமொத்தமாக படத்தைப் பார்த்தால் நிச்சயம் இந்த கோட் . பார்க்கலாம்.!!