வியட்நாம் மருத்துவக் கல்வி மாநாடு 2023- வியட்நாமில் உள்ள இந்திய மாணவர்களுக்கு வாய்ப்புகளை கிடைக்கச் செய்திருக்கிறது

Share the post

வியட்நாம் மருத்துவக் கல்வி மாநாடு 2023 – வியட்நாமில் உள்ள இந்திய மாணவர்களுக்கு வாய்ப்புகளை கிடைக்கச் செய்திருக்கிறது

அல்லது

இந்திய மருத்துவ மாணவர்களுக்கு வியட்நாம் சிறந்த கல்விக்கான புகலிடமாக உருவெடுத்துள்ளது

அல்லது

வியட்நாம் பல்கலைக்கழகங்கள் இந்தியாவிலிருந்து மருத்துவ மாணவர்களை ஈர்க்க ஆர்வமாக உள்ளன

அறிமுகம்: வியட்நாமில் உள்ள அரசு மருத்துவக் கல்வி நிறுவனத்துடன் இணைந்துள்ள ஒரே இந்திய அமைப்பான ஐரா ஓவர்சீஸ் ஸ்டடீஸ், வியட்நாம் மருத்துவக் கல்வி மாநாடு 2023 ஐ ஏற்பாடு செய்தது.

திருச்சி: உயர்தர கல்வி, இருப்பிடம் மற்றும் மலிவு கட்டணக் கட்டமைப்பு ஆகியவற்றால், மருத்துவக் கல்வியைத் தொடரும் இந்திய மாணவர்களின் பிரபலமான இலக்காக வியட்நாம் உருவாகி வருகிறது. இவைகளுடன்,  இந்திய மாணவர்களுக்கு வியட்நாம் வழங்கும் பிற நன்மைகள் ஜூலை 3, திங்கள் அன்று திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட வியட்நாம் மருத்துவக் கல்வி மாநாடு 2023-ல் முன்னிலைப்படுத்தப்பட்டது.

வியட்நாம் மருத்துவக் கல்வி மாநாடு 2023, ஐயா ஓவர்சீஸ் ஸ்டடீஸ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது,  இது வியட்நாமைச் சேர்ந்த அரசு மருத்துவக் கல்வி நிறுவனத்துடன் இணைந்த முதல் இந்திய அமைப்பாகும், இது வியட்நாமின் கேன் தோ மருத்துவம் மற்றும் மருந்தியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.

கேன் தோ யுனிவர்சிட்டி ஆஃப் மெடிசின் அண்ட் பார்மசி என்பது, இந்திய மாணவர்களுக்கு பல்வேறு மருத்துவ திட்டங்களை வழங்கும் ஒரு அரசு மருத்துவ பல்கலைக்கழகம் ஆகும். கல்விக் கடன் வசதி, 100% வரை கல்விக் கட்டண உதவித்தொகை, முதலாண்டிலிருந்தே பல்கலை வளாகத்தில் NeXT, USMLE, மற்றும் PLAB தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் இந்திய உணவுகளுடன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி தங்குமிட வசதிகளையும் மாணவர்கள் பெறுகிறார்கள். ஒரு ஆண்டுக்கு வெறும் ரூ. 4 லட்சம் என்ற கட்டணத்தில் முதன்மையான அரசு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மருத்துவத்திற்கான எம்பிபிஎஸ் பட்டப் படிப்பை படிக்கலாம். இதற்கும் மேலாக, நீட் தேர்வு மதிப்பெண் இல்லாமலேயே இம்மருத்துவக் கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும். அத்துடன், படிப்பை வெற்றிகரமாக முடித்தவுடன், 100% பணியிட அமர்வு உத்தரவாதத்தையும் இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது.

இந்த மாநாடு, வியட்நாமிய மருத்துவக் கல்வி மற்றும் இந்திய மாணவர்களுக்கான அதன் பல பலன்களைப் பற்றி கென் தோ பல்கலைக்கழகத்தின் ரெக்டரான டாக்டர். குயென் ட்ரூங் கியென் மற்றும் ஐரா வெளிநாட்டு ஆய்வுகளின் இயக்குநர் திருமதி. தீபா ஆர் உட்பட புகழ்பெற்ற நிபுணர்கள் கலந்துகொண்டு தெளிவான விளக்கத்தை வழங்கினர்.

இம்மாநாட்டின் தொடக்கமாக பாரம்பரிய விளக்குகள் ஏற்றப்பட்டன, அதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் வியட்நாமின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. இந்த அமர்வு நிகழ்வானது வெளிநாட்டில் மருத்துவப் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களையும், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களையும் மிகவும் கவரும் வகையில் இருந்தது.

ஐரா ஓவர்ஸீஸ் ஸ்டடீஸ் – ன் இயக்குநர் திருமதி தீபா ஆர் தனது உரையில், “இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் MBBS மற்றும் பிற மருத்துவப் படிப்புகளைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கின்றனர். வியட்நாம் சிறந்த மருத்துவக் கல்வி உள்கட்டமைப்பு, இந்தியாவை ஒத்த  புவியியல்அமைப்பு, கலாச்சாரம் மற்றும் வானிலையில் உள்ள ஒற்றுமைகள் மற்றும் மலிவு கட்டண அமைப்பு ஆகியவற்றின் காரணமாக இந்திய மருத்துவ மாணவர்களுக்கான சிறந்த இடமாக உருவெடுத்துள்ளது.

சரியான வாய்ப்புகள், தனித்தன்மை வாய்ந்த வழிகாட்டுதல் மற்றும் உதவி சேவைகள் மூலம் மருத்துவ ஆர்வலர்களை மேம்படுத்துவதற்கான ஐரா வெளிநாட்டு ஆய்வுகளின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார், மேலும் இந்திய மாணவர்களுக்கான சேர்க்கைக்கு வசதியாக வியட்நாமில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களுடனான நிறுவனத்தின் நெருங்கிய ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினார்.

 “ஐரா ஓவர்சீஸ் ஸ்டடீஸ் இந்திய மாணவர்களுக்கு நாட்டில் சிறந்த மருத்துவக் கல்வியை அளிப்பதில் கவனம் செலுத்துவதுடன், வியட்நாமில் மருத்துவ சேர்க்கைக்கு முன்னோடியாக உள்ளது. வியட்நாம் தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, மருத்துவச் சேர்க்கைக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்திய நிறுவனம் இதுவாகும்,” என்று அவர் கூறினார்.

தனது  உரையில், டாக்டர் நுயென் ட்ருங் கியென், கேன் தோ பல்கலைக்கழகத்தின் சலுகைகளை எடுத்துரைத்ததுடன், இந்தியாவிற்கும் வியட்நாமிற்கும் இடையிலான வலுவான உறவுகளைப் பற்றியும் வலியுறுத்தி கூறினார்.

“இந்தியாவும், வியட்நாமும் கலாச்சார மற்றும் மத ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. வியட்நாமில் ஒரு வலுவான இருதரப்பு வர்த்தகம், வளர்ந்து வரும் மக்கள்-மக்கள் தொடர்பு மற்றும் ஒரு செழிப்பான இந்திய சமூகம் வியட்நாமில் உள்ளது. வியட்நாம் பரவலான ஆங்கில புலமை கொண்ட பாதுகாப்பான நாடாக இருப்பதுடன் ஆர்வமுள்ள மருத்துவ நிபுணர்களுக்கான சிறந்த இடமாகவும் உள்ளது. கேன் தோ பல்கலைக்கழகம் ஒரு சிறந்த கல்வி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அத்துடன் இந்திய மாணவர்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ”என்று டாக்டர் நுயென் ட்ருங் கியென் கூறினார்.

ஐரா ஓவர்சீஸ் ஸ்டடீஸ் & ஐரா  ஹாஸ்பிடாலிடி (வியட்நாம்) இன் சர்வதேச விவகாரங்களின் தலைவர் ரவுனக் சிங், வியட்நாமில் மருத்துவக் கல்வி முறை பற்றிய விரிவான விவரங்களை மாநாட்டின் போது வழங்கினார். இந்திய மாணவர்களுக்கான சுகாதாரத் துறையில் உள்ள வாய்ப்புகள், விசாக்கள், பயணம், இந்திய உணவு, தங்குமிடம் மற்றும் பிற முக்கிய அம்சங்கள் குறித்த அத்தியாவசிய தகவல்கள் குறித்தும் அவர் விவாதித்தார்.

கேன் தோ பல்கலைக்கழகம் தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) வழிகாட்டுதல்களை நிறைவேற்றும், அதனால் மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகு இந்தியாவில் திரும்பி வந்து பயிற்சி செய்யலாம். பல்கலைக்கழகம் சர்வதேச மாணவர்களுக்கான பிஜி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளையும் வழங்குகிறது.

