சிரிப்பு மன்றம் (விஜயதசமி 05-10-2022)
ஜெயா டிவியில் விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சியாக பிரபல நகைச்சுவை பேச்சாளர் புலவர்.சண்முக வடிவேல் தலைமையில் ‘சிரிப்பு மன்றம்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிகழ்ச்சியில் திரு.சிவகுருநாதன், திரு.நீலகண்டன், திரு.அன்பழகன், திருமதி.வேதநாயகி ஆகியோர் பங்கேற்று நம் வாழ்வில் பல்வேறு சூழல்களில் அன்றாட நடக்கும் நகைச்சுவைகளை சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கும் விதத்தில் தொகுத்து வழங்கியுள்ளனர். இந்நிகழ்ச்சியை வரும் புதன்கிழமை விஜயதசமி திருநாளன்று காலை10:00 மணிக்கு காணலாம்.