டங்கி’ திரை விமர்சனம்
ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ்
தயாரித்து ராஜ்குமார் ஹிரானி இயக்கி வெளி வந்திருக்கும் படம் டங்கி !

இசை: ப்ரீதம் மற்றும் அமன் பந்த்
ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கவுஷல், போமன் இரானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இங்கிலாந்து நாட்டில் மனித வளம் குறைந்ததால், பிற நாட்டு மக்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்.
இதை பயன்படுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பலர் இங்கிலாந்து நாட்டுக்கு வேலைக்காக செல்கிறார்கள்.
அந்த வகையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த டாப்ஸி பண்ணு மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் பொருளாதார பிரச்சனையில் இருந்து மீள்வதற்காக இங்கிலாந்து நாட்டுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள்.
ஆனால், அவர்களிடம் அதற்கான தகுதி இல்லாததால் அவர்களுக்கு விசா மறுக்கப்படுகிறது.
இதனால், போலியான முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறும் டாப்ஸி மற்றும் அவரது நண்பர்களை முன்னாள் ராணுவ வீரரான ஷாருக்கான், டங்கி வழி என்று சொல்லக்கூடிய சட்டவிரோதமான முறையில் இங்கிலாந்து நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
அப்படி செல்லும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன?, அவர்கள் இங்கிலாந்து நாட்டுக்கு சென்றார்களா? இல்லையா? என்பதை இப் படத்தின் கதை.!
ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கவுஷல், போமன் இரானி அனைவரும் நடிப்பும் சிறப்பு!
ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கவுஷல், போமன் இரானி இறுதிக் காட்சிகளில் அறியாமலே நாம் கண்களின் நீர் வர செதுக்கியிருக்கிறார்
இயக்குனர் !
வசனமும் சிறப்பாக உள்ளது !
ப்ரீதம் மற்றும் அமன் பந்த் இசை உயிரோட்டம் இருந்தது ! பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். அமன் பந்தின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
சி. கே.முரளீதரன் மனுஷ் நந்தன் அமித் ராய் இவர் ஒளிப்பதிவு சிறப்பு !
ராஜ்குமார் ஹிரானி படதொகுப்பு அருமை!
மொத்தத்தில்
Dunki powerful !
.