கலர்ஸ் தமிழில் புத்தம்புதிய நெடுந்தொடர் ‘அபி டெய்லர்’ என்பதன் முன்னோட்ட விளம்பரம் ஒளிபரப்பு

Share the post

~அபி டெய்லர் நெடுந்தொடருக்கான சிறப்பான இந்த முன்னோட்ட விளம்பரம் 2021 ஏப்ரல் 11 ஞாயிறு அன்று கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் ஒளிபரப்பானது ~

சென்னை, 13 ஏப்ரல் 2021: பெண்மையை போற்றி கொண்டாடுகிற, சுவாரஸ்யமிக்க, சிறப்பான கதை அம்சம் கொண்ட நெடுந்தொடர்களை ஒளிபரப்பிவருவதற்காக பிரபலமாக அறியப்படும் தமிழ்நாட்டின் மிக இளைய பொது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், ’அபி டெய்லர்’ என்ற பெயரில் புதிய நெடுந்தொடரை தொடங்கவிருக்கிறது. தொடக்கத்திலிருந்தே பார்வையாளர்களை நிகழ்ச்சியோடு ஈடுபாட்டுடன் ஒன்றுமாறு கட்டிப்போடப்போகும் ‘அபி டெய்லரின்’ முதல் முன்னோட்ட விளம்பரத்தை ஒளிபரப்பி பார்வையாளர்களது கவனத்தையும், எதிர்பார்ப்பையும்  பெரிதும் ஈர்த்திருக்கிறது.

கலர்ஸ் தமிழ் சேனலில் விரைவில் தொடங்கப்படவிருக்கும் இப்புதிய நெடுந்தொடர் நிகழ்ச்சி பற்றிய ஒரு சுவாரஸ்யமான முன்னோட்டத்தை இந்த புரொமோ விளம்பரம் வழங்குகிறது. ரேஷ்மா முரளிதரன், அபிராமி என்ற கதாபாத்திரத்தில் துடிப்பான தையற்கலை நிபுணராக அறிமுகமாவதுடன் இந்த புரொமோ தொடங்குகிறது. அவரது கடையில் வழங்கப்படும் பல்வேறு சேவைகளின் தொகுப்பை வெறும் 30 நொடிகளில் மிக வரிசைக்கிரமமாக அபிராமி அழகாக வர்ணிப்பதை இந்த புரொமோ சித்தரிக்கிறது. இதை சொல்லி முடித்து மூச்சு வாங்குவதற்காக நிற்கும்போது, 2021 மே 24ம் தேதியிலிருந்து தொடங்கி இரவு 10:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் அபி டெய்லர் ஒளிபரப்பாகும் என்பதை இந்த விளம்பரம் எடுத்துரைக்கிறது.

சிறப்பான, சுவாரஸ்யமான கதையினை கொண்ட இந்த நெடுந்தொடர் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை இப்போதே பெறுவதற்கு இந்த வாரம் முழுவதும் ஒளிபரப்பாகிற அபி டெய்லரின் புரொமோ விளம்பரத்தை (யூடியூப் / சமூக ஊடக இணைப்பில்) கண்டுமகிழுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது. தங்களது வசதிப்படி எந்த நேரத்திலும் இதை கண்டு மகிழ பார்வையாளர்கள் VOOT-ஐ டியூன் செய்யலாம்.

அபி டெய்லர் – புரொமோ லிங்க்:

https://fb.watch/4Q3jyKFD8p/

——————————————————————————————————————————————————————————————————————————————

கலர்ஸ் தமிழ் குறித்து: 2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ், வயாகாம்18 குடும்பத்திலிருந்து வெளிவருகின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். ஒரு பெண்ணையும், அவளது குடும்பத்தையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். “இது நம்ம ஊரு கலரு” என்ற விருதுவாக்குடன் களமிறங்கியிருக்கிற கலர்ஸ் தமிழ், கதை சொல்வது மீது முதன்மையான கவனத்தை செலுத்தும் தரமான, புதுமையான நிகழ்ச்சி அமைப்புகளின் வழியாக சிறப்பான பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இதன் நிகழ்வுகள் இருக்கும். வேலுநாசிசி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் மற்றும் ஒரு கதை பாடட்டுமா என்பவை எங்களது சேனலில் ஒளிபரப்பான பிரபல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளாகும்.  டான்ஸ் Vs டான்ஸ், கலர்ஸ் காமெடி நைட்ஸ், ஓவியா, சிவகாமி, வந்தாள் ஸ்ரீதேவி, பேரழகி மற்றும் திருமணம், தறி மற்றும் மலர், கல்லாப்பெட்டி, கோட்டீஸ்வரி, உயிரே, அம்மன், இதயத்தை திருடாதே, மாங்கல்ய சந்தோஷம் போன்ற சமூக – குடும்ப நெடுந்தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிற, ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சிகளுள் சிலவாகும்.

வயாகாம்18 குறித்து: வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட்., இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் என்டர்டெயின்மென்ட் வலையமைப்புகளுள் ஒன்றாகும். பல செயல்தளங்களில் பல தலைமுறைகளுக்கான பல கலாச்சார பிராண்டு அனுபவங்களை வழங்கி வருகிற வலுவான பிராண்டுகளின் தாயகமாக இது திகழ்கிறது. 51% பங்குகளை கொண்டிருக்கும் டிவி18 மற்றும் 49% பங்குகளை கொண்டிருக்கும் வயாகாம்18 ஆகிய இரு பெருநிறுவனங்களின் கூட்டுமுயற்சி நிறுவனமான வயாகாம்18, சினிமா வழியாகவும் மற்றும் ஆன்லைன், வானொலி மற்றும் களஅளவில் கொண்டிருக்கும் தனது ஆதாரவளங்களின் மூலமாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைவதன் மூலம் இந்தியாவின் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கை வரையறை செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *