ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்திற்கான வரையறுக்கப்பட்ட பாட்டில்கள் பதிப்பை பிஸ்லேரி தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது
சென்னை: இந்தியாவின் முன்னணி பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் நிறுவனமான பிஸ்லேரி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டார்க் காமெடி -அதிரடித் திரைப்படமான ‘ஜெயிலர்’ படத்திற்காக சன் பிக்சர்ஸுடன் கூட்டு சேர்ந்துள்ளது. 500ML, 1 லிட்டர், 2 லிட்டர் மற்றும் 5 லிட்டர்களில் புகழ்பெற்ற சூப்பர்ஸ்டாரும் முன்னணி நடிகருமான ரஜினிகாந்த் படங்கள் பிஸ்லெரியின் வரையறுக்கப்பட்ட பதிப்புகளில் இடம்பெறும். இந்த வரையறுக்கப்பட்ட பாட்டில்கள் பதிப்பு தமிழ்நாடு சந்தை சந்தை முழுவதும் காட்சிப்படுத்தப்படும்.
தமிழ்நாட்டுச் சந்தையில் தனது மிகப்பெரிய விளம்பரப் பிரச்சாரங்களில் ஒன்றை வெளியிடவுள்ள பிஸ்லெரி, இப்பகதியில் பெரிய நுகர்வோர் மற்றும் வர்த்தக ஈடுபாட்டுடன் கிட்டத்தட்ட 25000 விற்பனை நிலையங்களை உள்ளடக்கியது மற்றும் சிறப்புத் திரைப்படத் திரையிடலுக்கான வானொலி மற்றும் டிஜிட்டல் போட்டிகளையும் கொண்டுள்ளது.
இக்கூட்டாண்மை குறித்து பேசிய, பிஸ்லேரி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட், சந்தைப்படுத்தல் தலைவர் திரு.துஷார் மல்ஹோத்ரா அவர்கள், ” மெகாஸ்டார் ரஜினிகாந்த் இடம்பெறும் பிஸ்லேரி X ஜெயிலர் லிமிடெட் எடிஷன் பேக், செழுமையான மற்றும் உற்சாகமான தமிழ் திரைப்பட கலாச்சாரத்தை கொண்டாடுவதற்கும், எங்கள் பெரிய நுகர்வோருடன் பிராண்டு அன்பையும் உற்சாகத்தையும் வளர்ப்பதற்கும் ஒரு அருமையான கூட்டுப்பணியாகும்” என்று கூறினார்.
சன் நெட்வொர்க்கின் தலைமைச் செயல் அலுவலர், திரு.செம்பியன் சிவகுமார் அவர்கள், “பிஸ்லேரி மற்றும் ஜெயிலர் ஒரு சிறந்த கூட்டணியாகும். ஏனெனில் சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் மற்றும் பிராண்ட் பழம்பெரும் பெயர்களாகும். இந்த வரையறுக்கப்பட்ட பதிப்பு தொகுப்புகள் பார்வையாளர்களை வசீகரிக்கும் மற்றும் வரவிருக்கும் திரைப்படத்தின் உற்சாகத்தை அதிகரிக்கும், மேலும் வாடிக்கையாளர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும்” என்று கூறினார்.
வரையறுக்கப்பட்ட பதிப்பு பேக்குகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொது மற்றும் நவீன வர்த்தக நிலையங்களிலும், பிஸ்லேரி @Doorstep ஆப் மூலம் ஆன்லைனிலும் கிடைக்கும். கடந்த காலங்களில், தென் சந்தையில் பிராண்ட் பிரியத்தை வலுப்படுத்த பிஸ்லேரி RRR, விக்ரம், PS:1 மற்றும் PS:2, வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா போன்ற திரைப்படங்களுடன் கூட்டு சேர்ந்த்து குறிப்பிடத்தக்கதாகும்.
.