
” ஏன் என்னை ஏதோ செய்தாய் ? ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-

கதையின் போக்கு :- கதை நாயகன் டி. ஆண்டனி. சின்ன வயதில் தாயை இழந்து , தந்தையின் அரவணைப்பும் இல்லாமல் தனிமரமாய் தனிமையில் வளரும் இவர் தவறான பாதையில் செல்கிறார்.
மது என்னும் அரக்கன் ஏனோ பகுத்தறிவு உள்ளவனை மிருகமாக மாற்றுகின்றான் ? இந்தக் கேள்விக் கணையைத் தொடுத்தால் ஓராயிரம் பதில் கிடைக்கும் இங்கே ! தனிமை என்னை வாட்டுகிறது அதனால் குடிக்கிறேன் இது ஒரு பதில்.
மனத்தில் குழப்பம் அதனால் குடிக்கிறேன் இன்னொரு பதில்.
கவலையை மறக்க மதுவை குடிக்கிறேன் இதுவும் ஒரு பதில்.
காதலில் தோற்று விட்டேன் அதனால் குடிக்கிறேன் இதுவும் ஒரு பதில் தான். கடனில் மூழ்கினேன் அதனால் குடிக்கிறேன் இப்படி ஒரே கேள்விக்கு எத்தனை விதமான பதில்கள் பார்த்தீர்களா ?
இவர் தனிமையில் வாழ்வதால் மது போதைக்கு அடிமையாகிறார். காதல் இதுவரை இவரை திரும்பி பார்க்கவில்லை. சொந்தம் பந்தம் இவரை நெருங்கியதே இல்லை. ஆமாம் தாய் தந்தையர் இல்லை என்றால் யாரும் நம்மை சீந்துவார் இல்லை.
பாலியல் தொழில் ஏன் நடக்கிறது ? அதற்கான காரணம் என்ன ? அதனை தடுக்க என்ன வழி ? இப்படி அடுக்கடுக்காக கேள்விக் கணைகளை தொடுத்தால் ஒரே பதில் வறுமை. தடுக்க வழியில்லை.
தினந்தோறும் பாலியல் தொழில் செய்பவரை தன் வீட்டுக்கு வரவழைப்பது. அவருடன் மனம் விட்டுப் பேசுவது . இது தான் இப் படத்தின் கதாநாயகனின் வாடிக்கை. அந்த வகையில் ஓர் நாள் இரவு பாலியல் தொழில் செய்யும் மதுமிதா தாஸ் அவர் அழைப்புக்கு வருகிறார். அவரிடமும் மனம் விட்டு பேசுகிறார் கதாநாயகன். மதுமிதா தாஸிடம் பேசுவது கதாநாயகனுக்கு பிடித்துப் போக தினமும் மதுமிதா தாஸை தன் வீட்டுக்கு அழைக்கே அதுவே காதலாக மாறுகிறது.
தனிமையில் தவித்த ஆண்டனிக்கு மதுமிதா தாஸின் வருகை புத்துணர்ச்சி ஊட்டுகிறது. தன் வாழ்க்கை மீதே ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது. இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து அதன் பிறகு இருவரும் சேர்ந்தே வாழ்கின்றனர்.
மதுப்பழக்கம் ஒரு மனிதனை மிருகமாக்கும். குடும்பத்தை பிரிக்கும்.அதுதான் நடந்தது ஆண்டனி வாழ்க்கையில் .
மதுமிதா தாஸ் ஆண்டனியை விட்டு பிரிந்து போகிறாள். மீண்டும் தனிமைக்குத் தள்ளப்பட்ட ஆண்டனி தன்னை விட்டுச் சென்ற மதுமிதா தாஸை தன்னுடன் இணைத்துக் கொள்கிறாரா ? இல்லையா ? என்பதனை உணர்ச்சிகரமாக சொல்வதே” ஏன் என்னை ஏதோ செய்தாய் ? “
திரைப்படக் கலைஞர்கள் :-
கதாநாயகனாக டி.ஆண்டனி
கதைநாயகியாக மதுமிதா தாஸ்.
இவர்களின் கதாபாத்திரங்கள் ஒன்றிப் போகிறது .
படத்தில் வரும் இவர்களது வசனங்கள் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. இவர்களின் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப எழுதப்பட்ட வசனங்கள் திரைக்கதைக்கு வலு சேர்ப்பதுடன் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கின்றது என்றே சொல்லலாம்.
நேரடியாக ஒலிப்பதிவு முறையில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசத் தெரியாத மதுமிதா தாஸை பெங்காலி பெண்ணாக மாற்றி நடிக்க வைத்திருக்கிறார் இப் படத்தின் இயக்குநர்.
மதுமிதா தாஸ் தமிழ் மொழி தெரியாதவர். பெங்காலி பெண்ணாக நடித்திருக்கிறார். தமிழுக்குப் பதில் ஆங்கிலத்தில் பேச வைத்திருக்கிறார் இயக்குநர். முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசி நடித்தால் படம் பார்க்க வருபவர்கள் அனைவருக்கும் ஆங்கிலம் தெரியுமா ? இதனை இயக்குநர் யோசிக்க வேண்டாமா ? உங்கள் புலமையைக் காட்ட திரைப்படம் தானா கிடைத்தது ?
மதுமிதா தாஸ் தமிழ் மொழி தெரியாதவர். பெங்காலி பெண்ணாக நடித்திருக்கிறார். தமிழுக்குப் பதில் ஆங்கிலத்தில் பேச வைத்திருக்கிறார் இயக்குநர். முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசி நடித்தால் படம் பார்க்க வருபவர்கள் அனைவருக்கும் ஆங்கிலம் தெரியுமா ? இதனை இயக்குநர் யோசிக்க வேண்டாமா ? உங்கள் புலமையைக் காட்ட திரைப்படம் தானா கிடைத்தது ?
எந்த நேரமும் கையில் வெண்சுருட்டும் ( சிகிரெட் ) ,மதுப் புட்டியும் கையில் வைத்துக் கொண்டு சுற்றும் கதாநாயகன் டி.ஆண்டனி. சிறு சிறு அசைவுகள் கூட தன்னுடைய உடல்மொழியால் வெளிப்படுத்தி பார்வையாளர்களை தன் பக்கம் கவர்ந்திருக்கிறார். இவரை நாம் வெகுவாகப் பாராட்டலாம்.
துணை நட்சத்திரங்கள் :-
ஜீவா ரவி , ரெஜின்ரோஸ் , நவ்யா சுஜி ஆகியோர் தன் பங்கை சரிவர செய்து இருக்கின்றனர்.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
ஒளிப்பதிவாளர் :- பியேட்ரோ வில்லானி. இவர் இயல்பாகவும் , எளிமையாகவும் காட்சிகளை இயற்கை ஒளியின் துணைக் கொண்டு படமாக்கி பார்வையாளர்களை அசத்தி இருக்கின்றார் பாராட்டுத் தெரிவிக்கலாமே !