கொலை திரை விமர்சனம்

Share the post

ஜெ.துரை

கொலை திரை விமர்சனம்

இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாலாஜி கே.குமார் இயக்கி விஜய் ஆண்டனி நடிப்பில் வெளி வந்த திரைப்படம் கொலை

ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், சித்தார்த்தா சங்கர், முரளி சர்மா, ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் இத் திரைப்படத்தில் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார்

பிரபல மாடல் அழகியான மீனாட்சி செளத்ரி பூட்டியிருந்த வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் அந்த கொலை வழக்கை பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி ரித்திகா சிங் விசாரிக்கிறார் ஆனால் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் துப்பறிவாளரான விஜய் ஆண்டனி மீனாட்சி கொலை வழக்கை கையில் எடுக்கிறார் ரித்திகா சிங்கும் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடத்தும் விசாரணை பல யூகங்கள் வழியே பயணித்து இறுதியில் கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்
என்பது தான் படத்தின் கதை

கொலை செய்யப்பட்ட மாடல் லைலா என்பவர் யார்? கொலை செய்யப்பட்ட அவர் மூலமாகவே சொல்லும் காட்சிகளை வடிவமைத்த விதம் வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது

விநாயக் என்ற கதாபாத்திரத்தில் துப்பறிவாளராக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி கெட்டப்பில் மட்டும் மாற்றம் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார்

மிக அமைதியான நடவடிக்கை கூர்மையான பார்வை என்று அவரது ஒவ்வொரு அசைவும் நம் கவனத்தை ஈர்க்கிறது

துடிப்பான இளம் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரித்திகா சிங் நடிப்பு மூலம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்

லைலா என்ற மாடல் அழகியாக நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரி சர்வதேச மாடல் அழகிக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்தவராக இருப்பதோடு மட்டுமின்றி தனது நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்

மீனாட்சியின் காதலராக நடித்திருக்கும் சித்தார்த் சங்கர், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம், ஜான் விஜய், ராதிகா என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல தங்களுடைய நடிப்பை காட்டியுள்ளனர்

ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன், படம் முழுவதையும் மாடலாக காட்சிப்படுத்தியிருக்கிறார்

கிராபிக்ஸ் என்று கண்டுபிடிக்க முடியாதபடி காட்சிகளை படமாக்கியுள்ள வண்ணம்,கோணம் என அனைத்தையும் வித்தியாசமாக கையாண்டு பார்வையாளர்களையும் லைலாவுடன் பயணிக்க வைக்கிறார்

கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் அனைத்தும் சிற்பமாக செதுக்கியுள்ளார்

காட்சிகளுடன் பார்க்கும் போது மீண்டும் மீண்டும் பார்க்கவும், கேட்கவும் வைக்கிறது

பின்னணி இசை சஸ்பென்ஸ் ஜானர் படங்களுக்கானதாக அல்லாமல் புதிய வடிவில் இருக்கிறது

மேக்கிங்காக இருந்தாலும் படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே, அதை பார்வையாளர்களுக்கு புரியும் வகையில் மிக அருமையாக தொகுத்திருக்கிறார்

விஜய் ஆண்டனியின் குடும்ப பின்னணி நடிகர்களின் நடிப்பு கொலை செய்தது யாராக இருக்கும் என்ற பார்வையாளர்களின் யூகங்களை பொய்யாக்கும் விதத்தில் காட்சிகள் நகர்வது போன்றவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது

மொத்தத்தில் கொலை க்ரைம் ஸ்டோரி திரைப்படங்கள் வரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *