ரணம் திரை விமர்சனம்!!

Share the post

ரணம் திரை விமர்சனம்

மிதுன் மித்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் மது நாகராஜன் தயாரித்து
ஷெரீப் இயக்கி வெளிவந்திருக்கும் படம் ரணம்

வைபவ், நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, ப்ரனீதி, டார்லிங் மதன் மற்றும் பலர் நடித்து உள்ளனர்

பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிவு
அரோல் கரோலி இசை
.

உதவி இயக்குனராக இருக்கும் வைபவ், தன்னுடன் பணிபுரிந்த சரஸ் மேனனுடன் காதல் புரிகிறார்.

இருதலை காதல் ஆனதும் இருவருக்கும் திருமணம் ஆகிறது.

திருமணம் ஆனவுடன் விபத்து ஏற்பட, காதல் மனைவி சரஸ் உயிரிழக்கிறார்.

விபத்தில், இரண்டு வருட நினைவை இழக்கிறார் வைபவ்.

வருடங்கள் உருண்டோட, போலீஸூக்கு தன்னால் இயன்ற உதவியை அவ்வப்போது செய்து வருகிறார் வைபவ்.

வரைபட கலைஞராகவும் இருக்கும் வைபவ், அடையாளம் காண முடியாத பிணத்தின் முகத்தை தத்ரூபமாக வரைந்து கொடுத்து அந்த வழக்கை முடித்து வைக்க காவல் துறைக்கு உதவிகரமாக இருக்கிறார் வைபவ்.

இந்த சூழலில் கைகள், கால்கள், உடம்பு என உடலின் பாகங்கள் கருகிய நிலையில் சென்னையில் ஆங்காங்கே கண்டெடுக்கப்படுகின்றன.

விசாரணை துவங்குகிறது. உடலின் பாகங்கள் வேறு வேறு உடலில் இருந்து எடுக்கப்பட்டது என்று அறிந்தவுடன் போலீஸூக்கு கூடுதல் அதிர்ச்சி. இதனைத் தொடர்ந்து வைபவ் இந்த வழக்கிற்கு உதவி புரிகிறார்.

வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்த இன்ஸ்பெக்டர் ஒருநாள் மாயமாகிவிட, கதை சூடு பிடிக்கிறது.

வழக்கை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் தன்யா ஹோப்.

வழக்கை விசாரிக்க ஆரம்பித்ததும், நாளுக்கு நாள் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இறுதியில் சம்பவங்களை செய்தது யார்.?? வைபவிற்கு இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா.?? நந்திதா எப்படி இதற்குள் வந்தார்.??? என்பதே படத்தின் மீதிக் கதை.

இப்படியொரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காக நாயகன் வைபவிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்ளலாம். படத்தின் மூலக்கருவை ஏற்றுக் கொண்டு, பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் வைபவ் நடித்தது பெரும் பாராட்டுதலுக்குறிய ஒன்றாகும்.

சால்ட் & பெப்பர் லுக்கில் கதைக்கேற்ற கதாநாயகனாக தோன்றி அசத்தியிருக்கிறார் நாயகன் வைபவ். எமோஷன்ஸ் காட்சிகளில் ஒரு விதமான அப்பாவித்தனமான நடிப்பைக் கொடுத்து அனைவரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறார் நாயகன் வைபவ்.

இப்படத்தில் இந்த கதாபாத்திரத்தில் இவர் தான் பொருத்தமானவர் என கச்சிதமாக தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர்.

மூன்று கதாநாயகிகளுக்கும் சரிசமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்திற்கு வலிமை.

இன்ஸ்பெக்டராக விறுவிறுப்பை ஏற்றியிருந்தார் தன்யா ஹோப். கதையின் வலுவைப் புரிந்து கொண்டு கதாபாத்திரத்தை வலிமையாகவே கையாண்டிருக்கிறார் நாயகி நந்திதா.

தனது மகளை இழந்து அழும் காட்சிகளில் படம் பார்த்தவரக்ள் அனைவரின் கண்களையும் குளமாக்கி விட்டார். நாயகி சரஸ் மேனன் அழகு தேவதையாக வந்து காட்சிகளை அழகுபடுத்தியிருக்கிறார்

வேகமாக பயணிக்கும் திரைக்கதையானது, இரண்டாம் பாதியில் சற்று தொய்வடைவது சற்று சலிப்படைய வைத்திருக்கிறது. கதைக்கான முக்கியத்துவம் என்றாலும், அதை இன்னும் கூர்மையாகவே கவனித்து பயணிக்க வைத்திருக்கலாம்.

யாரும் தொடாத, தொடத் தயங்கும் கதையை மிகவும் கவனமாகவே கையாண்டு அதில் வென்றும் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

அரோல் கரோலியின் பின்னணி இசை மிரட்டலைக் கொடுத்து படத்தின் ஓட்டத்திற்கு நன்றாகவே ஈடுகொடுத்திருக்கிறது.

பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிவு படத்தில் பெரிதாகவே பேசப்பட்டிருக்கிறது. சென்னையில் இதுவரை காணாத லொகேஷனாக சென்று படத்தினை எடுத்திருப்பது கூடுதல் பலம்.

மொத்தத்தில்

*ரணம் – சஸ்பென்ஸ், க்ரைம் கதை கலம் தில் ,சொல்லப்பட்டிருக்கிறது*

..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *