நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலமாக பத்திரமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

Share the post

நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலமாக பத்திரமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
இந்த வீடியோவின் போஸ்டர், பிரமோ வீடியோவைத் தவிர நான் கடந்த சில காலமாக வேறெதுவும் பகிரவில்லை. உண்மையச் சொன்னால், எனக்கு வேறதையும் பகிரும் மனநிலை இல்லை. உலகம் முழுவதும் நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது இது மாதிரியான நிகழ்வுகளில் ஈடுபட மனமில்லை.

இந்த வீடியோவையும் கூட இன்னொரு தருணத்தில் பகிர்ந்திருக்கலாம். ஆனால், இதை உருவாக்குவதன் பின்னணியில் நிறைய பேரின் கடினமான உழைப்பு இருக்கிறது.
இந்த கடினமான நேரத்தில் இந்த வீடியோ உங்கள் ஆன்மாவிலிருந்து நிம்மதியைக் கொணர்ந்து முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வரச் செய்யும்.

இந்தப் பாடலுக்கு அற்புதமான வரிகளைக் கொடுத்த விஷ்ணுவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். லாவன்யா உங்களுடன் பணியாற்றியது இனிமையான அனுபவத்தைத் தந்தது. அழகான காட்சிகளைக் கொடுத்தமைக்கு பிரிட்டோவுக்கு நன்றி. எடிட்டிங்கில் கைவண்ணம் காட்டிய ஆகாஷுக்கும், பாடலுக்கு குரல் மூலம் உயிர் கொடுத்த ஜென் மற்றும் சத்யாவுக்கும் நன்றி. அசோக் மாஸ்டரும் அவரது குழுவினர் தெறிக்கவிட்டுள்ளனர். ஸ்ருதி ஆடைவடிவமைப்பில் அசத்தியிருக்கிறார்.
ரியல் ஒர்க்ஸ் ஸ்டூடியோஸ் விஷுவல் எபெக்ஸில் கலக்கியிருக்கிறது.
லோகி, நீங்கள் தான் நான் இதை உருவாக்கக் காரணம். மிகுந்த நன்றி.
ஓர் இசை ஆல்பத்தை உருவாக்குவது போல் எனக்குத் தோன்றவில்லை ஏடோ ஒரு குறும்படம் எடுப்பதுபோல், சினிமா காட்சி எடுப்பது போல் இருந்தது. ஒரு திரைப்படத்தை இந்தக் குழுவுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.
எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தமைக்கு திங்க் மியூசிக்கு நன்றி.
இந்த கடினமான காலகட்டத்தைக் கடக்க அதீத அன்பை உங்களுக்கு உரித்தாக்குகிறேன். இரட்டை மாஸ்க் அணிந்து கொள்ளவும், சானிட்டைசர்கள் பயன்படுத்தவும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும். இறையருள் நிறையட்டும்.

குறிப்பு:
வீடியோவைப் பார்த்துவிட்டு பின்னூட்டங்களை அனுப்பவும்.

அன்புடன் அர்ஜூன்

எல்லா சுரங்கத்தின் முடிவிலும் ஒரு வெளிச்சம் தெரியும். சில சுரங்கங்கள் நீண்ட பாதையைக் கொண்டிருக்கும். ஆனால், ஒளி தெரிவது நிச்சயம். ’போட்டும் போகட்டுமே’, பாடல் அன்பு, நம்பிக்கை, மனஉறுதி, வலிமையை வலியுறுத்துகிறது. உண்மையான அன்பு எல்லாவற்றையும் வெல்லும். இது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

லாவன்யா திரிபாதி (ஹீரோயின்)

தைரியமாக இருக்கவும்…
’போட்டும் போகட்டும்’ பாடல் அதைத்தான் வலியுறுத்துகிறது. அன்பானவர்களை இழப்பது மிகப்பெரிய துயரம். ஆனாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது. இதுவும் கடந்து போகும் என்ற எண்ணம் வேண்டும்.

இசையமைப்பாளர் சத்யா மற்றும் ஜென்

மிகக் கடினமான, துரதிர்ஷ்டமான, கொடுமையான காலகட்டத்தில் போட்டும் போகட்டும் மக்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் என நம்புகிறேன்.
சுரங்கத்தின் முடிவில் ஒளி இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

இயக்குநர் லோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *