ZEE5 தளம், எதிர்பாராத சென்னை வெள்ளத்தின் காரணமாக ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஒரிஜினல் சீரிஸின் வெளியீட்டை டிசம்பர் 14 ஆம் தேதிக்கு மாற்றியுள்ளது

Share the post

ZEE5 தளம், எதிர்பாராத சென்னை வெள்ளத்தின் காரணமாக ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஒரிஜினல் சீரிஸின் வெளியீட்டை டிசம்பர் 14 ஆம் தேதிக்கு மாற்றியுள்ளது

~ முதலில் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்ட இந்த சீரிஸின், பிரீமியர் தேதி டிசம்பர் 14 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது ~

ZEE5, இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸின் வெளியீட்டு தேதியை மாற்றி அறிவித்துள்ளது. முன்னதாக டிசம்பர் 8ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத வெள்ள பாதிப்பு காரணங்களால் இதன் பிரீமியர் தேதி டிசம்பர் 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சமீபத்திய சென்னை வெள்ளம் பரவலான மின்வெட்டுக்கு வழிவகுத்தது, நகரின் உள்கட்டமைப்பை கணிசமாக பாதித்தது. இதன் விளைவாக, பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை முதன்மைப்படுத்தி, அவர்களுக்கு உகந்த வகையிலான பார்வை அனுபவத்தை உறுதிசெய்யும் வகையில், வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ‘கூச முனிசாமி வீரப்பன்’ தற்போது டிசம்பர் 14 ஆம் தேதி ZEE5 இல் பிரத்தியேகமாக திரையிடப்படவுள்ளது.

இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூச முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை வழங்குகிறது. நிஜ வாழ்க்கைக் காட்சிகள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் வீரப்பனின் புதிரான ஆளுமை மற்றும் அவரது குற்ற பின்னணியைத் தெளிவாகச் சித்தரிக்கிறது. இந்த சீரிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில், அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது. அது மட்டுமல்லாது அவரைச் சுற்றி நடந்த பல நிகழ்வுகள் பற்றிய அறியப்படாத உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

‘கூச முனிசாமி வீரப்பன்’ டிசம்பர் 8 ஆம் தேதி ZEE5 இல் பிரத்தியேகமாகத் திரையிடப்படுகிறது.

ZEE5 பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள்  கொண்ட ஒரு பெரும் திரை  நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது.  பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு  12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5  வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *