
ரா ரா சரசுக்கு ரா ரா’ திரை விமர்சனம் !
ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் – ஏ.ஜெயலட்சுமி
தயாரித்து கேசவ் தேபூர் இயக்கி
வெளி வந்திருக்கும் படம் ரா ரா சரசுக்கு ரா ரா’
இப்படத்தில்கார்த்திக், காயத்ரி படேல், ஜெயவாணி, கேபிஒய் பாலா, மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவிவர்மா, அபிஷேக், பெஞ்சமின், சிம்ரன், தீபிகா, காயத்ரி, ஜெஃபி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இசை GKV
பெண்கள் தங்கும் விடுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் இருக்கும் தனக்கு எதிரான ஆதாரத்தை கைப்பற்றுவதோடு, அந்த பெண்ணையும் கொலை செய்ய பிரபல ரவுடி திட்டமிடுகிறார். அதற்காக தனது அடியாளை அந்த விடுதிக்குள் அனுப்ப, அவருடன் அதே விடுதி பெண்ணிடம் தனது கேமராவை பறிகொடுத்த உதவி இயக்குநர்கள் இருவர், அந்த கேமராவை கைப்பற்ற செல்கிறார்கள். இதற்கிடையே, அந்த விடுதியில் இருக்கும் சில பெண்களின் அழைப்பின் பேரில் ஆன்லைன் கால் பாய் ஒருவர் அங்கு செல்கிறார். இவர்களுடன், அதே விடுதியில் தங்கியிருக்கும் பெண்ணை காதலிக்கும் ஒரு இளைஞர் தனது காதலிக்கு பிறந்தநாள் பரிசு கொடுப்பதற்காக செல்கிறார்.
இப்படி பெண்கள் விடுதிக்குள் பல்வேறு காரணங்களுக்காக இரவு நேரத்தில் நுழையும் ஆண்களால் பெரும் குழப்பங்கள் ஏற்பட, அந்த குழப்பங்களை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை கிளுகிளுப்பாகவும், கலகலப்பாகவும் சொல்வதே ‘ரா ரா சரசுக்கு ரா ரா’ படத்தின் கதை.
தமிழ் சினிமாவில் அடல்டு காமெடி படங்கள் என்பது மிக அரிதான ஒன்று, அதுபோன்ற படங்கள் வெளியானால் அந்த படக்குழுவினரை மன்னிக்க முடியாத குற்றம் செய்தவர்கள் போல் பலர் விமர்சிப்பதும் உண்டு. இப்படி ஒரு நிலையில், வெளியாகியிருக்கும் இந்த அடல்டு காமெடி படம் இளைஞர்களை முழுமையாக திருப்திப்படுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் சிறப்பாகவே செய்திருக்கிறது.
முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் காயத்ரி படேல், சிம்ரன், தீபிகா, ஜெஃபி, அக்ஷிதா ஆகியோர் அனைவரும் விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் அடிக்கும் லூட்டிகளை பியூட்டியாக செய்திருப்பதோடு, படம் முழுவதும் குட்டை டவுசர் போட்டுக்கொண்டு பார்வையாளர்களை கிரங்கடித்து விடுகிறார்கள்.
இரட்டை அர்த்த வசனக்களை மிக சாதாரணமாக பேசுவதோடு, அதற்கான ரியாக்ஷன்களை எந்தவித தயக்கமும் இன்றி கொடுத்து கைதட்டலும் பெறும் இளம் நடிகைகளின் நடிப்பில் சிறு சிறு தடுமாற்றம் தெரிந்தாலும், படம் முழுவதும் அவர்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்பது போல் கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார்கள்.
காயத்ரி ரெமா, கார்த்திக், கேபிஒய் பாலா, மாரி வினோத், காட்பாடி ராஜன், விஷ்வா, ரவி வர்மா, அபிஷேக், பெஞ்சமின் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர்.ரமேஷ், ஒரு இரவில், ஒரே லொக்கேஷனில் நடக்கும் கதை என்றாலும், அதை பல்வேறு கோணங்களில் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜி.கே.வி இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க வைப்பதோடு, முனுமுனுக்கவும் வைக்கிறது. பின்னணியில் இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
படத்தொகுப்பாளர் மார்த்தாண்ட் கே.வெங்கடேஷ் வெட்டியதை விட தணிக்கை குழுவினர் வெட்டியது அதிகம் என்பதால், பல காட்சிகளும், வசனங்களும் முழுமை பெறாமல் போவது படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்துள்ளது.
எழுதி இயக்கியிருக்கும் கேஷவ் தெபுர், பெண்கள் தங்கும் விடுதியில் நடக்கும் குற்றங்களை மையப்படுத்தி கதை எழுதினாலும், முழுக்க முழுக்க அடல்டு காமெடி ஜானரில் திரைக்கதை அமைத்திருக்கிறார். படத்தின் முதல் பாதியில் இரட்டை அர்த்த வசனங்கள் மூலம் இளைஞர்களை கைதட்ட வைப்பவர், இரண்டாம் பாதியில் காமெடி காட்சிகள் மூலம் சிரிக்க வைக்கிறார்.
பெண்கள் விடுதியில் நடக்கும் மோசடியை சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் சொல்ல முயற்சித்தாலும், அதை திரைக்கதையில் அழுத்தமாக சொல்லாமல், பெண்களை இரட்டை அர்த்தம் வசனம் பேச வைப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது சில இடங்களில் படத்தை தொய்வடைய செய்கிறது. இருந்தாலும், படத்தில் இருக்கும் குறைகள் ரசிகர்களின் கண்களுக்கு தெரியாதவாறு கிளுகிளுப்பான காட்சிகள் மூலம் கவனம் ஈர்த்திருப்பவர், இரண்டாம் பாதி முழுவதும் பெண்கள் விடுதி குழப்பங்கள் மூலம் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்.
கார்த்திக் மற்றும் காயத்ரி படேல் இடையிலான ரொமான்ஸ் பாடல் மற்றும் அதை காட்சிப்படுத்திய விதம் பனிக்கட்டியை கூட பற்ற வைத்துவிடும் அளவுக்கு ஃபயராக இருக்கிறது. இந்த ஒரு பாடலின் மூலமாகவே ரசிகர்கள் கொடுத்த காசுக்கு நியாயம் செய்திருக்கும் இயக்குநர் கேஷவ் தெபுர், இளைஞர்களின் பல்ஸ் அறிந்து படத்தை இயக்கியிருக்கிறார்.
மொத்தத்தில்
ரா ரா சரசுக்கு ரா ரா’ செம்ம ஜாலியா இருக்கு.