*பர்த் மார்க் திரை விமர்சனம்*

Share the post

*பர்த் மார்க் திரை விமர்சனம்*

ஸ்ரீராம் சிவராமன், விக்ரம் ஸ்ரீதரன் தயாரித்து : விக்ரம் ஸ்ரீதரன் இயக்கி வெளி வந்திருக்கும் படம் பர்த் மார்க் .

ஷபீர், மிர்னா, டீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி ஆர் வரலட்சுமி மற்றும் பலர் நடித்து உள்ளனர்

ஒளிப்பதிவு: உதய் தங்கவேல்

இசை: விஷால் சந்திரசேகர்

கணவன் மனைவியாக வருகின்றனர் ஷபீரும் மிர்னாவும்.. நிறை மாத கர்ப்பிணியான மிர்னாவிற்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக கேரளா அருகேயுள்ள ஒரு மலைகிராமத்திற்கு மிர்னாவை அழைத்து வருகிறார் ஷபீர்.

இயற்கை முறையில் மிர்னாவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பிறக்கப்போகும் குழந்தையை கொல்ல வேண்டும் என்று நினைக்கிறார் ஷபீர்.

ஏன் அவர் அப்படி நினைக்க வேண்டும்.? குழந்தை நல்ல முறையில் பிறந்ததா.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

சர்பேட்டா பரம்பரை, தி ரோட் உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பின் முத்திரையை நிரூபித்த நாயகன் ஷபீர், இப்படத்திலும் அதே திறமையை நிரூபித்திருக்கிறார்.

ஒவ்வொரு கட்டத்திலும், தனது இளம் வாழ்க்கையில் நடந்தவற்றை எண்ணி ஏங்கும் காட்சியாக இருக்கட்டும், க்ளைமாக்ஸ் காட்சியில் குழந்தைக்காக ஏங்கி அழும் காட்சியாக இருக்கட்டும் என தனக்கான நடிப்பை மிக சிறப்பாகவே கொடுத்திருக்கிறார் ஷபீர்.

படத்தின் மிகப்பெரும் பில்லரே மிர்னா தான். 7 மாத கர்ப்பிணியாக ஆரம்பித்து குழந்தை பிறக்கும் வரையிலான காலகட்டத்தை, ஒரு கர்ப்பிணி என்ன மாதிரியான வலியை அனுபவிப்பார் என்பதை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் மிர்னா.

அந்த வலியை நமக்குள் கடத்தி நம் கண்களில் ஈரத்தை கொண்டு வர வைத்துவிட்டார் மிர்னா. இதுவரை அவர் நடித்த படங்களில் இப்படம் ஒரு அவர் நடிப்பின் உச்சம் என்றே கூறலாம்.

விஷால் சந்திர சேகரின் இசையில் பின்னணி இசை உள் மனதிற்கான நெருடல் தான்.

உதய் தங்கவேலின் ஒளிப்பதிவு பளீச்…

ஒரு கர்ப்பிணியின் வலியையும் இயற்கை முறையில் சுகப்பிரசவம் அடையும் ஒரு சில வைத்தியத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியதற்காக இயக்குனரை வெகுவாகவே பாராட்டலாம்.

மொத்தத்தில்

பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *