*மார்கழிதிங்கள் திரை விமர்சனம் !!
வெண்ணிலா புரடக்ஷன்ஸ் இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில், மனோஜ் பாரதிராஜா இயக்கி இசைஞானி இளையராஜா இசையில் வெளிவந்துள்ள திரைப்படம் “மார்கழி திங்கள்”.
இப்படத்தில்பாரதிராஜா – ராமையா தாத்தா
ஷியாம் செல்வன் – வினோத்
ரக்ஷனா – கவிதா
நக்ஷா சரண் – ஹேமா
சுசீந்திரன் – தர்மன்
அப்புக்குட்டி – ராசு
மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு ஊரில் உள்ள பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள் கவிதாவும், வினோத்தும். போட்டி போட்டுக் கொண்டு படிக்கும் இருவருக்கும் இடையே காதல் வருகிறது. கல்லூரி படிப்பை முடித்த பின்பு தான் திருமணம் அதுவரை இருவரும் சந்தித்து பேசக் கூடாது என்று உத்தரவு போடுகிறார் கவிதாவின் தாத்தா ராமையா. கவிதாவின் தாய்மாமன் தர்மன் மோசமானவன்.
இருவரும் வெவ்வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்கள். இந்த படிக்கும் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? எப்படி சமாளித்தார்கள் என்பதே இப்படத்தின் கதை.
கவிதாவாக நடிக்கும் ரக்ஷனா காதல் காட்சிகளில் மிக அழகாக நடித்துள்ளார்.
இதற்கு சற்றும் குறையாமல் வினோத்தாக நடிக்கும் ஷ்யாம் செல்வன் உணர்வுகளை தருவதில் மிகவும் சிறப்பாக செய்து விடுகிறார்.
பாரதிராஜாவின் அனுபவ நடிப்பு மிகவும் சிறப்பு. நாயகியின் தாத்தாவாக நன்றாக நடித்துள்ளார்.
இந்த காதல் கதையில் நம்மை மிகவும் ஈடு படுத்துவது இளையராஜாவின் இசைதான். பாடல் காட்சிகளிலும், பின்னணி இசையிலும் ஒரு இசை ராஜாங்கத்தை நடத்தி உள்ளார் இளையராஜா.
வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு அருமை கிராமத்து காட்சிகளை சிறப்பாக கண் முன் கொண்டு வந்துள்ளார்.
மொத்தத்தில் புதிய கிளைமேக்ஸ்யில் குடும்பம் காதல், இசை என மார்கழி திங்கள் ….