
‘வாழை”
திரைப்படவிமர்சனம்
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், ஆகிய வெற்றி படங்களை கொடுத்த
இயக்குநர் மாரி செல்வராஜ்
முதல் முறையாக தனது வாழ்க்கையில் நடந்த
ஒரு உண்மை துயர சம்பவத்தை மையமாக
வைத்து உருவாக்கி இருக்கும் திரைப்படம் வாழை.
தனது இந்த பயோ பிக்கின் ஒரு அங்கமாக
உருவாக்கி வெளியிட்டு இருக்கும் இந்த வாழை திரைப்படம்
ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு மனதுக்கு
நெருக்கமாக அமைந்திருக்கிறது?
என்பதை பார்ப்போம்…
சிறுவயதிலேயே தந்தையை இழந்த சிறுவன் பொன் வேல்
தன் தாய் மற்றும் தன் அக்காவுடன் மிகவும்
ஏழ்மையான நிலையில் ஒரு குக்கிராமத்தில் வசித்து வருகிறான்.
பள்ளிக்கு சென்று விட்டு வரும் அவன் விடுமுறை நாட்களில் தன் குடும்ப
கஷ்டத்திற்காக தன் தாய் மற்றும் அக்காவுடன் வாழைக்காய் சுமக்க செல்கிறார்.
அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து கஞ்சி குடித்து வருகின்றனர்.
எட்டாவது படிக்கும் பள்ளியில் முதல்
மாணவனாக இருக்கும் பொன் வேலுக்கு
இந்த காய் சுமக்கும்
வேலை சுத்தமாக பிடிக்கவில்லை. அவனுக்கு
குடும்ப கஷ்டத்திற்காக வேண்டா விருப்பமாக இந்த வேலையை
செய்யும் போது, அவன் ஒரு நாள் பள்ளி விடுப்பு வரும் நாளில் மட்டும் காய்
சுமக்க செல்கிறான்.
அன்றைய தினம் பள்ளியில் நடக்கும் ஆண்டு விழாவில்
ஒத்திகைக்காக வருவதாக டீச்சரிடம் கூறுகிறான்.
தாய்க்கு தெரியாமல் அக்காவை மட்டும் வேலைக்கு
அனுப்பி விட்டு தான் பள்ளிக்கு செல்லுகிறான் .
பள்ளியை விட்டு வீட்டிற்கு திரும்பும் போது பொன்வேலுக்கு
மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.
அதுவும் பேரதிர்ச்சி? காய் சுமக்க சென்ற தன் அக்காவிற்கு என்ன
ஆனது? நண்பன்,ராகுல் கனி அண்ணன் , என்பதே வாழைப்
படத்தின் கலங்கடிக்கும் சம்பவம் நடக்கிறது. மீதி கதையை பார்ப்போம் .
தன் இளம் வயதில் சந்தித்த மிகப் பெரும் கஷ்டங்களையும்
சோகங்களையும் நடந்த உண்மை சம்பவங்களையும்
அப்படியே இந்த வாழை படத்தின் மூலம் கண்முன் கொண்டு வந்து பார்ப்பவர்களை
கண்கலங்க வைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
இந்த படம் எடுப்பதற்காக என்ன காரணம் என்ன?
அந்த அளவுக்கு தன் ரத்தமும் சதையுமாக மனதுக்குள் இருந்த துயர சம்பவத்தை
இந்த கதையை மக்களுக்கு கொடுத்திருக்கிறார்.
படத்தைப் பார்ப்பவர்களின் கைதட்டல் பெற்று இருக்கிறார்.
ஆரம்பம் முதல் பாதியில் மிகவும் கலகலப்பாகவும் ஜனரஞ்சகமாகவும்
செல்லும் திரைப்படம். இரண்டாம் பாதியில் மிகவும் சீரியசான
துயரமான கதை களத்திற்குள் போகிறது. கடைசியில் கனத்த
இதயத்தை நொறுங்கடிக்கும் படமாக முடிந்திருக்கிறார் .
மனதில் ஆறாத
புண்ணாக மாற்றி ரணத்தை அப்படியே நமக்கும் உணர்த்தும் ஒரு படமாக .மனதை
விட்டு நிகழாமல் தந்திருக்கிறார். இயக்குநர் மாரி செல்வராஜ்.
ஒரு ரூபாய் கூலியை கூட்டி தர கேட்டதற்காகவே மறுத்த
வாழைத்தோப்பு முதலாளி அலட்சியமாக செய்யும் முதலாளித்துவமான ஒரு
விஷயத்தால் ஏற்படும் மிகப்பெரும் துயரை அப்படியே கண்முன் காட்டி பார்ப்பவர்களை
கண்கலங்கடிக்க செய்திருக்கிறார்.
முதலாளிகளின்
அதிகார சுரண்டல்களை வலிமையைக் காட்டி
அதன் மூலம் தன் கம்யூனிஸ்ட்
சித்தாந்தங்களை உள்ளடக்கிய ஒரு படமாக கொடுத்திருக்கும்.
இவர் அதை அனைத்து தினக்கூலி மக்களின் வாழ்க்கையின்
மனகலக்கத்தை ஒரு படமாகவும் கொடுத்திருக்கிறார்.
அதிகார
ஆதிக்க வர்க்கத்திடம் அவர்கள் செய்யும்
தவறை எதிர்த்து கேள்வி கேட்கும் நபர்களை அவர்கள் எப்படி
பார்க்கிறார்கள், எப்படி நடத்துகிறார்கள் .
அவர்களுக்குள் ஏற்படும்
விளைவுகளை மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தி
சமூகத்துக்கு மிக அவசியமான ஒரு படமாக இந்த வாழை
படம் மூலம் உருவாகி இருக்கிறார் . இந்தப் படத்திற்கு விருதுகள்
நிச்சயம். உண்டு .
படத்தின் நாயகர்களாக வரும் பொன் வேல்,
ராகுல் என்ற சிறுவர்கள் மிக மிக யதார்த்தமான நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்
கள்.அவர்களுக்கு விருது வாங்கும் அளவிற்கு அழகான
நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தி கைதட்டல்
பெற்றிருக்கிறார்கள் .
இவர்கள் இருவரும் படம் முழுவதும் ஆங்காங்கே
ரஜினி , கமல், விஜய் , என நடிகர்களை யதார்த்தமான பெருமையை செய்யும் சேட்டை
குறும்புத்தனங்களும், அட்ராசிட்டியும், டீச்சரின் பப்பி லவ்வும் மிக
அழகாகவும், யதார்த்தமா ரசிக்கும்படியும், நய்யாண்டி செய்யும் இடையே இளையராஜாவின் இரண்டு பாடல்கள் ஒலிக்கிறது. இந்த
இடத்தில் கைத்தட்டல் பெறும் அதேசமயம் நேர்த்தியாகவும்
காட்சியை வகை ப்படுத்தப்பட்டு அதன் மூலம் இவர்களின்
நடிகர்களின் நடிப்பு மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் .
குறிப்பாக இவர்கள் இருவரும் வரும்
காட்சிகள் எல்லாம் படத்தில் சிரிப்பு அலைகளும்
ஒலிக்கப் படுகிறது. இந்த இரண்டு சிறுவர்களுக்குமே இப்ப படம் மூலம் விருதுகள்
நிச்சயம். கிடைக்கும் முக்கிய கதாபாத்திரத்தில்
நடித்திருக்கும்
கலையரசன் கம்யூனிசம் பேசுகிறார். தனக்கு கொடுத்த வேலையை மிக சிறப்பாக
செய்திருக்கிறார்.
நாயகியாக வரும் திவ்யா துரைசாமி அவருக்கான
வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
இவருக்கும் அவர் தம்பி பொன் வேலுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக
ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளில் மிக சிறப்பாக
நடித்திருக்கின்றனர். டீச்சராக வரும் நிகிலா விமல் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறார்.
காட்சிக்கு காட்சி அழகான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கவருகிறார். இவருக்கும் அந்த
சிறுவர்களுக்குமான கெமிஸ்ட்ரி மிக சிறப்பாக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி
இருக்கிறது.
சிறுவர்களுக்கும் டீச்சருக்கும் ஆன
உறவை மிக சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.
அதனாலேயே இவர்கள் கதாபாத்திரமும் நன்றாக மெருகேறி சிறப்பாக அமைந்திருக்கிறது.
மற்றபடி உடன் நடித்த நடிகர்கள் பெரும்பாலானவர்கள்
புது முகங்களாகவே இருந்தாலும் மண் மணம் மாறாத
அவர்களின் யதார்த்த நடிப்பு மிக சிறப்பாக அமைத்து படத்துக்கும் சிறப்பு சேர்த்திருக்கிறது.
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும்
பின்னணி இசையும் அபாரம். காட்சிக்கு காட்சி மிக சிறப்பான
இசையையும் பாடல்களையும் கொடுத்து படத்திற்கு மிகப்பெரிய சிறப்பாக ஆக
அமைந்திருக்கிறார்.
இவரின் இசையே
படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் வாழைத்தோப்பு மற்றும்
கிராமம் சம்பந்தப்பட்ட முழுமை காட்சிகள் மற்றும் பள்ளி
சம்பந்தப்பட்ட காட்சிகள் என அனைத்துமே மிக
மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்
பட்டுள்ளது.
ஒவ்வொரு காட்சிக்கும் இவர்களது உழைப்பு
என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அதனாலேயே இந்த படம்
வேறு ஒரு தளத்தில் இருக்கிறது. உலக
சினிமாக்களுடன் போட்டி போடும் வகையில்
மிகவும் தரமான படத்தை தன் ஒளிப்பதிவு மூலம் கொடுத்திருக்கிறார்.
தனது வாழ்வில் நடந்த வலி மிகுந்த ஒரு யதார்த்தமான
சம்பவத்தை மிகவும் ரசிக்கும்படியும் ஜனரஞ்சகமாகவும்
கலகலப்பாக கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ் படத்தில் பல்வேறு திருப்பங்கள்
இன்றி மிகவும் யதார்த்த சினிமாவாக இப்படத்தை கொடுத்து இருக்கிறார்.
அது பல பேருக்கு பிடிக்கும் படியாக இருந்தாலும் சில
பேருக்கு சற்றே துயரம் தரும்படியாக இருக்கிறது.
அது மட்டுமே இந்த படத்திற்கு சற்று . இருப்பினும் கதையும் கதை போகின்ற போக்கும் கதை
பெண்ணியத்திற்கு மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறது .
ஒரு உலகத்தரமான படமாக இப்படம் அமைந்திருப்பது
படத்திற்கு பலம் .
இந்த படத்தின் கதாப்பாத்திரப்படைப்பு
மேலும் மெருகேற்றி.மக்களின் வாழ்வியல் சிந்தனைகளை
வெளிச்சம் போட்டு காட்டுகிறது . இந்த வாழை படம் .