80’S பில்டப் திரை விமர்சனம் !!
ஸ்டுடியோ கிரீன் – கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து,கல்யாண்
இயக்கி சந்தானம் நடித்து வெளி வந்திருக்கும் படம் 80’S பில்டப் .
சந்தானம்
ராதிகா ப்ரீத்தி, மயில்சாமி, ஆடுகளம் நரேன், ஆனந்தராஜ், கே எஸ் ரவிக்குமார், முனீஸ்காந்த், கிங்க்ஸ்லி, தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான் மற்றும் பலர் நடித்து உள்ளனர.
இசை ஜிப்ரானும்
ஒளிப்பதிவு ஜேக்கப் ரத்தினராஜும் .
80 காலகட்டங்களில் கதை நகர்கிறது. தீவிர கமல்ஹாசன் ரசிகராக வருகிறார் நாயகன் சந்தானம்.
தீவிர ரஜினி ரசிகராக வருகிறார் சுந்தர் ராஜன். அரச குடும்பத்தைச் சேர்ந்தது இவர்களது குடும்பம்.
இந்நிலையில், சந்தானம் வீட்டில் புதையல் ஒன்றிற்கான வரைவு படம் கத்தி ஒன்றில் இருப்பதை அறிந்த மன்சூர் அலிகான், அதை கைப்பற்ற தனது டீமோடு இறங்குகிறார்.
அப்போது, சுந்தர் ராஜன் இறந்துவிடுகிறார். இறப்பதற்கு முன்பு மன்சூர் அலிகானின் வைரங்களை விழுங்கி விடுகிறார்.
இந்த வைரங்களை எடுப்பதற்காக மன்சூர் அலிகான் டீம் அவர்களது வீட்டிற்குள் இறங்குகிறது.
இறப்பு வீட்டிற்கு வரும் நாயகி ராதிகா ப்ரீத்தியை, பார்த்ததும் காதலில்
விழுகிறார்சந்தானம்
.ஒருநாளில் ராதிகா ப்ரீத்தியை காதலில் விழ வைக்கிறேன் என்று சந்தானம் தனது தங்கையிடம் சவால் விடுகிறார்.
கொடுத்த சவாலில் சந்தானம் ஜெயித்தாரா இல்லையா என்பதே இப்படத்தின் கதை
காமெடி நாயகனாக அவதாரம் எடுத்து வெற்றி பெற்ற சந்தானம் !
ஆனந்தராஜ் மற்றும் ஆடுகளம் நரேன் இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் சிரிப்பலையின் உச்சம் .
மயில்சாமி, சாமிநாதன்
கொடுத்த கதாபாத்திரம் ஏற்று நடித்து இருக்கிறாகள்
.கே எஸ் ரவிக்குமார், முனீஸ்காந்த், கிங்க்ஸ்லி வரும் காட்சிகள் தேவை இல்லை
இயக்குனர் கல்யாண்க்கு பாராட்டு.
ஜிப்ரானின் இசை அருமை
ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில்
80’S பில்டப் கவனம் தேவை !