
மறைமலை நகரில் உள்ள காம்ஸ்டார் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு, நிறுவனத்தின் செலவில் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து முதல் கட்ட தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
மறைமலைநகர் நகராட்சி ஆணையர் திரு. நவேந்திரன், செங்கல்பட்டு வட்டாட்சியர் திரு. ராஜேந்திரன் இருவரும் முகாமை துவக்கிவைத்தனர். இவர்களுடன் நிறுவனத்தின் CEO, திரு. சத் மோகன் குப்தா மற்றும் நிறுவனத்தின் அதிகாரிகள் அருகில் உள்ளனர். இதன் அடுத்த கட்டமாக இந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளனர்.