கொட்டுக்காளி திரை விமர்சனம்.!!

Share the post

கொட்டுக்காளி திரை விமர்சனம்.

நடித்தவர்கள் :- நடிகர்கள்: சூரி, அன்னா பென்.
இயக்கம்: பி.எஸ். வினோத்ராஜ்.
தயாரிப்பு:- சிவகார்த்திகேயன்.
ஒளிப்பதிவாளர் – சக்தி வேல் .
சென்னை: சர்வதேச திரைப்பட விழாவான பெர்லின் உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட ‘கொட்டுக்காளி’
Aattam movie: தேசிய விருது இவர்கள் இருவரை தவிர மற்ற நடிகர்கள் எல்லாமே கிராமத்து ஆட்கள் தான். பின்னணி இசை இல்லாமல் வெறும் ஆட்டோ வண்டி சப்தங்களையும்,
சேவலின் கொக்கரக்கோ சத்தத்தையும் மட்டுமே வைத்துக் கொண்டு முழு படத்தையும் கொடுக்க முடியும்.
வினோத்ராஜ் கொடுத்துள்ள இந்த படைப்பு உலகத் தரம் வாய்ந்த படைப்பாகவே பார்க்கப்படுகிறது..
இந்த கொட்டுக்காளி படத்தின் மூலம் வினோத்ராஜ் சமூகத்திற்கு சொல்ல வரும் கருத்து என்ன என்பது குறித்தும் வெகுஜன ரசிகர்களை இந்த படம் கவருமா? என்பதை பார்ப்போம்.
பார்க்கலாம் வாங்க.. கொட்டுக்காளி கதை:-
12ம் வகுப்பு முடிந்த உடனே தனது முறைப்பெண்ணை
திருமணம் செய்துக் கொள்ளாமல் என்று பாண்டி சூரி அவரை கல்லூரிக்கு படிக்க அனுப்புகிறார்.
ஆனால், கல்லூரியில் காதல் வயப்பட்ட மீனா (அன்னா பென்) பாண்டியை திருமணம் செய்ய மறுக்கிறார்.
அவருக்கு பேய் பிடித்து விட்டதாகக் கூறி குடும்பமே சாமியார் ஒருவரிடம் அழைத்துச் செல்லும் பயணம் தான் இந்த படமே. கடைசியாக மீனாவுக்கு பிடித்த பேய் பிடிக்கப்பட்டதா?
கேமரா மட்டும் பேசுகிறது. கதாபாத்திரத்தின் ஆன்மாவின் மெளனம் ஒசை மட்டும் ஊடுருவி நகர்ந்து வருகிறது.
இதுபோன்ற சமூகத்தில் நிலவும் பேயின் ஆத்மாவை வெளிச்சம் போட்டுக் காட்டும் என்பது தான் கதை. பாண்டியாக சூரி தனது வித்தியாசமான நடிப்பால் மிரட்டியிருக்கிறார்.
படம் முழுக்க அவர் கவ்விய தொண்டையுடன் பேசி நடித்திருப்பது பிரம்மிக்க வைக்கிறது. காமெடி நடிகராக இருந்த சூரியை ஒரு சீனில் கூட அது ப்போல காணமுடியவில்லையே என்கிற அளவுக்கு இந்த படத்தில் சிறந்த நடிகராக கோபாக் கனலோடு உருமாறியிருக்கிறார்.
சூரியை தவிர்த்து மீனா கதாபாத்திரத்தில் நடித்த அன்னா பென் எவ்வளவு அடி வாங்கினாலும், உதை வாங்கினாலும், பிடிவாதம் கொண்ட பெண்ணாகவும், சூரியை ஏறெடுத்தும் பார்க்காத பெண்ணாகவும் கம்பீரமா நடிப்பில் மெளனமா நடித்திருக்கிறார் ..
சூரி, அன்னா பென்னை தவிர்த்து பாண்டியின் அப்பாவாகவும், மீனாவின் அம்மாவாகவும் மற்றும் அந்த இரு அக்காக்களும் கூடவே வரும் குடும்பத்து நபர்களும், பலி கொடுக்க அழைத்துச் செல்லப்படும். சேவலும், அதற்கு நெல் கொடுக்கும் அந்த சிறுவனும் என ஒவ்வொருவரின் நடிப்பும் நடிப்பாக
தெரியாமல் இயற்கையாகவே இருப்பது ஹைலைட். ஒரு டிராவல் படத்தில் இடைவேளை வரை ஆட்டோ ஓடுவதும், இரு சக்கர வாகனங்களில் சத்தோடு குடும்பத்தினர் பயணிப்பதை மட்டுமே காட்டி,
ஆங்காங்கே சிரிக்கவும், சிந்திக்கவும் ரசிக்கவும், ஏதோ ஒன்று நடக்கப் போகிறது. மட்டும் தெரிகிறது.
படத்தில் பதபதைப்பையும் எமோனலான காட்சிகள் இயக்குநர் வினோத்ராஜ் கடைசி வரை சரியாகவே நகர்த்திக் கொண்டு போயிருக்கிறார்.
கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு பெண்ணுக்கு பேயோட்டும் காட்சியை ஏற்கனவே படமாக்கப்பட்ட விதமும், நம் முன்பு வந்த காட்சியை அந்த பெண்ணுக்கான பிரச்சனையை விவரிக்கும் அந்த இடத்தில் தான் சமூகத்தில் பிடித்திருக்கும் பேயை வெளிச்சம் போட்டு விபரமா புரிந்து க்கொள்ளும்படிக் காட்டியிருக்கிறார். இயக்குனர் .
இயக்குநர், சூரி, அன்னா பென்னின், நடிப்புக்காகவே இந்த படத்தை பார்க்கலாம்.
இடைவேளை வரை பெரிதாக எந்தவொரு காட்சியும் இல்லை என்றாலும், அந்த இடைவேளைக்கு முந்தைய சண்டை காட்சியில் சூரி நடித்திருக்கும் யதார்த்தமான நடிப்பு அபாரம்.
சூரிக்கு இப்படியொரு வேறுப்பட்ட நெகட்டிவ் ரோலின் கதாபாத்திரத்தில் நடித்தது . ஆச்சர்யப்பட வைத்து விட்டார்.
ஒளிப்பதிவாளர் சக்திவேல், மலைகளையும், சாலைகளையும், மனித முகங்களையும், அவர்களின் மனதில் உள்ள எண்ணங்களையும் படம் பிடித்துள்ள விதம் தான் சர்வதேச ரசிகர்களையும் இந்த படம் ஈர்க்க காரணம்.
இயக்குநர் வினோத்ராஜ் எடுத்துள்ள இந்த கொட்டுக்காளி படத்தின் கிளைமேக்ஸ் காட்சி வெகுஜன ரசிகபெரும் மக்களின் இந்த படத்தை பார்த்து பாராட்டுவர்கள் நிறைவுடன்
அதையெல்லாம் தாண்டி ஒரு வாழ்வியல் படத்தை அனுபவிக்கவும் நாயாகி மீனாவின் வாழ்வை எப்படி இருந்தால் நல்லா இருக்கும். என்பதை முடிவை நீங்களே எடுங்கள் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்!
மீனாவுக்கும் அன்னா பென், பாண்டிக்கும் சூரி திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்நிலையில் மீனாவுக்கு பேய் பிடித்துவிடுகிறது.
பேயை விரட்ட அவரை சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார்கள். அப்பொழுது பாண்டியும் உடன் செல்கிறார். சாமியாரிடம் செல்லும் பயணம் தான் படத்தின் முதுகெலும்பாக இருக்கிறது.
மீனாவுக்கு நிஜமாகவே பேய் பிடித்ததா இல்லை அவர் திருமணத்திற்கு எதிராக இப்படியொரு அமைதியான போராட்டம் நடத்துகிறாரா?
இருந்தாலும் சாதி பாகுபாடு, பாரம்பரியம் ஆகிய விஷயத்தில் படம் தனித்து தெரிகிறது.
பாண்டியாகவே வாழ்ந்திருக்கிறார் சூரி. மீனா ஒரு காதல் பாடலை முணுமுணுப்பதை கேட்டு அத்தனை நாள் வரை அடக்கி வைத்திருந்து அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் சூரி.
நடிப்பை சூரி சூப்பராக வெளிப்படுத்திருக்கிறார். மீனாவாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அன்னா பென்.
பேசாமலேயே தன்னை பற்றி அனைவரையும் பேச வைத்திருக்கிறார். அனைத்து கலைஞர்களையும் சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் வினோத்ராஜ்.
ஒரு குடும்பத்தில் நடக்கும் உண்மை கதைக்களம் கொண்ட படம் கொட்டுக்காளி. பார்ப்பவர்களை யோசிக்க சிந்திக்க வைக்கும் படம் . இந்த படத்தை தயாரித்த சிவகார்த்திகேயனை உண்மையில் பாராட்டியே ஆக வேண்டும்.

மொத்தத்தில் !!

இந்த
‘‘கொட்டுக்காளி ’’இந்தாண்டின் சிறந்த கல்ட் கிளாஸிக் திரைப்படமாக இருக்கும் என விமர்சகர்கள் கூறுக்கிறனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *