இந்தியாவும் நியூசிலாந்து அணியும் உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நாளை மோத உள்ள நிலையில் போட்டியை காண சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டார் ரஜினிகாந்த்
இந்தியாவும் நியூசிலாந்து அணியும் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நாளை மோத உள்ளது.
இந்த போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.இந்தப் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளுக்கும் சம பல வாய்ப்பு இருப்பதால் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இது அமையும்.
இந்த நிலையில் அந்த போட்டியை நேரில் பார்ப்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மும்பை புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்.