அரண்மனை-4 திரைவிமர்சனம்
குஷ்பு சுந்தர். ACS.அருண்குமார்.தயாரித்து சுந்தர் சி.இயக்கி வெளிவந்திருக்கும் படம் அரண்மனை-4
சுந்தர்.C தமன்னா பாட்டியா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், ராமச்சந்திரா ராஜு, யோகிபாபு,கோவை சரளா, VTV.கணேஷ், K.S.ரவிகுமார், ஜெய பிரகாஷ், டெல்லி கணேஷ், ராஜேந்திரன்,
சிங்கம்புலி,தேவாநாதா, மற்றும் பலர் நடித்துள்ளார்
இசை .ஹப்ஹாப் தமிழா.ஆதி
குஷ்பு சுந்தர். ACS.அருண்குமார்.தயாரித்து சுந்தர் சி.இயக்கி வெளிவந்திருக்கும் படம் அரண்மனை-4 கிராமம் ஒன்றில் இருக்கும் பழைய அரண்மனையில் சில பராமரிப்பு பணிகளை செய்து அதை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபடும் சந்தோஷ் பிரதாப், தனது மனைவி தமன்னா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அந்த அரண்மனையில் வசித்து வருகிறார். அரண்மனையின் உரிமையாளரான ஜமீன்தார் டெல்லி கணேஷ், அவரது பேத்தி ராஷி கண்ணா ஆகியோரும் அதே இடத்தில் வசிக்கிறார்கள். இதற்கிடையே, திடீரென்று ஒரு நாள் தீய சக்தி ஒன்றின் மூலம் சந்தோஷ் பிரதாப் கொல்லப்படுகிறார். அவர் ரூபத்தில் அந்த அரண்மனைக்குள் செல்லும் அந்த தீய சக்தி அவரது குழந்தைகளை கொலை செய்ய முயற்சிக்கிறது. அதனிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்ற போராடும்தாய் தமன்னா கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.ஆனால், அவரது மரணத்தை தற்கொலையாக காவல்துறை பதிவு செய்கிறது.விஷயம் அறிந்து அந்த கிராமத்துக்கு வரும் தமன்னாவின் அண்ணன் சுந்தர்.சிதனது தங்கை மற்றும் மாப்பிள்ளை மரணத்திற்கு பின்னணியில் மர்மங்கள் நிறைந்திருப்பதை அறிந்துக் கொள்வதோடு, அதை கண்டுபிடிக்கும்முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த சமயத்தில், கிராமத்தை சேர்ந்த மேலும் சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகளுக்கான காரணத்தை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் சுந்தர்.சி-க்கு பாக் என்ற தீய சக்தி பற்றி தெரிய வருவதோடு, அந்த பாக் தீய சக்தி, தனது தங்கை, மாப்பிள்ளை மற்றும் சிலbகிராம மக்கள் வரிசையில் தனது தங்கையின் மகளையும் கொலை செய்ய முயற்சிப்பதையும்அறிந்துக் கொள்கிறார். அதனிடம் இருந்து சிறுமியை காப்பாற்ற
போராடும் சுந்தர்.சி, அந்த தீய சக்தியை எப்படி அழிக்கிறார்?, பாக் தீய சக்தியின் பின்னணி என்ன?, அது எதற்காக குறிப்பிட்ட மனிதர்களை கொலை செய்ய முயற்சிக்கிறது? போன்ற
கேள்விகளுக்கான பதில்கள் தான் இந்த‘அரண்மனை 4’. படத்தின் கதை
அரண்மனை வரிசையில் வெளியான படங்களின் வழக்கமான
பாணியில் கதை நகர்ந்தாலும், படம் முழுவதும் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட
அனைத்து தரப்பினரும் கொண்டாடும் பொழுதுபோக்கு அம்சங்கள்
நிறைந்திருக்கிறது. குறிப்பாக வடநாட்டு
மக்களை அச்சுறுத்தும் பாக் என்ற தீய சக்தியை மையமாக கொண்டு
வடிவமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை ஏற்கனவே வெளியான மூன்று அரண்மனை
படங்களில் இருந்து இதை சற்று வித்தியாசப்படுத்தியும் காட்டுகிறது.
நாயகனாக நடித்திருக்கும் சுந்தர்.சி, தான் ஏற்ற வேடத்திற்கு
நியாயம் சேர்க்கும் வகையில்
நடித்திருக்கிறார். ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை
காட்சிகளில் வழக்கம் போல் வலம் வரும் சுந்தர்.சி, காதல் காட்சிகளில்
அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை. காரணம், காதல் காட்சிகளே படத்தில் இல்லை.
இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடித்திருக்கும் தமன்னா, அழுகை, பதற்றம், கோபம், ஆக்ரோஷம், பிள்ளைகள் பாசம்
அனைத்துவிதமான உணர்ச்சிகளையும் ஒரே
காட்சியில் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். தாயாகவும்,
பேயாகவும் தனது பணியை நேர்த்தியாக தமன்னா செய்திருக்கிறார்.
படத்தின் கதாநாயகியாக இருந்தாலும் ராஷி கண்ணாவுக்கு அதற்கான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை.
சரி ஒரு பாடலாவது இருக்கும் என்றால்
அம்மணிக்கு அதுவும் கிடைக்கவில்லை.
திடீரென்று பளிச்சென்று வருபவர், திடீரென்று மறைந்து விடுகிறார்.
இறுதிக் காட்சியிலாவது அவரை சாமியாட்டம் ஆட வைப்பார்களா?, என்று
எதிர்பார்த்தால் அங்கேயும் ஏமாற்றம்
தான். படம் முடிந்து டைடில் கார்டு போடும்
போது இடம் பெறும் புரோமோ பாடல் ராஷி கண்னா ஆர்மிக்கு
ஆறுதல் அளிக்கிறது.
கிராமம் ஒன்றில் இருக்கும் பழைய அரண்மனையில் சில பராமரிப்பு பணிகளை செய்து அதை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபடும் சந்தோஷ் பிரதாப், தனது மனைவி தமன்னா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அந்த அரண்மனையில் வசித்து வருகிறார். அரண்மனையின் உரிமையாளரான ஜமீன்தார் டெல்லி கணேஷ், அவரது பேத்தி ராஷி கண்ணா ஆகியோரும் அதே இடத்தில் வசிக்கிறார்கள்.
இதற்கிடையே, திடீரென்று ஒரு நாள் தீய சக்தி ஒன்றின் மூலம் சந்தோஷ் பிரதாப் கொல்லப்படுகிறார். அவர் ரூபத்தில் அந்த
அரண்மனைக்குள் செல்லும் அந்த தீய சக்தி
அவரது குழந்தைகளை கொலை செய்ய முயற்சிக்கிறது. அதனிடம் இருந்து
குழந்தைகளை காப்பாற்ற போராடும்
தாய் தமன்னா கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.
ஆனால், அவரது மரணத்தை தற்கொலையாக காவல்துறை பதிவு செய்கிறது.
விஷயம் அறிந்து அந்த கிராமத்துக்கு வரும் தமன்னாவின்
அண்ணன் சுந்தர்.சி தனது தங்கை மற்றும் மாப்பிள்ளை மரணத்திற்கு பின்னணியில்
மர்மங்கள் நிறைந்திருப்பதை அறிந்துக் கொள்வதோடு, அதை கண்டுபிடிக்கும்
முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த சமயத்தில், கிராமத்தை
சேர்ந்த மேலும் சிலர் கொலை செய்யப்படுகிறார்கள்.
இந்த கொலைகளுக்கான காரணத்தை
கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் சுந்தர்.சி-க்கு
பாக் என்ற தீய சக்தி பற்றி தெரிய வருவதோடு, அந்த பாக்
தீய சக்தி, தனது தங்கை, மாப்பிள்ளை மற்றும் சில கிராம மக்கள்
வரிசையில் தனது தங்கையின் மகளையும் கொலை செய்ய முயற்சிப்பதையும் அறிந்துக் கொள்கிறார்.
அதனிடம் இருந்து சிறுமியை காப்பாற்ற போராடும் சுந்தர்.சி,
அந்த தீய சக்தியை எப்படி அழிக்கிறார்?, பாக் தீய சக்தியின் பின்னணி
என்ன?, அது எதற்காக குறிப்பிட்ட மனிதர்களை கொலை செய்ய முயற்சிக்கிறது? போன்ற
கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அரண்மனை 4’
அரண்மனை வரிசையில் வெளியான படங்களின் வழக்கமான பாணியில் கதை
நகர்ந்தாலும், படம் முழுவதும் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கொண்டாடும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கிறது.
குறிப்பாக வடநாட்டு மக்களை அச்சுறுத்தும் பாக் என்ற தீய சக்தியை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை
ஏற்கனவே வெளியான மூன்று அரண்மனை படங்களில் இருந்து இதை சற்று வித்தியாசப்படுத்தியும் காட்டுகிறது.
நாயகனாக நடித்திருக்கும் சுந்தர்.சி, தான் ஏற்ற வேடத்திற்கு
நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். ஆக்ஷன் மற்றும்
நகைச்சுவை காட்சிகளில் வழக்கம் போல் வலம் வரும்
சுந்தர்.சி, காதல் காட்சிகளில் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை. காரணம், காதல் காட்சிகளே படத்தில் இல்லை.
இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடித்திருக்கும் தமன்னா, அழுகை, பதற்றம், கோபம், ஆக்ரோஷம்,
பிள்ளைகள் பாசம் அனைத்துவிதமான உணர்ச்சிகளையும் ஒரே காட்சியில் அழகாக
வெளிப்படுத்தியிருக்கிறார். தாயாகவும், பேயாகவும் தனது பணியை நேர்த்தியாக செய்திருக்கிறார்.
படத்தின் கதாநாயகியாக இருந்தாலும் ராஷி கண்ணாவுக்கு அதற்கான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை.
சரி ஒரு பாடலாவது இருக்கும் என்றால் அம்மணிக்கு அதுவும் கிடைக்கவில்லை.
திடீரென்று பளிச்சென்று வருபவர், திடீரென்று மறைந்து விடுகிறார்.
இறுதிக் காட்சியிலாவது அவரை சாமியாட்டம் ஆட வைப்பார்களா?, என்று எதிர்பார்த்தால்
அங்கேயும் ஏமாற்றம் தான். படம் முடிந்து டைடில் கார்டு போடும் போது இடம் பெறும் புரோமோ பாடல் ராஷி கண்னா ஆர்மிக்கு ஆறுதல் அளிக்கிறது.VFX சவுண்ட் சிஸ்டம் அருமை DOP கேமரா ஒளிப்பதிவு அருமை. கடைசியில் நடனம் அருமை அமைத்துள்ளார்.
அதுல நடிகை சிம்ரன், குஷ்பு, நடனம் சிறப்பு. ஆர்ட் டைரக்டர் வொர்க் சிறப்பாக அமைப்பு அவர்களை பாராட்டப் படவேண்டும். அவ்வளவு உழைத்திருக்கிறார்கள்.