ரிபெல் திரை விமர்சனம்!!
ஸ்டுடியோ கிரீன் – கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து ,
நிகேஷ் ஆர்.எஸ் இயக்கி ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துவெளி வந்திருக்கும் படம் ரிபெல் !
ஜி.வி.பிரகாஷ் குமார், மமிதா பைஜு, சுப்ரமணிய சிவா, கருணாஸ், கல்லுாரி வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி, வெங்கிடேஷ் வி.பி., ஷாலுரஹிம் மற்றும் பலர் நடித்து உள்ளனர் !
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்!
மூணார் பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டங்களில் கூலிகளாக பணியாற்றி வரும் தமிழர்கள் தங்களைப் போன்று தங்களது பிள்ளைகளும் கஷ்ட்டப்படக்கூடாது, அவர்களின் வாழ்க்கை நிலை மாற வேண்டும் என்றால் அவர்கள் எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என்று விரும்புகிறார்கள் !
அதன்படி அவர்களது பிள்ளைகளும் படித்துவிட்டால் நம் வாழ்க்கை மாறிவிடும் என்று நம்புவதோடு, பட்டப்படிப்பு படிப்பதற்காக பாலக்காட்டில் உள்ள அரசினர் கல்லூரிக்கு செல்கிறார்கள்.!
ஆனால், அந்த கல்லூரியில் சக மாணவர்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எதுவும் தமிழ் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. அதேபோல், அங்கிருக்கும் இரண்டு மாணவர் அமைப்புகள் தமிழ் மாணவர்களை ராக்கிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்துவதோடு, அவர்களை அடக்கி ஆளும் போக்கை கடைப்பிடிக்கிறார்கள் !
இவற்றை சகித்துக்கொண்டு எப்படியாவது படிப்பை முடித்துவிட வேண்டும், என்று அடங்கிப் போகும் தமிழ் மாணவர்கள், ஒரு கட்டத்தில் அமைதி இழந்து நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் தலைமையில் புரட்சியில் ஈடுபடுகிறார்கள்.!
அவர்களுடைய புரட்சி தமிழ் மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்ததா? அல்லது படிக்க வேண்டும் என்ற அவர்களது கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்ததா? என்பதை இப் படத்தின் கதை !
கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் நடிப்பு புரட்சிகரமான நடித்து உள்ளர் அருமை !
கதாநாயகி மமிதா பைஜூ அழகாவும் போதுமான நடிப்பையும் நடித்து உள்ளா பாராட்டுக்கள் !.
கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கும் கருணாஸ், ஜி.வி.பிரகாஷ் குமாரின் தந்தையாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, இருவரும் படிப்பு மட்டுமே ஒருவரின் வாழ்க்கை நிலையை மாற்றும், அதைப்பெறுவதற்கு எத்தகைய இன்னல்களையும் தாங்கி கொள்ளலாம் என்பதை வலியுறுத்தும் கதாபாத்திரங்களாக வலம் வருகிறார்கள்.!
தமிழ் மாணவர்களாக நடித்திருக்கும் ‘கல்லூரி’ வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி ஆகியோர் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.!
மலையாள மாணவர்கள் அமைப்பின் தலைவர்களாக நடித்திருக்கும் வெங்கடேஷ் மற்றும் ஷலுரஹீம் அடக்குமுறையின் வன்மத்தை தங்களது நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் !
ஜி.வி.பிரகாஷ்குமார், இசையும்,
பாடல்கள் சூப்பர்.!
80-ம் காலக்கட்டத்தில் நடக்கும் கதையை அதிகம் மெனக்கெடலுடன் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.!
மொத்தத்தில்,
*இந்த ‘ரெபல்’ புரட்சியில் உச்சகட்டம் *!!