பாலமுரளி நாத மகோத்சவ் 2023-கான விருது
Dr.M.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் 93-வது நட்சத்திர பிறந்த ஆஷாட விசாகம் நாளை முன்னிட்டு Dr.M.பாலமுரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையின் கலையில் சிறந்தவருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-கான முரளீ நாத லஹரி விருது மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசினை பரதநாட்டிய கலைஞர் Dr.பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறது. இந்த விருது நிகழ்ச்சியினை Dr.M.பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளையுடன் சென்னை பாரதீய வித்யா பவன் இணைந்து வருகின்ற ஜூலை 6-ந்தேதி மாலை 6 மணிக்கு மைலாப்பூர் பாரதீய வித்ய பவன் பிரதான அரங்கில் நடத்துகின்றன.
இந்நிகழ்ச்சி கலைமாமணி Dr.K.கிருஷ்ணகுமார் மற்றும் கலைமாமணி பின்னி கிருஷ்ணகுமார் அவர்களின் குழுவுடன் வழங்கும் இசை அஞ்சலியுடன் துவங்கவிருக்கிறது.
நிகழ்ச்சியில் பங்குபெறவிருக்கும் சிறப்பு விருந்தினர்கள் :-
Dr.B.K.கிருஷ்ணராஜ் வானவராயர் – தலைவர்
கோயமுத்தூர், பாரதீய வித்யா பவன் .
Dr.M.பாலமுரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையின் ,2023-கான முரளீ நாத லஹரி விருது மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசினை Dr.பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்குகிறார்,
மற்றும் பங்கு பெறும் சிறப்பு விருந்தினர்.
N.ரவி தலைவர் பாரதீய வித்யா பவன் சென்னை,
பத்மபூஷண் Dr.T.V.கோபாலகிருஷ்ணன், கலைமாமணி திரு K.N.ராமசுவாமி – இயக்குனர் பாரதீய வித்யா பவன் சென்னை வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
திரு S மோகன்தாஸ் – அறங்காவலர்
SSVM கல்வி நிறுவனங்கள் கோயமுத்தூர்
பாலமுரளீ விசாகம் இசைக்கச்சேரிகளின் லோகோவினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்க விருக்கிறார்.
Dr.வம்சி மோகன், அறங்காவலர் Dr.M.பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை,
Dr.K.கிருஷ்ணகுமார், அறங்காவலர் Dr.M.பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை,
திரு K வெங்கிடாசலம் – துணை இயக்குனர் பாரதீய வித்யா பவன் சென்னை,
திரு இராஜாமணி – CEO புதுயுகம் தொலைக்காட்சி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள்.
மற்றும் இசைக்கவி இரமணன்
இந் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க இருக்கிறார்.
Dr.M.பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை இவ்வருடம் முதல் ஒவ்வொரு மாதமும் Dr.M.பாலமுரளி கிருஷ்ணா பிறந்த நட்சத்திரம் விசாகம் அன்று பாலமுரளி விசாகம் இன்னிசை நிகழ்ச்சிகளை பாரதிய வித்யா பவன் அரங்கில் வழங்கவிருப்பது சிறப்பு அறிவிப்பாகும்.
இந்த தொடர் இன்னிசை நிகழ்ச்சிகள் மூலம்
Dr.M பாலமுரளி கிருஷ்ணா ஒரு வாகேயகாரராக இசை அமைத்த க்ருதிகளும் அவர் பாடி பிரபலமான கிருதிகளையும் வழங்கவிருக்கிறார்கள்.
இத்தொடர் இசை நிகழ்ச்சிகள் மூலம் வளர்ந்து வரும் கர்நாடக இசை கலைஞர்களை ஊக்குவிக்க பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு இசை ரசிகர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
For more details, Pls contact Dr. K. Krishnakumar +919840134742