கர்ணன் 60”
புதுயுகம் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் கர்ணன் 60… நமது பாரத தேசத்தின் பொக்கிஷமான நடிகர் திலகம் நடித்த கர்ணன் காவியம் பொங்கல் அன்று 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு கர்ணன் 60 எனும் நடிகர் திலகத்தின் சிறப்பு நிகழ்ச்சியினை ரசிகர்கள் ஒன்று திரண்டு பங்கேற்று உள்ளனர். இந்த நிகழ்ச்சி வரும் பொங்கல் ஜனவரி 15 மற்றும் மாட்டுப் பொங்கல் 16 – ம் தேதி காலை10.30 மணிக்கு இரண்டு பாகங்களாக புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஒய் ஜி மகேந்திரா, முனைவர் டாக்டர் மருதுமோகன், அண்ணாதுரை கண்ணதாசன், எஸ்.என். சுரேந்தர், எழுத்தாளர் ஜகாதா, கலைப்புலி சேகரன், நடிகர் சுரேஷ், தென்காசி கணேசன் பி .எச். டி, சிவாஜி ரவி, முரளி ஸ்ரீநிவாஸ், ராகவேந்திரா ஆகியோர் கர்ணன் படத்தின் பெருமைகளை பற்றியும் டிஜிட்டல் மறு வெளியீட்டில் மாபெரும் வெற்றி பெற்றதைப் பற்றியும் இடையிடையே படத்தின் காட்சி மற்றும் பாடல்கள் உடன் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலை பாடகர் முகேஷ் பாட திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்கள் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து தொகுப்பாளர் ஆர்த்தி தொகுத்து வழங்கினார்.