உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் திரையில் வெளியாகும் ஷாருக்கானின் ‘ஜவான்’

Share the post

உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் திரையில் வெளியாகும் ஷாருக்கானின் ‘ஜவான்’

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம், ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் திரையில் திரையிடப்படவுள்ளது.

ஷாருக்கானின் ஜவான் இந்திய சினிமாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிகழ்வாகும். இப்படத்தின் ப்ரீவ்யூ, பாடல்கள் மற்றும் போஸ்டர்களின் மூலம் உற்சாகத்தை அதன் விளிம்பில் வைத்திருக்கிறது.‌ உலகளவில் பரந்து விரிந்த அளவில் வெளியிடப்பட திட்டமிட்டிருக்கும் நிலையில், ஜவான் உலகம் முழுவதும் மிகப் பெரிய அளவிலான திரையிலும் வெளியாக உள்ளது. ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய அகன்ற திரையில் இப்படம் பிரம்மாண்டமான முறையில் திரையிடப்படவுள்ளது.

ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் அருகே உள்ள லியோன்பெர்க்கில் தற்போது உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் திரையரங்கம் இயங்கி வருகிறது. இங்கு ஜவான் திரையிடப்படுகிறது. இத்திரையின் அளவு 38X22m (அதாவது 125X72 அடி) அளவு கொண்ட அகன்ற திரையில் வெளியாகிறது. இவ்வளவு அகன்ற திரையில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் ஜவான். இந்த மெகா ஆக்சன் என்டர்டெய்னரின் திரில் மற்றும் சாகசத்தை பார்வையாளர்கள்.. இப்போது இன்னும் நுட்பமான மற்றும் அற்புதமான முறையில் அனுபவிக்க முடியும் என்பதனை இந்த திரை வெளியீடு உறுதி செய்கிறது.

‘ஜவான்’ படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்திருக்கிறார். கௌரவ் சர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *