சென்னை பெருநகர காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்களை சேர்ந்த சிறார்களுக்காக ஏ.ஜி.எஸ் திரையரங்கில் ‘பொன்னியின் செல்வன்-2’ சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது

Share the post

சென்னை பெருநகர காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்களை சேர்ந்த சிறார்களுக்காக ஏ.ஜி.எஸ் திரையரங்கில் ‘பொன்னியின் செல்வன்-2’ சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது

சென்னை பெருநகர காவல் துறையில் 112 காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்கள் இயங்கிவருகின்றன. மேற்கண்ட காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்களை சேர்ந்த உறுப்பினர்களை ஊக்கப்படுத்த பல்வேறு விளையாட்டுப்போட்டிகள், போட்டி தேர்வு பயிற்சிகள், மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இதுதவிர கல்வி சுற்றுலாவாக மாணவர்களை
பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டு ஊக்கப்படுத்தப்படுகிறது. கடந்த 29.04.2023 அன்று சென்னை மெட்ரோ ரயிலில், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் வரை அழைத்துச் செல்லப்பட்டு வரப்பட்டது. மேலும் 09.05.2023 அன்று சென்னை துறைமுகத்தில் இந்திய கடலோர காவல் படையின் சுஜய் ரோந்துக்கப்பலை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்தொடர்ச்சியாக, சிறார் மன்றங்களை சேர்ந்த சிறுமியர் மற்றும் சிறுவர்களின் வேண்டுகோளின் பேரில் திரு.M.மனோகர்,இ.கா.ப., காவல் இணை ஆணையாளர், மேற்குமண்டலம், சென்னை பெருநகரகாவல், அவர்களின் ஏற்பாட்டில் இன்று (08.06.2023) காலை 09.00 மணிக்கு சென்னை மதுரவாயலில் உள்ள ஏ.ஜி.எஸ் திரையரங்கில் வரலாற்று திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படம் சிறப்புக்காட்சியாக காவல் சிறுவர் சிறுமியருக்கு மட்டும் திரையிடப்பட்டது.

இத்திரைப்படத்தை காவல் சிறார் மன்றத்தை சேர்ந்த சுமார் 200 சிறுவர் சிறுமியர்கள் கண்டுமகிழ்ந்தனர். இத்திரைப்படத்தினை காவல் சிறார் மன்ற மாணவ மாணவிக்களுக்காக சிறப்புக்காட்சியாக ஏற்பாடு செய்து வழங்கிய திருமதி.அர்ச்சனா கல்பாத்தி அவர்களுக்கு காவல் இணை ஆணையாளர் அவர்கள் நினைவு பரிசு வழங்கி நன்றி தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *