“அன்பில் அவன் ” திரைவிமர்சனம் :-

Share the post

” அன்பில் அவன் ” என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனம் :-
கதைக் கரு :- காதல் , குடும்ப உறவு மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதைக் கரு.

கதையும் கதையின் போக்கும் :-
காதலில் தொடங்கி குடும்ப உறவுகளில் பயணித்து எதிர்பாராத வண்ணம் ஆக்‌ஷன் பாதைக்குள் பயணிக்கும் கதையாக உருவாகியுள்ளது. வழக்கம் போல வரும் காதல் காட்சிகள் இப்படத்திலும் சற்றும் தளரவில்லை. சூரியா வேடத்தில் அசோக் செல்வன்.இயல் வேடத்தில் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ளனர்.

சூரியாவும் இயலும் காதலித்து பின்னர் திருமண பந்தத்தில் இணைகின்றனர். காதல் என்று வந்தாலே குடும்ப ஆதரவு நிச்சயமாக இருக்காது. இந்த நிலையில் இருவரும் தனியாக தங்களுடைய வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். சொந்தமாக தொழில் ஒன்றைத் தொடங்க வேண்டும். அதன் மூலம் தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் மலைப் பகுதியில் அழகான வீடு ஒன்றை வாங்கி அதனை தங்கும் விடுதியாக மாற்றி நடத்த முடிவு செய்கின்றனர்.

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று ! இது தான் வாழ்க்கை . ஆமாம் அந்த வீடு அவர்களது வாழ்க்கையில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. வழக்கம் போல எல்லா படத்தில் வரும் அரசியல்வாதிகளின் குறுக்கிடு இப் படத்திலும் வருகிறது. அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவின் குறுக்கீடு இவர்களையும் விட்டு வைக்க வில்லை. எப்படியாவது இவர்களின்வீட்டை தனதாக்கி கொள்ள வேண்டும் என்ற பேராசை அந்த எம்.எல். ஏ வுக்கு.இதற்காக வேண்டி இவர்களை பல விதங்களில் தொல்லைப்படுத்துகிறார். எம்.எல்.ஏ வின் பின்னணியில் ஆள் பலம் அரசியல் பலம் இவ்விரண்டும் நகமும் சதையும் போல ஒட்டிக் கொண்டிருக்கும் போது இவர்கள் தான் என்ன செய்ய முடியும் ?

எம்.எல்.ஏவின் நிழலாக வலம் வரும் நபர்கள் மக்களைப் பாதுகாக்க வேண்டிய போலீஸ் அதிகாரி கைக் கூலியாக மாறுவதும். சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய வழக்குரைஞரே சட்டவிரோத செயலில் ஈடுபடுவதும். இவ்விரண்டும் மன்னிக்க முடியாத குற்றம். இந்தக் குற்றத்தை அதிகரிக்கச் செய்யும் இந்த நபர்களை இளந் தம்பதியர்களால் என்ன செய்யமுடியும் ? இந்த சமூக விரோதிகளால் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொள்ள முடியாமல் ஒரு கட்டத்தில் தங்களுடைய வீட்டையும் , உயிரையும் காப்பாற்ற வேண்டிய சூழல்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தின் முடிவு தான் என்ன ? என்பதே மீதிக் கதை .

திரைப்பட நட்சத்திரங்கள் :-
அசோக் செல்வன் – சூரியா வேடத்தில் நடித்திருக்கிறார். இவர் நடிக்கும் படம் என்றாலே மென்மையான காதல் இருக்கும். இயல்பான நடிப்பு இருக்கும். இந்தப் படத்திலும் அந்த எதிர்ப்பார்ப்பு எதிர்ப் பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் அசோக் செல்வன் ஆக்‌ஷன் களத்தில் இறங்கி இருக்கிறார் அசோக் செல்வன் தன்னுடைய பங்களிப்பை நிறைவாக செய்து முடித்திருக்கிறார் . படத்தில் வன் முறைக் காட்சிகள் அதிகம் ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறது. சட்ட ரீதியாக காண வேண்டிய தீர்வை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.

