தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்

Share the post

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை (ஏப். 26) முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதன்படி, பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களை இயக்க அனுமதி இல்லை.தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு போன்ற சில கட்டுப்பாடுகள் ஏற்கெனவே அமலில் இருந்தன. அவற்றுடன் புதிய கட்டுப்பாடுகளும் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளன.எவையெல்லாம் இயங்காது?திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்காது. அழகு நிலையங்கள், முடிதிருத்த நிலையங்கள், அனைத்து உணவகங்கள், தேநீா் கடைகள் ஆகியவற்றில் அமா்ந்து சாப்பிடுவது ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பாா்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதியில்லை : அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டுக்கு அனுமதியில்லை. டென்னிஸ் கிளப் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கங்கள் செயல்பட அனுமதியில்லை.ஏற்கெனவே உள்ள நடைமுறை : ஏற்கெனவே அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு தொடா்ந்து நடைமுறையில் இருக்கும். இதேபோன்று, தனியாா், அரசு பேருந்துகளின் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமா்ந்து பயணிக்கலாம். வாடகை, டாக்சி வாகனங்களில் ஓட்டுநரைத் தவிா்த்து மூன்று பயணிகள் மட்டும் பயணிக்கலாம். ஆட்டோக்களில் ஓட்டுநரைத் தவிா்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *