பெண் ஆட்டோ ஓட்டுனரின் வாழ்க்கையை சுவைபட சித்தரிக்கும் “உள்ளத்தை அள்ளித்தா” என்ற தனது புத்தம் புதிய நெடுந்தொடரின்  ப்ரொமோவை வெளியிட்டது கலர்ஸ் தமிழ்

Share the post

பெண் ஆட்டோ ஓட்டுனரின் வாழ்க்கையை சுவைபட சித்தரிக்கும் “உள்ளத்தை அள்ளித்தா” என்ற தனது புத்தம் புதிய நெடுந்தொடரின்  ப்ரொமோவை வெளியிட்டது கலர்ஸ் தமிழ்

16 செப்டம்பர் 2022: குடும்பத்திற்காக உழைத்து, சம்பாதித்து காப்பாற்றும் முதன்மை நபராக ஆண்களே இருக்கின்றனர் என்ற சமூக கண்ணோட்டங்களை மக்கள் மனதிலிருந்து மாற்றுகின்ற ஒரு முயற்சியாக, அர்த்தமுள்ள பொழுதுபோக்கு சேனல் என்று புகழ்பெற்றிருக்கும் கலர்ஸ் தமிழ், உள்ளத்தை அள்ளித்தா எனும் புதிய நெடுத்தொடரை ஒளிபரவுள்ளது.  இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் மனதை ஈர்க்கும் முதல் ப்ரொமோவை வெளியிட்டது கலர்ஸ் தமிழ். 

பெண்கள் திறனதிகாரம் என்ற கருத்தாக்கம் மீது மக்கள் கவனத்தை இதன்மூலம் இந்த ஒளிபரப்பு ஈர்க்கும் என்பது நிச்சயம். 

2022 அக்டோபர் 10 இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பை தொடங்கவிருக்கும் இப்புதிய புதின நெடுந்தொடரான உள்ளத்தை அள்ளித்தா,  தமிழ் என்ற ஆட்டோ ராணியின் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது.  ஆட்டோ ஓட்டுனரான தமிழ் என்ற இந்த இளம்பெண், தனது பணியின் மூலம் குடும்பத்தை காப்பாற்றவும், முன்னேற்றவும் கடுமையாக உழைக்கின்ற அதே வேளையில், அதற்காக தனது உறவுகளை விட்டுக்கொடுக்கவோ, காயப்படுத்தவோ தயாராக இல்லை.  கடமையுணர்வும், தன்மான உணர்வும் கொண்ட இந்த இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சுற்றி இரு வெவ்வேறு உலகங்கள் மற்றும் கருத்தியல்களின் முரண்களையும், மோதல்களையும் கண்டு ரசிக்க வரும் அக்டோபர் 10-ம் தேதி இரவு 9.00 மணி முதல் தொடங்கும் இந்நிகழ்ச்சிக்காக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை தவறாமல் டியூன் செய்யுங்கள்.

நடிகை வைஷ்ணவி இடம்பெறுகின்ற இந்நிகழ்ச்சியின் ஆர்வமூட்டும் முதல் புரொமோ, ரெய்டு ஆப் (Ride App) எனும் செயலி மூலம் புக் செய்த வாடகைக் காருக்காக வெகுநேரமாக காத்திருந்தும் வராமல் ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் ஒரு கர்ப்பவதி பெண் மற்றும் அவளது கணவர் இடம்பெறும் காட்சியோடு தொடங்குகிறது.  நிறைமாதத்தில் உள்ள தனது மனைவி மற்றும் பிறக்கவிருக்கும் குழந்தையின் உயிர் ஆபத்தில் ஊசலாட, என்ன செய்வதென்று தெரியாமல் அப்பெண்ணின் கணவர் தவிக்கிறார்.  ஆனால், அவருக்கு வியப்பையும், மகிழ்ச்சியையும் தரும் வகையில் தமிழ் (ஆட்டோ ராணி என பாசத்தோடு அழைக்கப்படும்), அந்த இடத்திற்கு ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வந்து சேர்கிறார்.  மருத்துவமனையில் இத்தம்பதியரை தான் கொண்டுபோய் சேர்ப்பதாக கூறுகிறார்.  நேரம் செல்லச் செல்ல நிறைமாத கர்ப்பிணியால் பிரசவ வேதனையை தாங்கிக்கொள்ள முடியாத சூழல் உருவாகிறது.  சமயோஜிதமாக யோசித்து செயல்படும் ஆட்டோராணி, சரியான நேரத்திற்குள் மருத்துவமனையை அத்தம்பதியர் சென்றடைவதற்கு உதவுகிறார்.  இக்கட்டான நேரத்தில் தங்களுக்கு உதவியதற்காக அந்த கர்ப்பிணி பெண் மனதார பாராட்ட, தான் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று கூறி அவ்விடத்திலிருந்து விடைபெறுகிறாள் ஆட்டோ ராணி.

ஆட்டோ ராணி என்ற தமிழின் கனிவையும், உதவுகின்ற மனப்பான்மையையும் அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தும் இந்த புரொமோ, அந்த இளம்பெண்ணின் கதாபாத்திர பண்புகள் என்னவென்று பார்வையாளர்களுக்கு சுட்டிக்காட்டுகிறது.  கண்ணியத்தோடு வாழ்க்கையை வாழவேண்டுமென்ற அப்பெண்ணின் மனஉறுதி மற்றும் அனைத்திற்கும் மேலாக உறவுகளை மதிக்கும் மேன்மை என்ற சிறந்த பண்புகளை கொண்ட பெண் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது.

கலர்ஸ் தமிழ் சேனலில் அக்டோபர் 10 முதல், ஒளிபரப்பப்படவுள்ள இந்த சிறப்பான கதையம்சம் கொண்ட உள்ளத்தை அள்ளித்தா நெடுந்தொடர், குடும்பச் சுமையையும், அதன் முன்னேற்றத்திற்கான கடமைப் பொறுப்புகளை சிறப்பாக கையாளும் திறன் கொண்டவர்கள் பெண்கள் என்ற உண்மையை அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறது.  பெண்கள் ஆண்களை விட திறன் குறைந்தவர்கள் என்ற உண்மையற்ற, தவறான பாகுபாடுகளையும், கண்ணோட்டங்களையும் உடைத்தெறியவும், மக்கள் மனதில் பெண்கள் மீது மதிப்பையும், மரியாதையையும் உருவாக்கவும் இந்நெடுந்தொடர் உதவும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *