செம்பியன் மாதேவ
திரைப்படம் விமர்சனம்*
காதலையும், சாதீய வன்மத்தையும் அதைத்
தொடர்ந்து நடக்கும் பிரச்சினைகளையும் கிராமத்து மனிதர்களை
உலவவிட்டு ரத்தமும் சதையுமாய் சொல்லும் படம், செம்பியன் மாதேவி
செம்பியன் என்ற சிறு கிராமம்.
தங்களது குடும்பத்துகுச் சொந்தமான கோழிப் பண்ணையில் பணி
புரியும் ஒருவரின் மகள் மாதேவியை, காதலிக்கிறார்
இளைஞர் வீரா. அவர் ‘உயர்சாதி’ என்பதால் காதலை ஏற்க
மறுக்கிறார் நாயகி. நாளடைவில், நாயகனின்
உண்மையான காதலை உணர்ந்து, காதலிக்க
ஆரம்பிக்கிறார்.
இருவரும் நெருங்கிப் பழக… நாயகி மாதேவி கர்ப்பமைடைகிறார். உடனடியாக திருமணம்
செய்து கொள்ள வேண்டும் என்கிறார். நாயகன் வீராவே மறுக்கிறார்.
மனதார காதலித்த நாயகன் வீரா, திருமணத்து மறுத்தது ஏன்.. அதன் பின்னணி என்ன… பிறகு என்ன
நடந்தது என்பதே கதை. நாயகன் லோகு பத்மநாபன், எதார்த்தமான கிராமத்து
இளைஞராகவே வந்து கவர்கிறார். காதல் காட்சிகளில்
மட்டுமின்றி, மோதல் ( சண்டைக்) காட்சிகளிலும் முத்திரை
பதித்து உள்ளார். சாதி ரீதியான உணர்வை
கடுமையா எதிர்க்கும் காட்சிகளிலும் கவனத்தை கவர்கிறார்.
நாயகி மாதேவியாக வரும் அம்சலேகா நிஜயமான கிராமத்து பெண்ணை கண்முன்
நிறுத்துகிறார். குடும்ப சூழல்நிலையை கருதி காதலை மறுப்பது.. நாயகனின் மனதை
அறிந்து காதலை ஏற்பது என சிறப்பாக நடித்து உள்ளார். இன்னொரு நாயகி கண்ணகியாக நடித்திருக்கும்
ரெஜினாவும் இயல்பான நடிக்கை அளித்து உள்ளார்.
சாதி வெறியுடன், சங்கத் தலைவராக வரும் வில்லன் மணிமாறன்
மிரட்டி இருக்கிறார். மற்றவர்களும் நிஜமான
கிராமத்து மனிதர்களை கண் முன் நிறுத்தி உள்ளனர்.
ஒளிப்பதிவாளர் கே.ராஜசேகர், கிராமத்து காட்சிகளை சிறப்பாக படம் பிடித்து உள்ளார்.
நாயகன் லோகு பத்மனாபனே இசை
அமைத்து உள்ளார். பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
வ.கருப்பண், அரவிந்த், லோக பத்மநாபன் ஆகியோரின் வரிகள் சிறப்பு.
ஏ.டி.ராம் அமைத்துள்ள பின்னணி படத்துக்கு பலம். .
சக்தி மற்றும் ஸ்ரீ செல்வி ஆகியோரின் நடன வடிவமைப்பு, மெட்ரோ
மகேஷ் அமைத்துள்ள சண்டைக் காட்சிகள் இரண்டுமே ரசிக்க வைக்கின்றன.
அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்ட காலத்திலும் இன்னும் சாதி வெறி தலைவிரித்தாடுகிறது
என்பதையும், அதற்கு தீர்வு சாதி கடந்த
காதல்தான் என்பதையும் ரசிக்கும்படி சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
அனைவரும் பார்த்து
ரசிக்கலாம்.