பிரபல பின்னணி பாடகர்கள் பங்கேற்கும் கலர்ஸ் தமிழின் ‘கலர்ஸ் சன்டே கொண்டாட்டம்’

Share the post

                                                 பிரபல பின்னணி பாடகர்கள் பங்கேற்கும் கலர்ஸ் தமிழின் ‘கலர்ஸ் சன்டே கொண்டாட்டம்

30 மே ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு கலர்ஸ் தமிழ்

தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்மாலை பொழுதில் மகிழ்ச்சியாக இருங்கள்

———-

சென்னைமே 27, 2021: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மாபெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான கலர்ஸ் சன்டே கொண்டாட்டம், பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில், தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல பின்னணி பாடகர்களை ஒன்றிணைத்து, மாபெரும் இசை மேளா ஒன்றை ஒளிபரப்ப உள்ளது. மே 30-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சியானது பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு நிறைந்த ஒன்றாக அமையும்.

சன்டே கொண்டாட்டம் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:-

பிரபல பாடகர்கள்: இதில் இந்த வாரம் இசை மேளாவாக ஒளிபரப்பாக நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான கிரேஸ் கருணாஸ்வேல்முருகன்கானா பாலாஷர்மிளா மற்றும் நித்யஸ்ரீ ஆகியோர் பங்கேற்று இந்த நிகழ்ச்சிக்கு மெருகூட்ட இருக்கிறார்கள். அவர்கள் பாடும் ஒவ்வொரு பாடல்களும் பார்வையாளர்களின் மனதிற்கு இதமான பாடல்களாக அமைவதோடு அவர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு செல்வது உறுதி.

இசை மேளா: பரத் மற்றும் சஸ்திக்கா ஆகியோர் தொகுத்து வழங்கும் இவ்வார எபிசோடில் ஜொனர் ஸ்வாப் போன்ற சிறப்பு போட்டிகளும் இடம்பெறவுள்ளன.  இதில் பங்கேற்கும் பாடகர்கள் நாட்டுப்புற பாடல்கள் முதல் மெல்லிசை பாடல்கள் வரை விதவிதமான பாடல்களை வெவ்வேறு வகைகளில் பாட இருக்கிறார்கள். இந்த வார சன்டே கொண்டாட்டம் பார்வையாளர்களுக்கு மிகுந்த உற்சாகம் நிறைந்த நிகழ்ச்சியாக இருக்கும்.

இசை பயணம்: இந்நகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபல பின்னணி பாடகர்கள்தங்கள் இசை பயணத்தை பற்றியும், தாங்கள் இந்த இடத்தை அடைய அவர்கள் செய்த தியாகங்கள் குறித்து பகிர்ந்துகொள்வதோடு, அவர்களின் வாழ்க்கையில் நடந்த சில மகிழ்ச்சியான சம்பவங்களையும் பார்வைகளோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும் இந்த இசை மேளாவில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை கவுரவிக்கும் விதமாக அவர் பாடிய பாடல்களை பாடி அவருக்கு அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள்.எனவே 30 மே ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்கட்சியை டியூன் செய்யுங்கள் ‘சன்டே கொண்டாட்டம்’ நிகழ்ச்சியை குடும்பத்துடன் பார்த்து மாலை பொழுதில் மகிழ்ச்சியுடன் இருங்கள்.  அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட்  (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய  அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை  கிடைக்கப்பெறுகிறது.  தங்களது வசதிக்கேற்ப எந்த நேரத்தில் இந்நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள்  VOOT – ஐ டியூன் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *