ஜெ.துரை
காடப்புறா கலைக்குழு திரைப்பட விமர்சனம்
சக்தி சினி புரொடக்ஷன்ஸ் சார்பாக டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர் சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரிப்பில், ராஜா குருசாமி எழுத்து, பாடல் & இயக்கத்தில், முனிஷ்காந்த், காளி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள படம் “காடப்புறா கலைக்குழு”.
முனிஷ்காந்த் காடப்புறா கலைக்குழு என்னும் கிராமிய கலையான கரகாட்ட குழுவை நடத்தி வருகிறார்
இவரது குழுவில் காளி வெங்கட், டெலிபோன் ராஜ், ஸ்வேதா ரமேஷ், அந்தகுடி இளையராஜா ஆகியோர் உள்ளனர்
முனிஷ்காந்தின் தம்பி ஹரி கிருஷ்ணன் தன்னுடன் கலைக் கல்லூரியில் படிக்கும் பென்சில் மீசை பெருமாள் (சூப்பர் குட் சுப்ரமணி) தங்கை ஸ்வாதி முத்துவை காதலிக்கிறார்
இரக்க குணமும் அனைவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்ட முனிஷ்காந்த் அந்த ஊரில் உள்ள அனைவராலும் நேசிக்கப்படுகிறார்
இந்நிலையில் மைம் கோபிக்கு எதிராக பஞ்சாயத்தில் நிற்கும் ஆறுமுகத்தை ஆதரிக்கிறார் முனிஷ்காந்த்
இதனால் ஆத்திரம் அடைந்த மைம் கோபி முனிஸ் காந்த் மற்றும் அவரது தம்பி காதலை பிரிக்க முயற்ச்சிக்கிறார்
காதலர்கள் கை கூடினார்களா? திருமணமாகாத முனிஷ்காந்த் வாழ்கை? என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை
முனிஷ்காந்த் கதையின் நாயகனாக நடிப்பிலும் கரகாட்டகாரராக நடனத்திலும் அசத்தியுள்ளார்
காளி வெங்கட், ஶ்ரீலேகா ராஜேந்திரன், மைம் கோபி, சூப்பர் குட் சுப்ரமணி, ஹரி கிருஷ்ணன், ஸ்வேதா ரமேஷ், ஸ்வாதி முத்து, லீ கார்த்திக் ஆகியோர் தனது காதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல சிறப்பாக நடித்துள்ளனர்
கதை, திரைக்கதை, வசனம், பாடல் & இயக்கம் ராஜா குருசாமி சிறப்பாக வடிவைமத்துள்ளார்
இசை ஹென்றி பாடல்களின் இனிமை சிறப்பு
மொத்தத்தில் காடப்புறா கலைகுழு குடும்பத்துடன் மகிழ்சியாக பார்க்கலாம்