*லாக்கர் திரை விமர்சனம்.!!*
நாராயணன் செல்வம்
புரடக்ஷன்ஸ் தயாரித்து ராஜசேகர் யுவராஜ்
இயக்கி விக்னேஷ் சண்முகம் நடித்துவெளிவந்திருக்கும் படம் லாக்கர்.
விக்னேஷ் சண்முகம், நிரஞ்சனி அசோகன், நிவாஸ் ஆதித்தன், சுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் பலர் நடித்து உள்ளார்கள்.
இசை, வைகுந்த் சீனிவாசன்
ஒளிப்பதி
தணிகை தாசன்
படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் கண பார்த்தி.
சொகுசாய் வாழ்வதற்கு ஆசைப்படும் ஹீரோ பலரிடமிருந்தும் நூதன முறையில் பணத்தைக் கொள்ளையடிக்கிறான்.
அவன் வாழ்வில் திடுதிப்பென நுழைந்த அந்த பெண் கொஞ்ச நாளிலேயே காதலியாகிறாள்.
ஒரு கட்டத்தில் அவள், அவன் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதை தெரிந்துகொள்கிறாள்.
அவனை வெறுக்கிறாள். அதனால் அவன் இனி யாரையும் ஏமாற்றக்கூடாது என்ற முடிவுக்கு வருகிறான்.
சில நாட்களிலேயே நிலைமை தலை கீழாகிறது. ஏமாற்றி பணம் சம்பாதிப்பதை வெறுத்த அதே காதலி, அதே வழியில் ஏமாற்றி பணம் சம்பாதிக்க அவனைத் தூண்டுகிறாள். பணம் பறிக்க ஒருவரை குறிவைத்து அதற்காக ஸ்கெட்ச் போட்டும் தருகிறாள்.
ஸ்கெட்ச் போட்டது நிறைவுறியதா ! இல்லையா !
விக்னேஷ் சண்முகம், நிரஞ்சனி அசோகன், நிவாஸ் ஆதித்தன், சுப்பிரமணியன் ஆதித்தன் அனைவரும் கொடுத்த கதாபாத்திரம் எற்று நடித்துள்ளார்கள்.
நாயகனாக விக்னேஷ் சண்முகம். ஷேர் மார்க்கெட் முதலீடு அது இதுவென தனது ஸ்மார்ட்டான அறிவைப் பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணத்தைக் கொள்ளையடிப்பது, அதை வைத்து குடி போதையில் மிதப்பது, காதலுக்காக தன் பாதையிலிருந்து மாறுவது, தான் நம்பியவரின் துரோகத்துக்கு ஆளாவது என தான் ஏற்ற கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்துள்ளார்.
நாயகி நிரஞ்சனா அசோகன் சினிமாவுக்கு புதுவரவு. நடிப்பில் அது தெரியாதபடி இயல்பாக நடித்திருப்பது படத்துக்கு பிளஸ். தங்கக் கட்டிகளை கொள்ளையடிக்க பரபரப்பாக காய் நகர்த்தும் காட்சிகளில் அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் துடிப்பான நடிப்பு ஈர்க்கிறது.
வைகுந்த் சீனிவாசன் இசை படத்து பலம் .
தணிகை தாசன் ஒளிப்பதி சிறப்பு
ஸ்ரீகாந்த் கண பார்த்தி.படத்தொகுப்பு நிறைவாக உள்ளது .
மொத்தத்தில்
*நிறைவாக உள்ளது*!!