1 மில்லியன் வர்த்தகர்கள் திறனை மேம்படுத்துவதற்கான மெட்டா மற்றும் அனைத்திந்திய வர்த்தக கூட்டமைப்பு இணைகிறது
- சிஏஐடியின் வர்த்தகர்கள் அவர்களின் வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கான ஒரு முன்னணி வழியாக உருவாகியுள்ள வாட்ஸ்அப் ஆப் பிசினஸ் ஆப்ஸை எவ்வாறு பயன்படுத்துவது குறித்தான திறனை பெற்றிருப்பார்கள்
- மெட்டா ஆனது வளர்ந்து வரும் தொழில்முனைவோர்கள் டிஜிட்டல் வர்த்தக திறன்களை அறியவும் சான்றிதழ் பெற வழிவகை செய்யும் ஒரு புதிய திட்டமான மெட்டா ஸ்மால் பிசினஸ் அக்காடமியை தொடங்குவதாகவும் அறிவித்துள்ளது
புது டெல்லி, 26ஆம் ஜூன்: ஜூன்27 அன்று உலக எம்எஸ்எம்இ தினத்தையொட்டி, தேசத்தின் இரண்டு புதிய திறன் மேன்பாட்டு திட்டத்தை அறிவித்துள்ளதன் மூலம் இந்தியாவின் சிறு வர்த்தக வளர்ச்சிக்கான அதன் உறுதிப்பாட்டை மெட்டா மீண்டும் வலியுத்தியுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் வணிகத்திற்கான வாட்ஸ்அப்பில் 1 மில்லியன் வர்த்தகர்களின் திறனை மேம்படுத்துவதற்காக அனைத்திந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) உடன் புதிய கூட்டுமுயற்சியை மெட்டா அறிவித்தது.
நிறுவனமானது 2021 இல் மெட்டாவின் உறுதிப்பாடான 10 சிறு வணிகர்கள் திறன் மேம்பாட்டுக்காக உருவான மெட்டா ஸ்மால்பிசினஸ் அக்காடமியை தொடங்குவதாகவும் அறிவித்துள்ளது. மெட்டா ஸ்மால்பிசினஸ் அகாடமியின் சான்றிதழ் குறிப்பாக புதிய தொழில்முனைவோர் மற்றும் வணிகர்கள் மெட்டா ஆப்களில் மேம்பட முக்கியமான டிஜிட்டல் மார்க்கெட்டிங் திறன்களைப் பெற உதவும். இந்தியா முழுவதிலும் உள்ள எம்எஸ்எம்இகளை திட்டம் சென்றடைய பயிற்சி தொகுதி மற்றும் தேர்வு ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி, கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு என ஏழு மொழிகளில் உள்ளது. 2022-23 ஆண்டு எம்எஸ்எம்இ அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் 4.9 மில்லியன் MSMEகள் உள்ளன. இந்த எம்எஸ்எம்இகள் மெட்டா ஸ்மால் பிசினஸ் அகாடமி வழங்கும் திறன் திட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
சந்தியா தேவநாதன், மெட்டாவின் துணைத் தலைவர் (இந்தியா) கூறியதாவது, “இந்தியாவின் எம்எஸ்எம்இகளின் வளர்ச்சியின் திறவுகோலாக இருப்பதில் திறன் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மெட்டாவில், வணிகங்களின் வளர்ச்சிப் பாதைகளில் சரியான நேரத்தில் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எம்எஸ்பிஏ சான்றிதழ் குறிப்பாக புதிதாக தொடங்கும் தொழில்முனைவோருக்கு பயனளிக்கும் அதே வேளையில், சிஏஐடி உடனான எங்கள் பார்ட்னர்ஷிப், இந்தியா முழுவதும் உள்ள வர்த்தகர்களுக்கு தங்கள் வாடிக்கையாளர்களுடன் இணைக்க பிசினஸ் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தவும், அவர்களின் வளர்ச்சி பயணங்களை அதிகரிக்கவும் உதவும்.
2022 ஆம் ஆண்டில் ஐபிஎஸ்ஓஎஸ் பொது விவகாரங்கள் மூலம் மெட்டா கமிஷன் செய்யப்பட்ட ஆய்வில், இந்தியாவில் தற்போது டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தும் 91% சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுடன் இணைவதற்கு மெசேஜிங் பயன்பாடுகள் மற்றும் கருவிகள் மிக முக்கியமான வழியாகும் என்றும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அவர்களின் வணிகம் புதிய வாடிக்கையாளர்களுக்கான அணுகலை அதிகரிக்க வாட்ஸ்அப் உதவியதாக கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதற்கான ஒரு இயற்கையான வழியாக வாட்ஸ்அப் மாறுவதால், மக்கள் வணிகங்களுடன் இணைவதற்கு தேர்வான ஊடகமாக இது உருவாகி வருகிறது..
பிரவீன் கண்டேல்வால், அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் (சிஏஐடி) தேசிய பொதுச் செயலாளர், கூறியதாவது, “நெட்வொர்க்கிங் உடன் கூடிய தொழில்நுட்பம் மற்றும் இணையம், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை இந்தியாவின் வர்த்தக சமூகத்தின் ஐந்து முக்கிய தூண்களாகும். அனைத்து அளவிலான வணிகங்களும் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி தங்கள் வாடிக்கையாளர்களுடன் திறம்பட தொடர்பு கொள்ளவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் இணைக்கவும், வணிக வளர்ச்சியை மேம்படுத்துவதற்குத் தேவையான சரியான நேரத்தில் திறன்களை அவர்களுக்கு வழங்க வேண்டிய அவசிய தேவை உள்ளது. ‘வாட்ஸ்அப் மூலம் வர்த்தகம்’ பிரச்சாரத்தின் கீழ், வாட்ஸ்அப் பிசினஸ் ஆப்பை பயன்படுத்தி அனைத்துத் துறைகளிலும் வர்த்தகர்களை டிஜிட்டல் முறையில் மேம்படுத்துவதற்கு 1 மில்லியன் வர்த்தகர்களுக்கு பயிற்சி அளிக்க மெட்டா உடன் இணைந்து பணியாற்றுவோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த முயற்சி இந்தியா முழுவதும் உள்ள வர்த்தகர்களுக்கு புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் வர்த்தக சமூகத்தின் வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக வரும் மாதங்களில் வணிகம் மற்றும் டிஜிட்டல் திறன் சாசனத்தை விரிவுபடுத்த மெட்டா உடன் இன்னும் நெருக்கமாக இணைவதை நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம்.”
கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவின் எம்எஸ்எம்இகளின் தனிப்பட்ட தேவைகளை மனதில் கொண்டு மெட்டா பல முக்கிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் பல இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்புடன் (ஃப்ஐசிசிஐ) தொடங்கப்பட்டுள்ளன, இது இந்தியாவின் எம்எஸ்எம்இகளை திறன் மூலம் மேம்படுத்துவதில் மெட்டாவின் மூலோபாய துணையாக செயல்படுகிறது.
டாக்டர் சங்கீதா ரெட்டி – தலைவர், ஜி20 எம்பவர், இணை நிர்வாக இயக்குனர், அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் மற்றும் ஃப்ஐசிசிஐ முன்னாள் தலைவர், கூறியதாவது, “ஃப்ஐசிசிஐ மற்றும் மெட்டா ஆகியவை இந்தியாவின் சிறு வணிகங்களின் வளர்ச்சியில் உள்ளார்ந்த அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. டிஜிட்டல் மார்க்கெட்டிங் திறன்களை வழங்குவதன் மூலம் அரை மில்லியன் பெண்களுக்கு எஸ்எம்பிகளை செயல்படுத்தும் முக்கிய மைல்கல்லை கடந்த ஆண்டு நாங்கள் ஒன்றாக அடைந்தோம். மெட்டா ஸ்மால் பிசினஸ் அகாடமி சான்றிதழை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் சிறு வணிகங்களுக்கு மெட்டா அதன் திறன் அர்ப்பணிப்பை விரிவுபடுத்துவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கூடுதலாக, மெட்டா, ஜி20 எம்பவர் டிஜிட்டல் இன்க்ளூஷன் பிளாட்ஃபார்மில் தனது பணியின் மூலம் பெண்களின் டிஜிட்டல் மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான ஒரு பாராட்டத்தக்க முயற்சி செய்யும் வகையில் டிஜிட்டல் நிதி கல்வியறிவுக்கான ஃப்ஐசிசிஐக்கு துணையாக இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள சிறு வணிகங்களுக்கு, குறிப்பாக பெண்கள் தலைமையிலான வணிகங்களுக்கு வலுவான சூழல் அமைப்பை உருவாக்க, எதிர்காலத்தில் மெட்டாவுடன் இணைவதை நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம்.”