மூன் பிக்சர்ஸ் தயாரித்து ஆதம்பாவா இயக்கி இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்து வெளியாயிருக்கும் படம்
“உயிர் தமிழுக்கு”
சாந்தினி ஸ்ரீதரன், இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், ஆனந்தராஜ், சரவண சக்தி, மகாநதி சங்கர், சுப்பிரமணியம் சிவா, கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை வித்யாசாகர்
சென்னையில் ஒருநாள் அதிகாலையில் முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும்,
முன்னாள் அமைச்சருமான ஆனந்தராஜ் மர்மான முறையில் மர்மநபர்களால் கொல்லப்படுகிறார்.
அந்த காட்சியை திடீரென இறந்த துக்கம் வருகிறது.அவரின் மகளான தமிழ்ச்செல்வி யை காதலிக்கும் எதிர்க்கட்சியான
புரட்சிகர மக்கள் முன்னணி கழகத்தைச் சேர்ந்த மாவட்ட
செயலாளர் அமீர் தான் இந்த கொலையை செய்தார். என குற்றம் சாட்டப்படுகிறது.
இதனால் தமிழ்ச்செல்வி அமீரை வெறுக்கிறார். இறுதியாக அமீர் தன் மீதான கொலைப்பழியை நீக்கி தமிழ்ச்செல்வி யோடு எப்படி சேர்ந்தார். என்பதே இப்படத்தின் கதையாகும்.
கேபிள் டிவி நடத்தும் பாண்டியன் அமீர், தமிழ் செல்வி மீது தீவிர ஏற்படும் காதலால்
அரசியலுக்குள் வருகிறார். காதலிக்காக அரசியல் செய்வது மட்டுமல்லாமல்
அவருக்காக கண்டன பொதுக்கூட்டம், நன்றி அறிவிப்பு கூட்டம் என அனைத்தையும் நடத்துகிறார்.
ஹீரோயின் தமிழ்ச்செல்வி நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழுக்கு மீண்டும்
வந்துள்ளார். முதல் பாதி காதல் காட்சிகளில் அழகாக நடித்துள்ளார்.
ஆனால் இரண்டாம் பாதியில் நடிப்பில் நிதானமா தவிர்த்து
இவர் நடித்துள்ளார்.
ஆனந்தராஜ், ராஜ் கபூர், இமான் அண்ணாச்சி ஆகியோர் பேசும் வசனங்கள் ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கிறது.
தயாரிப்பாளர் ஆதம்பாவா இப்படத்தை இயக்கியுள்ளார்.
மெரினா பீச்சில்
அரசுடமையாக்கப்பட்ட தலைவர்கள் சமாதி, இவிஎம் மிஷினால் ஆட்சி செய்யலாம் என நினைப்பது, ஆன்மீக
அரசியல், நடிகர்களின் அரசியல் வருகை ஆகியவை தொடர்பான வசனங்கள் ஆங்காங்கே ரசிக்க வைக்கிறது.
இசையமைப்பாளர் வித்யாசாகர் சிறப்பாக வழங்க்கியிருக்கிறார்.
மொத்தத்தில்
*அரசியலில் ஒரு காமெடி கலாட்டா!!*