கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில், ‘வீடியோ கால் எ ஃபிரண்ட்’ வாய்ப்பில் ஷாவ்மி இந்தியாவின் போன் பயன்படுத்தப்படவுள்ளது
கோன் பனேகா குரோர்பதி – சீசன் 15 நிகழ்ச்சியுடனான இந்த கூட்டணியின் மூலம், அதில் வரும் ‘வீடியோ கால் எ ஃபிரண்ட்’ என்கிற லைஃப்லைன் வாய்ப்பின் போது ஷாவ்மியின் ரெட்மி 12 5G ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்படவுள்ளது
பெங்களூரு, 17ஆகஸ்ட் 2023- நம் நாட்டின் மிகவும் நம்பகமான ஸ்மார்ட்போன் X AIoT பிராண்டான ஷாவ்மி இந்தியா, சோனி எண்டர்டெயின்மென்ட் டெலிவிஷனில் ஒளிபரப்பாகிவரும் இந்தியாவின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான – கோன் பனேகா குரோர்பதி-உடன் இணைந்துள்ளது. இந்நிகழ்ச்சியின் தொழில்நுட்ப பரிமாணத்தை மேம்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பத்தினை இந்த கூட்டணி ஒருங்கிணைக்கவுள்ளது; இதன் மூலம், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு “வீடியோ கால் எ ஃபிரண்ட்” என்கிற லைஃப்லைன் வாய்ப்பை பயன்படுத்தும் ஒரு புதுமையான வழி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோன் பனேகா குரோர்பதியின் இந்த புதிய சீசனில், நண்பரை வீடியோ கால் மூலம் அழைத்து உதவி கேட்கும் ‘வீடியோ கால் எ ஃபிரண்ட்’ லைஃப்லைனிற்கு ஷாவ்மியின், சமீபத்திய ரெட்மி 12 5G ஸ்மார்ட்போன் உள்ளிட்ட 5G சாதனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. விளையாட்டின் போது, இந்த லைஃப்லைன் வாய்ப்பினை பயன்படுத்தும் போட்டியாளர்கள் தங்கள் நண்பர்களை வீடியோ அழைப்பு மூலம் தொடர்புகொண்டு, அவர்களை ஆலோசித்து தங்கள் முடிவினை எடுக்கலாம்.
இந்த கூட்டணி குறித்து பேசிய ஷாவ்மி இந்தியா நிறுவனத்தின், தலைமை மார்கெட்டிங் அலுவலர், திரு. அனூஜ் ஷர்மா அவர்கள், “பல ஆண்டுகளாக இந்திய குடும்பங்களின் ஒரு முக்கியமான அங்கமாகவே இருந்து வரும் நிகழ்ச்சி தான் கோன் பனேகா குரோர்பதி. அந்நிகழ்ச்சியைப் போலவே, ஷாவ்மி இந்தியா பிராண்டும், இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகால பயணத்தில் பல மில்லியன் மனங்களைக் கவர்ந்துள்ளது. இவை இரண்டுமே அவற்றின் அசல் தன்மையில் வேரூன்றியுள்ளன, மற்றும் வெகுஜனங்களுடன் பிணைப்பை ஏற்படுத்துவதிலும் அர்பணிப்பு செலுத்துகின்றன. இந்த கூட்டணியின் மூலம், எங்களது 5G தொழில்நுட்பத்தின் வழியாக அந்நிகழ்ச்சியில் வரும் ‘வீடியோ கால் எ ஃபிரண்ட்’ லைஃப்லைனை பயன்படுத்துவதில் ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்வதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது”, என்றார்.
ஷாவ்மி இந்தியா நிறுவனத்தின், ஹெட் – மார்கெட்டிங் பார்ட்னர்ஷிப் & அலையன்ஸ், பிரதிக் தாஸ் அவர்கள், “ஒரு வலுவான கூட்டணி என்பதே, ஒரு பிராண்டின் வளர்ச்சி மற்றும் அறிவாற்றலுக்குப் பின்னால் இருக்கும் உந்து சக்தியாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு ஆற்றல்மிக்க கூட்டணியாக, நேயர்களின் எண்ணவோட்டங்களுடன் ஒத்துப்போகும் வகையிலும், எல்லைகளைக் கடந்த நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் எங்களது இந்த கூட்டணி அமைந்துள்ளது”, என்று தெரிவித்தார்.
SET நிறுவனத்தின் சோனி SAB மற்றும் சோனி MAX மூவீஸ் க்ளஸ்டர், ஹெட்- மார்கெட்டிங் & கம்யூனிகேஷன், வைஷாலி ஷர்மா அவர்கள் கூறுகையில், “ ‘கோன் பனேகா குரோர்பதி’ ரியாலிட்டி டிவி நிகழ்ச்சிகளுக்கான பிரிவில் மிகவும் விரும்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது. அறிவின் சக்தியை வெளிப்படுத்துவது, மற்றும் நாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றத்தின் ஆற்றலின் பிரதிபலிப்பாகவும் இருக்கும் விதமாக, இந்த சீசனில் விளையாட்டின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க பல புதுமையான அம்சங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்த அப்டேட் செய்யப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட சீசனில், மிக முக்கியமான லைஃப்லைனான ‘வீடியோ கால் எ ஃபிரண்ட்’ வாய்ப்பினை பயன்படுத்தும் எங்கள் போட்டியாளர்களின் அனுபவத்தினை மேம்படுத்துவதில், ஷாவ்மி ஸ்மார்ட்போன்களின் 5G தொழில்நுட்பம் ஒரு முக்கியப் பங்காற்றவுள்ளது”, என்று தெரிவித்தார்.
புகழ்பெற்ற நடிகரான அமிதாப் பச்சன் அவர்கள் திரையில் நடத்தும் இந்த கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியானது, துவங்கப்பட்ட காலம் முதல் அறிவாற்றல் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய இரண்டின் கலவையாக சுவாரஸ்யத்தின் மூலம் நேயர்களை அதன் வசப்படுத்தி, ஒரு கலாச்சார தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது. தொழில்நுட்பத்தின் எல்லைகளை விரிவாக்குவதன் மூலம் தினசரி வாழ்வினை மேம்படுத்தும் ஒரு பிராண்டாக அறியப்படும் ஷாவ்மியின் நற்பெயருடன் இந்த கூட்டணி முன்முயற்சியும் ஒத்துப்போகிறது.