லாக்டவுன் சம்பவங்களை மையப்படுத்தி
எழுதப்பட்ட கேபிள் சங்கரின் ‘லாக்டவுன்
கதைகள்’ புத்தத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள
அந்தாலஜி தொடரின் முதல் எப்பிசோடான இதில், மதியழகன்,
ஏஞ்சலினா என இரண்டு பேர் மட்டுமே நடித்திருந்தாலும்,
அவர்களுடைய உரையால், காதல், காமம், மோதல் என
அனைத்தையும் மிக இயல்பாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
ஆணும், பெண்னும் பழகுவதை
மிக எதார்த்தமாக காட்டியிருக்கும்
இயக்குநர் கேபிள் சங்கர் அவர்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் கதாபாத்திரங்களாக
பயணிக்க வைத்திருப்பதோடு, இருவருக்கும் இடையே
ஏற்படும்
நெருக்கத்தையும், காமத்தையும் எந்தவித நெருடல் இல்லாமல் ஒரு
கவிதையை போல் காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
முரளி ஸ்ரீதரின் ஒளிப்பதிவு, ஷமந்த் நாக்கின் இசை மற்றும்
அபிஷேக் க்ரீம் படத்தொகுப்பு
அனைத்தும் அளவாக பயணித்து பலம் சேர்த்திருக்கிறது.