இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில் சூப்பர் குட் சுப்ரமணி கதையின் நாயகனாக நடித்திருக்கக்கூடிய ‘வெள்ளிமலை’ படத்தின் ட்ரைய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பேரரசு, கே.எஸ். ரவிக்குமார், சீமான் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
தெரியவில்லை. நாம் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஒரே இடம் திரையரங்குதான். அதனால், இந்தத் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய வெற்றிப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். படத்தின் இரண்டு பாடல்களும் எனக்குப் பிடித்திருக்கிறது. இன்றைய கதைக்களத்தை நான் கவனித்துதான் வருகிறேன். என்றாவது அத்தி பூத்தாற்போலதான், தான் வளர்ந்த கண்ட களத்தை கதையாக கொண்டு வர வேண்டும் என்று நினைப்பார். அப்படி வந்த இயக்குநர் தான் கண்ட கனவை மெய்ப்படுத்தி இருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். இது போன்ற படங்களை தியேட்டரில் பார்க்க வேண்டும். ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்பது ரவுடித்தனம். சாமி இல்லாத ஒரே இடம் தியேட்டர்தான்.
‘கடைசி விவசாயி’ படத்தைப் பலரும் பார்க்காமல் விட்டு விட்டோம். சர்வதேச அங்கீகாரங்கள் பலதைப் பெற்றிருக்கிறது. பார்க்காத நாம் வெட்கித் தலை குனிய வேண்டும். அதை போல, இந்தப் படமும் நன்றாக இருந்தால் போய்ப் பார்த்து வெற்றிப் பெற செய்யுங்கள். சுப்ரமணியனை கதாநாயகனாக்கி படமாக்க இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும். இதை நாம் பாதுகாக்க வேண்டும்” என்றார்.
தயாரிப்பாளர் ராஜகோபால் இளங்கோவன் பேசியதாவது, “இந்தப் படத்தின் அழைப்பை ஏற்று வந்திருக்கக்கூடிய அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. ‘வெள்ளிமலை’ படக்குழுவினரின் ஒத்துழைப்பிற்கும் நன்றி” என்றார்.
தயாரிப்பாளர் தேனப்பன் பேசியதாவது, “சூப்பர் குட் சுப்ரமணி என்று சொல்வது போல, நானும் சூப்பர் குட்டில் இருந்துதான் வந்தேன். அவர் கதாநாயகன் ஆனது நானே ஆனது போல மகிழ்ச்சியாக இருக்கிறது. மிஷ்கின் சொன்னதுபோல, படத்தின் ட்ரைய்லர் நன்றாக உள்ளது. உங்கள் ஆதரவு படத்திற்கு வேண்டும்”.
நான்தான். குடும்ப பார்வையாளர்களை மையமாகக் கொண்டு வர இருக்கும் ‘வாரிசு’ படத்திற்கு அதிக வசூல் இருக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் கணித்துள்ளனர். அதுபோல, நம் மண்ணின் தொன்மையை சொல்லும் இந்தப் படத்தையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும்”.
அவருக்குச் சரியான நேரத்தில் வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. அனைவரும் இந்தப் படத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டும். சீமானுடைய பேச்சை நேரில் கேட்பதற்காகவும்தான் வந்திருக்கிறேன்” என்றார்.
தமிழன். தனியார் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயமாக்க வேண்டும். அழித்து விடாமல் காக்க வேண்டும். கொரோனாவில் நிறைய பேரைக் காப்பாற்றியது நாட்டு மருத்துவம்தான். ஆங்கில மருத்துவம் நம்மை அடிமைப்படுத்துகிறது. இதனாலேயே, ‘வெள்ளிமலை’ வெற்றியடைய வேண்டும்”.
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேசியதாவது, “இங்கு நான் வந்ததற்கு முக்கியக் காரணம் சூப்பர் குட் சுப்ரமணிதான். நான் அங்கு உதவி இயக்குநராகதான் உள்ளே நுழைந்தேன். அப்போதிருந்தே சுப்ரமணி அங்கு இருப்பார். என்னிடமும் நிறைய கதைகள் சொல்லி இருப்பார். அரைமணி நேரத்தில் ஐந்தாறு கதைகள் கமல் சாருக்கு அடுத்து சொல்லக்கூடியவர் இவர்தான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் நடிக்க வந்திருக்கிறார். இப்போது படங்களில் அவர் ஸ்டில்லை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘வெள்ளிமலை’ தங்கமலையாக உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்”.
ரகுநந்தன் சாருக்கும் நன்றி. இந்தப் பாடலை அரைமணிநேரத்தில் பாட வைத்தார். இந்தப் படம் தேசியவிருது பெறும் படமாக மாறட்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
அறிவை வளர்க்கும் கல்வி நம் அனைவருக்கும் கிடைக்காமல் இருப்பது மாபெரும் அவலம். டெலிஃபோனை கிராஹாம்பெல் கண்டுபிடித்தபோது யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபோல பல உதாரணங்கள் சொல்லலாம். எதையும் பழமை என்று ஒதுக்க முடியாது. அதுபோல, நாட்டு மருந்துகளையும் மக்கள் ஏற்பார்கள். நம் தாய்மொழியை நாம்தான் பேச வேண்டும் என்ற உறுதி மொழியை ஏற்க வேண்டும். என் தம்பி, இயக்குநர் வினோத்திடம் கூட, ஹெச்.வினோத் என்று பெயரைப் போடக்கூடாது என்று சொல்லி இருக்கிறேன். ஒரு எழுத்தைக் கூட தமிழில் மாற்ற முடியாத தமிழன் எப்படி நாட்டை மாற்ற முடியும். உலகில் உள்ள எந்தவொரு மொழிகளைக் காட்டிலும் தனித்து இயங்கக்கூடிய மொழி தமிழ் மொழி” என்றார்.