எவ்வளவோ தொழில் நுட்பங்களும், நாகரீக மாற்றங்களும் இந்த உலகை இயக்கினாலும் , இயற்கை சக்திகளான நீரும், நிலமும் தான் நாம் வாழ அடிப்படை ஆதாரமாக இருக்கின்றது.
தொழில் நுட்பங்களை உருவாக்க முடிந்த நம்மால், நீரை உருவாக்க முடிவதில்லை. ஆனால் நம்மால் நீரையும், நீர் நிலைகளைகளையும் பாதுக்காக்க முடியும் என்று பல மாவட்ட இயற்கை தன்னார்வல குழுக்களை இணைத்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நம்மால் முடியும் என்ற நிகழ்ச்சி மூலமாக சிறப்பாக நீருபித்து கொண்டு வருகிறது.
தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டம் தோறும் உள்ள நீர் நிலைகளான, ஏரி,குளங்கள் மற்றும் நீர் வரத்து கால்வாய்களை பராமரித்தல்,தூர்வாருதல்,ஆக்ரமிப்பு அகற்றுதல் போன்ற களப்பணிகளையும்,மக்களிடையே விழிப்புணர்ச்சியையும் வாரம்தோறும் செய்து கொண்டு வருகிறது. குறுங்காடுகள் வளர்ப்பு, கிராமப்புற மாணவர்கள் கல்வி வளர்ச்சி உதவிகளையும் இந்த நிகழ்ச்சி மூலமாக செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஜெயம் அருள் தயாரித்து ,தொகுத்து வழங்குகிறார்
நம்மால் முடியும் நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கும், அதன் மறுஒளிபரப்பு ஞாயிறு காலை 10:30 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.