‘ஹரா’ திரைப்பட விமர்சனம்
நடிகர்கள் : – மோகன், அனுமோல், யோகிபாபு,
கெளஷிக் ராம், பவுடர் நாயகி அனித்ரா நாயர், சாருஹாசன்,மோட்டை
ராஜேந்திரன்,
சுரேஷ் மேனன்,
வனிதா விஜயகுமார்,
மேம் கோபி, சிங்கம் புலி, சந்தோஷ் பிரபாகரன், சாம்ஸ், சுவாமி.
விஜய் ஸ்ரீ ஜி
டைரக்ஷன் :-
விஜய் ஸ்ரீ ஜி
மியூசிக் :-ரஷாத் அர்வின்.
ஒளிப்பதிவு:-பிரகத்
முனுசாமி,
மனோ பிரபாகரன்,
மோகன் குமார், படத்தொகுப்பு:- குணா,
சண்டை பயிற்சி:-
விஜய் ஸ்ரீ ஜி
தயாரிப்பாளர் :- கோவை எஸ்.பி.மோகன்ராஜ்.
மகளின் தற்கொலைக்கான
உண்மையான காரணத்தை தேடிச் செல்லும் கதாநாயகன்
மோகனுக்கு சமூகத்தில் நடக்கும் அதிர்ச்சிகரமான குற்ற செயல் பற்றியும், அதன்
பின்னணி பற்றியும் தெரிய வருகிறது. அதனை நோக்கி
பயணிககிறார், தனது மகளின் மரணத்திற்கும் அவர்களுக்கும் தொடர்பு
இருப்பதை கண்டுபிடிக்கிறார். மகளின் மரணத்திற்கு மட்டும் இன்றி
சமூகத்திற்காகவும் அவர்களை களை எடுக்க களத்தில் இறங்கும்
மோகன், அவர்களுக்கு எத்தகைய தண்டனை கொடுக்கிறார், அவர்கள்
யார்?, என்ன செய்தார்கள்? என்பதை சொல்வது தான் ‘ஹரா’.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் மோகன்,
தனது வயதுக்கு ஏற்ற வேடத்தில் நியாயம் சேர்க்கும் வகையில்
நடித்திருக்கிறார். ஆனால், படம் முழுவதும் அவ்வளவு பெரிய
தாடியுடன் அவர் இருப்பது ஏன்? என்று தான் தெரியவில்லை.