கண்ணகிதிரை விமர்சனம்!!
ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் இ5 என்டர்டெயின்மென்ட்தயாரித்து
யஷ்வந்த் கிஷோர் இயக்கி கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா, மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் நடித்து ஷான் ரஹ்மான் இசையில் வெளிவந்திருக்கும் படம் கண்ணகி.

படத்தில் நான்கு பெண்களின் கதையை காண்பிக்கிறார்கள். முதல் பெண் அம்மு அபிராமிக்கு நீண்ட நாட்களாகவே திருமணம் நடைபெறாமல் இருக்கிறது.
இதற்கு காரணம் அவர்கள் அம்மா வரும் ஒவ்வொரு மாப்பிள்ளையும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக் கழித்து விடுகிறார்.
இன்னொரு கதையில் ஷாலின் ஜோயா தனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையே இல்லை.
இதனால் இவர் அவருடைய பாய் பிரண்டுடன் லிவிங் டு எதிரில் வாழ்ந்து வருகிறார்.
இன்னொரு பக்கம் கீர்த்தி பாண்டியன் கர்ப்பமாக இருக்கிறார்.
இதை எப்படியாவது கலைக்க வேண்டும் என்று அவரும் அவர் காதலரும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள்.
இன்னொரு கதையில் வித்யா பிரதீப் தன்னுடைய கணவருடன் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
அவர் கணவர் விவாகரத்துக் கொள்கிறார். ஆனால், வித்யா பிரதீப் அவருடன் சேர்ந்து வாழ நினைக்கிறார்.
இப்படி நான்கு பெண்களும் நான்கு வித்தியாசமான வாழ்க்கையில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நான்கு கதையும் ஒரு இடத்தில் சேர்கிறது.
இதில் ஒவ்வொரு பெண்களும் எந்தெந்த பிரச்சனையை சமாளித்தார்கள்.
இறுதியில் என்ன ஆனது? என்பதே இப்படத்தின் கதை.
சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை மையமாக இயக்குனர் எடுத்திருக்கிறார். அறிமுகம் இயக்குனராக இருந்தாலும் முதல் படத்திலேயே கதை சிறப்பாக கொடுத்து இருக்கிறார்.
எதார்த்த காட்சிகளை படத்தில் கொடுத்திருக்கிறார். குறிப்பாக வசனங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
நடிகைகளும் தங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கிளைமாக்ஸ் டீவ்ஸ்ட் சிறப்பு!
காத்திருக்கும் பெண், திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஒரு பெண், காதலனால் கர்ப்பமான பெண், கணவனால் விவாகரத்து விவாகரத்து கேட்டு நிற்கும் பெண் இப்படி நான்கு பெண்களுடைய வலி வேதனையை இயக்குனர் அழகாக காண்பித்து இருக்கிறார்.
மொத்தத்தில்
வெளிச்சத்தில் காண்பித்து இருக்கிறார்.
.