வியட்நாமில் உள்ள எம்பிபிஎஸ் பாடத்திட்டம், இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ள இந்தியத் தரங்களுக்கு இணையாக உள்ளது. வியட்நாமில் பெறப்படும் எம்பிபிஎஸ் பட்டம் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே,  ஒரு மாணவர் பட்டம் பெற்ற பிறகு வேறு எந்த நாட்டிலும் வேலை செய்ய அல்லது மேற்படிப்பில் சேர எந்த சிக்கலும் ஏற்படாது. இக்கல்வித் திட்டம் முழுவதும் ஆங்கிலத்தை கற்பிக்கும் மொழியாக கொண்டிருக்கிறது. வியாட்நாம் பல்கலைக்கழகங்களில் பல இந்திய கல்வியாளர்கள் பயிற்றுவிப்பாளர்களாக பணிபுரிகின்றனர். உடல்நல பராமரிப்புத் துறையில் ஏராளமான தொழில் மற்றும் பணி வாய்ப்புகளை வியட்நாம் வழங்குகிறது.

வியட்நாமில் எம்பிபிஎஸ் படிப்புக்கான பயிற்சி காலம் ஆறு ஆண்டுகள். இதில் ஒரு வருட ஊதியத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப்பும் அடங்கும். வியட்நாமின் சுகாதார அமைச்சகம் மற்றும் கல்வி மற்றும் பயிற்சி அமைச்சகம் பாடத்திட்டத்தை மேற்பார்வையிடுவதற்கும் அங்கீகாரம் மற்றும் தர உத்தரவாதத்திற்கும் பொறுப்பாகும். மேலும், வியட்நாமின் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் உலக சுகாதார அமைப்பு மற்றும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான கல்வி ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, எனவே அவை வெளிநாட்டு மாணவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பானது, ஏற்றது.

இந்திய மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த இடங்கள் இருப்பதால், மாற்றுக் கல்வி வாய்ப்புகளைத் தேடும் மாணவர்களுக்கு வியட்நாம் மருத்துவக் கல்வி மாநாடு துல்லியமான மற்றும் மதிப்புமிக்க தகவல்களை வழங்குகிறது. ஐரா ஓவர்சீஸ் ஸ்டடீஸ், இந்திய மருத்துவ மாணவர்கள்  விரும்பி  படிக்கும்  இடமாக வியட்நாமை மாற்றும்  நோக்கத்தில் உறுதியாக உள்ளது. இந்த அமைப்பானது வியட்நாமுக்கு பிரத்தியேகமாக MBBS சேர்க்கைகளை ஊக்குவிப்பதிலும், இந்திய மாணவர்களுக்கான நெறிப்படுத்தப்பட்ட சேர்க்கை செயல்முறையை எளிதாக்குவதிலும் உறுதியான பொறுப்புணர்ச்சியைப் பேணுகிறது.

வியட்நாம் மருத்துவக் கல்வி மாநாடு பற்றி: வியட்நாம் மருத்துவக் கல்வி மாநாடு என்பது ஐரா ஓவர்சீஸ் ஸ்டடீஸ் – ன் ஒரு முயற்சியாகும். இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான இடங்கள் பல மாணவர்களை மற்ற நாடுகளில் கல்வி வாய்ப்புகளைத் தேடத் தூண்டுகிறது. இந்த முன்முனைப்பானது மாணவர்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐரா ஓவர்சீஸ் ஸ்டடீஸ் பற்றி: வியட்நாமில் உள்ள இந்திய மருத்துவ ஆர்வலர்களின் கல்வித் தேவைகளை நோக்கிச் செயல்படும் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே அமைப்பு ஐரா ஓவர்சீஸ் ஸ்டடீஸ் ஆகும். இந்திய மருத்துவ மாணவர்கள் படிப்பதற்கான  புதிய இலக்காக  வியட்நாமை உருவாக்குவதற்கு இது உறுதிபூண்டுள்ளது. வியட்நாமுக்கு பிரத்தியேகமாக MBBS சேர்க்கைகளை ஊக்குவிப்பதற்காக ஐரா ஓவர்சீஸ் ஸ்டடீஸ் வியட்நாம் தூதரகத்திற்கு உறுதியளித்துள்ளது. இது இந்திய மாணவர்களை சரியான பல்கலைக்கழகங்களுடன் இணைக்க உதவுவதுடன் சேர்க்கை செயல்முறையை எளிதாக்க உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *