Axess Film Factory தயாரிப்பில்
பரத், வாணி போஜன் நடிப்பில் அறிமுக இயக்குநர் M.சக்திவேல் இயக்கும் Production No 12 !
தமிழ் சினிமாவில் தொடர்ந்து லாபம் தரக்கூடிய வெற்றி படங்களாவும், அதே நேரம் ரசிகர்களின் மனங்களை கவரும் தரமான படைப்பாகவும் தந்து வரும் தயாரிப்பாளர் G. டில்லிபாபுவின் Axess Film Factory நிறுவனம் தனது அடுத்த படத்தினை துவங்கியுள்ளது. தற்போதைக்கு Production No 12 என தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் M.சக்திவேல் இயக்குகிறார். சமீபத்தில் இவர் இயக்கியிருந்த அபிமன்யூ குறும்படம் திரை உலகில் பெரும் பாராட்டுக்களை குவித்தது. இப்படத்தில் நடிகர் பரத் மற்றும் நடிகை வாணி போஜன் முன்னணி பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
Axess Film Factory நிறுவன தயாரிப்பாளர் G. டில்லிபாபு படம் குறித்து கூறியதாவது…
இயக்குநர் சக்திவேல் இந்த கதையை என்னிடம் கூறியபோது மிகுந்த ஆச்சர்யமடைந்தேன். கதையின் பின்புலமும் கதை நகரும் விதமும் மிகவும் புதிதாக இருந்தது. நகருக்கு வெளியே காற்றாடி விண்ட்மில்லை சுற்றியே மொத்த கதையும் நடப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் முழுத்திரைக்கதையையும் படித்த பின்னே படத்தை தயாரிக்க சம்மதித்தேன். திரைக்கதையை படித்தபோது பல இடங்களில் மிக அழுத்தமான கதையமைப்பும், மர்மமும் கலந்து இருந்தது. மயிர்க்கூச்செரியும் பல தருணங்கள் திரைக்கதையில் இருந்தது. ஒரு திரைப்படத்தை பார்ப்பது போலவே இருந்தது. படத்தை தயாரிக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை திரைக்கதை தந்தது. பரத் மற்றும் வாணி போஜன் ஆகியோரை முன்னணி பாத்திரங்களில் நடிக்க வைக்கலாம் என இயக்குநர் சொன்ன போது இப்படத்திற்கு கச்சிதமான தேர்வு என எனக்கும் தோன்றியது. பரத் எப்போதுமே தயாரிப்பாளர்களின் நாயகன். வாணிபோஜன் எங்களின் மிகப்பெரும் ஹிட் படமான ஓ மை கடவுளே படத்தில் நடித்திருந்தார். அற்புதமான நடிகை அவருடன் மீண்டும் பணியாற்றுவது மகிழ்ச்சி. இருவருக்கும் சமமான பாத்திரம் படத்தில் உள்ளது. இயக்குநர் K.S.ரவிக்குமார் மிக முக்கியமானதொரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகளை பொறுத்து விரைவில் படப்பிடிப்பை துவக்கவுள்ளோம். தென்காசி, அம்பாசமுத்திரம் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தவுள்ளோம்.
ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் வேல்ராஜ் அவர்களின் உதவியாளர் S. சுரேஷ் பாலா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே வெற்றிமாறனின் பாவகதைகள் ஆந்தாலஜி மற்றும் பரத்தின் காளிதாஸ் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல படத்தொகுப்பாளர் ரூபனிடம் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களில் உதவியாளராக பணியாற்றிய R.கலை வாணன் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநர் ராஜீவனின் உதவியாளர் மணிகண்டன் கலை இயக்கம் செய்துள்ளார். M.சக்திவேல் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.