நடிகர் சிவகுமார் வழங்கும் ‘திருக்குறள் 100’ புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒளிபரப்பாகிறது !!

Share the post

ஈரோடு புத்தகத்திருவிழாவில் நடிகர் சிவகுமார் ‘திருக்குறள் 100’ உரை நூல் அரங்கேற்று விழா பிரமாண்டமாக நடைபெற்றது.திருக்குறள் என்பது இனம், மொழி, தேசம் கடந்து மனிதர்கள் அனைவருக்குமான ஒரு பொதுமறையாகப் போற்றப்படுகிறது.திருக்குறளைப் பாமரனிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கைக் அனுபவங்களை இணைத்து ‘வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்’ என்கிற பார்வையில் ‘திருக்குறள் 100’ என்கிற நூலை எழுதி இருக்கிறார்.இதுவரை திருக்குறளுக்கு வார்த்தைகள் வடிவில் பரிதி பரிமேலழகர் முதல் கலைஞர் சாலமன் பாப்பையா வரை ஏராளமான பேர் உரை எழுதியிருக்கிறார்கள்.

ஆனால் சிவகுமார் வள்ளுவர் வழி நின்று வாழ்ந்த, தங்களை அறியாமலேயே குறளின் வழியே சென்ற மனிதர்களின் வாழ்க்கையின் வழியே இந்த உரையைஎழுதியுள்ளார். இதனை தொடர்ந்து இடைவிடாது நான்கு மணி நேரம் உரையாற்றியது இந்த நூற்றாண்டின் ஓர் சாதனை என தமிழறிஞர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடந்த இந்த அரங்கேற்று விழாவின்போது கூடியிருந்த கூட்டத்தினர் சிறிதும் கவனம் சிதறாமல் இரவு நெடுநேரம் சென்றும் இடையில் எழாமல் முழுக் கவனத்துடன் அவரது வியூப்பூட்டியது. பேச்சைக் கேட்ட விதம்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு’ என்ற குறளில் தொடங்கி நூறாவது கதையாக மலக்குழி இறங்கும் துப்புரவுத் தொழிலாளியின் கதையைக் கூறி ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று அதற்குரிய குறளைக் கூறி நிறைவு செய்துள்ளார்

பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ள ‘ திருக்குறள் 100’ சிறப்பு ஒளிபரப்பு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொங்கல் திருநாளில் தொடங்கி காணும் பொங்கல் வரை தொடர்ந்து 3 நாட்கள் (15.1.23,16.1.23, 17.1.23 ஞாயிறு திங்கள் மற்றும் செவ்வாய்) ஆகிய நாட்களில் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இதனை தொடர்ந்து புதுயுகம் தொலைக்காட்சியில் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *