ஜெ.துரை
பள்ளிக்கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
சென்னை கோடம்பாக்கம்
புலியூர்கிராமம் என்னும் பகுதியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி
பள்ளி வளாகத்தில்
பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் 120 வது பிறந்தநாளை முன்னிட்டு
பள்ளிக்கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது
இவ் விழாவில் சென்னை சங்கமம் சார்பாக சமீபத்தில் ஐதராபாத்தில் நடைப்பெற்ற வியட்நாம் தற்காப்புகலை போட்டியில் இந்திய அளவில் மூன்றாவது பரிசை வென்ற சென்னை கே.கே.நகர் பகுதியை சார்ந்த
M.ரஜீத் சாய் என்ற மாணவர்க்கு கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கொளரவித்தனர்
இதனை தொடர்ந்து
மக்கும் குப்பைதொட்டி
மக்காத குப்பைதொட்டி
அபாயகரமான குப்பைதொட்டி போன்றவை பள்ளிக்கு வழங்கப்பட்டது
பின்னர்
போதைபொருள் விழிப்புணர்வு
பேருந்தில் படிகட்டுப் பயணம் தவிர்த்தல் போன்ற விழிப்புணர்வு புத்தகம் வெளியிடப்பட்டது
மற்றும் அப் பள்ளியில் பணிபுரியும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு ரூபாய் 2,000 மற்றும்
சிறந்த ஆசிரியர்கள் 12-பேருக்கு ரூபாய் 1000,
2023 ம் கல்வி ஆண்டில் அப்பள்ளியில் பயின்ற அதிகமதிப்பெண்கள் பெற்ற 10-ஆம், 11-ஆம் 12-ஆம் வகுப்பு முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு
1000 ரூபாய் என ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது
இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக
130-வது வட்ட மாமன்ற உறுப்பினர்
பாஸ்கர்,
131-வது மாமன்ற உறுப்பினர்
கோமதிமணிவண்ணன் மற்றும்
தமிழ் நாடு வணிகர் சங்க பேரமைப்பு சென்னை மண்டல தலைவர் ஜோதிலிங்கம், மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியன் ஆகியோர்
கலந்து கொண்டனர்
மற்றும்
பள்ளி நிர்வாக கமிட்டி தலைவர் V.கலைவாணி,
துணை தலைவர் கிஷோர்குமார்,
சமூகநல ஆர்வலர்
E.வேலு
சென்னை சங்கமம் சார்பாக
லயன் போஸ், லயன் டாக்டர் ஜாகிர் உசேன், லயன் மோகன் பாபு, லயன் முத்து வேலன், லயன் அருண்குமார் மற்றும் அரிமா சங்க உறுப்பினர் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்