லியோ திரை விமர்சனம் !!
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ் லலித் குமார் தயாரித்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளி வந்திருக்கும் படம் லியோ .
இப்படத்தில்
தளபதி விஜய்
திரிஷா கிருஷ்ணன்
ஆக்ஷன் கிங்’அர்ஜுன்,சஞ்சய்தத்,
கௌதம் வாசுதேவ் மேனன் ,மிஸ்கின்
பிரியா ஆனந்த்
மேத்யூ தாமஸ்
சாண்டி இயல்
மன்சூர் அலிகான் ஜார்ஜ்மரியன்மடோனா செபாஸ்டியன்
ஜாஃபர் சாதிக்
மற்றும் பலர் நடித்து உள்ளார்கள் .
விஜய் பார்த்திபன் தன் மனைவி திரிஷா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இமாசலப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகிறார். அங்கு சாக்லேட் கடை ஒன்றையும் நடத்தி வருகிறா
ஒருநாள் திருடர்களான மிஷ்கின் மற்றும் சாண்டி, விஜய் சாக்லேட் கடைக்கு சென்று ஊழியர்களை துப்பாக்கி முனையில் நிற்க வைத்து பணம் பறிக்க முயல்கிறார்கள். அப்போது விஜய் பிரச்சனை வேண்டாம் என்று பணத்தை கொடுத்து முடித்துவிட பார்க்கிறார். ஆனால், அவர்களின் அட்டகாசம் எல்லை மீறவே விஜய் அவர்களின் துப்பாக்கியால் அவர்களை கொன்றுவிடுகிறார்.
இதனால் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. விஜய் தற்காப்புக்காக தான் இந்த கொலையை செய்தார் என்று நிரூபணமாகி அவர் விடுவிக்கப்படுகிறார்
அதுவரை உலகிற்கு யார் என்று தெரியாமல் இருந்த விஜய் இந்த வழக்கு மூலம் பிரபலமாகிறார். மேலும் இவரது புகைப்படம் பத்திரிகை மற்றும்
செய்திகளில் வெளியிடப்படுகிறது இந்த புகைப்படம் சஞ்சய் தத் கையில் கிடைக்கவே லியோ தாஸ் விஜய் போன்று இருக்கும் விஜய்யை பார்த்திபன் தேடி சஞ்சய் தத் வர
இறுதியில் விஜய்யை தேடி சஞ்சய் தத் ஏன் வருகிறார்? லியோ தாஸுக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
இப்படத்தில் நடித்த
தளபதி விஜய்
திரிஷா கிருஷ்ணன்
ஆக்ஷன் கிங்’ அர்ஜுன்,சஞ்சய்தத்,
கௌதம் வாசுதேவ் மேனன் ,மிஸ்கின்
பிரியா ஆனந்த்
மேத்யூ தாமஸ்
சாண்டி இயல்
மன்சூர் அலிகான் ஜார்ஜ்மரியன்மடோனா செபாஸ்டியன்
ஜாஃபர் சாதிக் அனைவரும் அருமையா நடித்து இருக்கிறார்கள்
தளபதி விஜய் இந்த படத்திலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
முழு படத்தையும் தன் தோளில் சுமந்து இருக்கிறார் தளபதி விஜய்.
சஞ்சய் தத் தன் மிரட்டும் நடிப்பு ரசிகர்களை கவர்ந்து இருந்தது
திரிஷா, விஜய்க்கு உறுதுணையாக இருக்கிறார்.
அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி ஆகியோர் கொடுத்த கதாபாத்துக்கு ஏற்ற நடித்து உள்ளனர் .
லோகேஷ் படம் முழுவதும் மாஸ் காட்டியு இருக்கிறார்.
அனிருத் இசையில் அட்டகாசம் !
பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். !
பின்னணி இசை படத்திற்கு பலம்.!
மனோஜ், ஒளிப்பதிவு சூப்பர் !
பிலோமின் ராஜ் எடிட்டிங் படத்துக்கு(+)
கண்ணன் கணபத் சவுண்ட் மிக்ஸிங் அருமை.
மொத்தத்தில்
*சுவிட்டு கொஞ்சம் அதிகமா வை இருக்கு*