ப்ரீத்தி முகுந்தன் – இயல் என்னும் பாத்திரத்தில் காதல் மனைவியாக இயல்பாக நடித்து தனி முத்திரையை பதித்திருக்கிறார். படத்தின் இறுதிக் காட்சியில் அசோக் செல்வனுக்கும் ப்ரீத்தி முகுந்தனுக்கும் இடையே நடைபெறும் சொற்போர் படத்திற்கு ஒரு மைல் கல் .

கதிர் பாலு – எம்.எல்.ஏ ராஜநாயகமாக நடித்து தன் வில்லத் தனத்தை காட்டியிருக்கின்றார். காவல் துறையும் நீதித் துறையும் தன் சட்டப் பைக்குள்ளே என்பதைப் போல நடந்து கொள்கிறார். கதாநாயகனையும் , கதாநாயகியையும் பல்வேறு விதங்களில் தொல்லைப்படுத்துகிறார்.

மஹா டெல்லி கணேஷ் – இன்ஸ்பெக்டர் தவசியாக நடித்திருக்கிறார். அரசிடம் சம்பளத்தை வாங்கிக் கொண்டு எம்.எல்.ஏவுக்கு விசுவாசியாக இருந்து கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் அவர் பங்குக்கு தொல்லைக் கொடுப்பது காக்கிச் சட்டைக்கே பெருத்த அவமானம் .

மஹா டெல்லி கணேஷ் – இன்ஸ்பெக்டர் தவசியாக நடித்திருக்கிறார். அரசிடம் சம்பளத்தை வாங்கிக் கொண்டு எம்.எல்.ஏவுக்கு விசுவாசியாக இருந்து கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் அவர் பங்குக்கு தொல்லைக் கொடுப்பது காக்கிச் சட்டைக்கே பெருத்த அவமானம் .

சாபுமோன் அப்துசமத் – வழக்குரைஞர் மார்ட்டினாக நடித்து இருக்கிறார் . சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு பந்தாடுகிறார். அரசியல்வாதிக்கு கவரி வீசிகிறார்.

ரேவதி – ராணி பத்மினி வேடத்தில் நடித்திருக்கிறார்.

கதையில் சிறு துளிகள் :- அன்பில் அவன் வித்தியாசமான ஆரோக்கியமான தலைப்பு. தலைப்பே நம்மை படம் பார்க்கச் சொல்லும். படம் தொடங்கிய சில நிமிடங்களில் காதலின் எதிர் பார்ப்பை மாற்றுகிறது திரைக்கதை. கதாநாயகன் – கதாநாயகி ஜோடியின் இயல்பான வாழ்க்கையைப் பற்றிக் காட்டும் காட்சிகள் படத்தின் போக்கை ஓர் அழகான காதல் கதை என நினைக்கத் தோன்றுகிறது. மலைப்பகுதிக்கு இவர்கள் பயணிக்கும் தருணத்திலிருந்து கதை வேறு பாதைக்கு அழைத்துச் செல்கிறது. அதன் பிறகு தொடரும் சம்பவங்கள் , படம் எந்த திசையில் போகப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பை மாற்றுகின்றன.அடியாட்கள் , காவல் துறை அதிகாரியின் அட்டகாசம் , வழக்குரைஞரின் சட்ட மீறல் எம்.எல்.ஏ வின் அட்டூழியம் பதற வைக்கின்றன.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இசை :- கோவிந்த் வசந்தாவின் இசை படத்தில் வரும் காதல் காட்சிகள் , உணர்வு பூர்வமான காட்சிகள் இவைகளுக்கு கைக் கொடுத்து உதவுகின்றது. இசையில் உருவான பாடல்கள் கேட்கும் வண்ணம் உள்ளன.பின்னணி இசை படத்திற்கு பலத்தை சேர்த்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *