” இம்மார்டல் ” ( Immortal) திரை விமர்சனம் :-

Share the post

” இம்மார்டல் ” ( Immortal) என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-

இந்தப் படத்தின் கதை நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் என்பவர் வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருக்கிறார். இவர் திருமணம் ஆகாத கட்டை பிரம்மச்சாரி ; ஆனாலும் கட்டிளங்காளை ; கட்டுக் குலையா தேகம் கொண்ட வாலிபன்.

இளம் பெண்ணிடமிருந்து ஓர் அழைப்பு. அழைப்பின் குரலைக் கேட்டு மகிழ்ச்சி அடையும் ஜி.வி. பிரகாஷ் குமார்.

” இம்மார்டல் ” ( Immortal) என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-

கதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சியுடன் திருப்புக் காட்சி தொடங்கி உடனே நிகழ் காலத்திற்கு வந்து விடுவதாக கதை நகர்ந்து செல்கிறது.

” இம்மார்டல் ” ( Immortal) என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-

கதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சியுடன் திருப்புக் காட்சி தொடங்கி உடனே நிகழ் காலத்திற்கு வந்து விடுவதாக கதை நகர்ந்து செல்கிறது.

கதாநாயகன் G.V.பிரகாஷ் குமார் தன்னுடைய மாமா லொள்ளு சபா மாறனுக்கு
சொந்தமான அச்சகத்தில் வேலைக்குச் சேருகிறார்.

தான் தங்குவதற்கு வாடகைக்கு வீடு தேடுகிறார்.

சும்மா தேடினாலே வாடகைக்கு வீடு கிடைக்கும் . இவர் தேடும் வீட்டின் எதிரே வயசு பொண்ணு இருக்கா ? பக்கத்து வீட்டில் வாலை குமரி இருக்கா ? இப்படி கா…கா..கான்னு பொண்ணுங்களைத் தேடினால் வீடு எங்கிருந்து வாடகைக்கு கிடைக்கும் ?

முற்றிலும் மாறுபட்ட ஒரு கதை அம்சம் கொண்ட படம் தான் இந்தப் படம்…

மீண்டும் கதைக்குவருவோம். வீடு வாடகைக்கு கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் G.V.பிரகாஷ் குமாரின் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது ? பேசுவது கிளியா ? பெண்ணரசி மொழியா ? பழைய பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது

G.V.பிரகாஷ் குமாரே நினைத்துப் பார்க்காத செய்தி ஒன்று அலைபேசி வாயிலாக வருகிறது. அலைபேசியின் மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல் பேசுகிறது. ” நீங்க(ள்) வாடகையை பகிர்ந்து கொள்ளும் அளவில் வீடு தேடுகிறீர்களா ? அப்படித் தேடுவதனால் என்னறையே இருக்கிறது வாங்க “. குரலின் வழியே வந்த பேச்சு சற்று இடைவெளி விட .ஆமாம் என்கிறார் நம்ம G..V.பிரகாஷ் குமார். மறுமுனையில் பேச்சு மீண்டும் தொடர்கிறது. வாடகை வெறும் ஐந்தாயிரம் ரூபாய் மட்டும் தான் மாதத்திற்கு என்ற உடன் கதை நாயகன் சந்தோஷமாக இதற்கு ஒப்புக் கொண்டு அந்த வீட்டைப் பார்க்க புறப்படுகின்றார். அந்த வீட்டைப் பார்த்த உடனே அவருக்கு பிடித்து விடுகிறது.அடுக்கு மாடி குடியிருப்பு அதில் ஒன்று மிகப் பிரம்மாண்டமான வீடு. கதவைத் தட்ட கதவு திறக்கிறது. திறந்த உடன் வானத்து வெண்ணிலவோ ; வனத்தைக் காக்கும் வன தேவதையோ என பிரம்மிப்பால் அசந்து போய் நிற்கிறார் கதாநாயகன். அந்த வனதேவதை வேறு யாருமில்லை நம்ம கதைநாயகி கயாடு லோஹர் தான்.பார்த்த உடனே அந்த அறையில் தங்கி விடுகிறார் கதாநாயகன்.

அவர் தங்கிய பிறகு தான் ஒவ்வொரு அமானுஷ்யமான விஷயம் நடக்க ஆரம்பிக்க…. மனித அறிவிற்கு எட்டாத , அறிவு சார்ந்த அறிவியலுக்கோ எளிதில் விளங்காத இயற்கைக்கு அப்பாற்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட மர்மமான நிகழ்வுகளைத்தான் ஆன்மிகத்தில் அமானுஷயம் என்று கூறுவர் ஆன்மிக சான்றோர்

அதன்பிறகு மீண்டும் படத்தின் திருப்புக் காட்சியில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடைப்பெற்ற சம்பவத்திற்கும் இந்தப் படத்தின் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று சொல்ல வந்த கதை தான் இந்தப் படத்தின் கதை.

படத்தின் முதல் பகுதி ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதனை திகில் நிறைந்த காட்சிகள் மூலம் பார்வையாளர்களை கட்டிப்போட வைக்கிறது.

கதாநாயகி கயாடு லோஹர் – கதாநாயகன் G.V. பிரகாஷ் குமார் இவர்கள் இருக்கும் வீட்டில் இரும்மல் தாத்தா என்கிற கதாப்பாத்திரத்தை நினைவு ஊட்டும் போது பழைய படம் ஒன்று நினைவுக்கு வருகிறது இரும்மல் தாத்தா கதாபாத்திரம். கடைசி வரை ஆளையேக் காட்டாமல் , பேச்சும் இல்லாமல் அந்தக் கதாபாத்திரத்தை கதையோடு நகர்த்தி இருப்பார் அந்தப் படத்தின் இயக்குநர். இந்தப் படத்தில் தாத்தா கதாப்பாத்திரத்தை நடமாட விட்டு பேச விட்டிருப்பார் . அவர் யார் ? அவர் வந்து எப்படி இந்த வீட்டில் மாட்டிக் கொண்டார் என்ற விவரத்தினை விளக்கி இருப்பது படத்திற்கு ஒரு பிளஸ் பாயிண்ட்.

வாம்பைர் என்று சொல்லக் கூடிய இரத்தக் காட்டேரி. இது இறந்த உடலில் இருந்து மீண்டு வந்து இரவில் மனிர்களின் இரத்தத்தை உறிஞ்சு குடிப்பதாக பழைய கதைகள் முன்பு சொன்னது உண்டு. அந்த வகையில் இப் படத்தின் கதை நாயகி கயாடு லோஹர் வாம்பையராக வருகிறார். அவரோடு கதாநாயகன் G.V.பிரகாஷ் பனியனோடு சண்டைப் போடுகிறார். கதாநாயகியும் அவரோடு பாய்ந்து பாய்ந்து சண்டைப் போடுகிறார். சண்டைக் காட்சிகள் இரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு எடுக்கப்பட்டிருக்கிறது.

மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம். நான்கு கதாபாத்திரங்கள் தான் படம் முழுக்க சுற்றி வருகின்றன. ஆளே போகாத ஒரு கட்டிடத்தை தேர்ந்தெடுத்து அதற்காகவே கதைப் பின்னப்பட்டு கதையை நகர்த்தி இருப்பது சற்று நெருடல் தான். மனிதர்களை நம்பாமல் கிராபிக்ஸ்ஸை நம்பி செலவு செய்து இருப்பது அவர்களுடைய தன்னம்பிக்கை குறைந்திருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

படத்தின் இறுதிக் காட்சியில் வேம்பையராக வரும் கதாநாயகியுடன் கதாநாயகன் G.V.பிரகாஷ் குமார் கத்தியுடன் சண்டைப் போடுகிறார். அந்த வேம்பையர் இவரை மரத்தில் மாட்டி விட்டு இரத்தத்தைக் குடிக்க தன் நாக்கை நீட்டி கழுத்தில் வைத்து இரத்தித்தைக் குடிக்க மயக்கமடைந்த நாயகன் பிறகு தெளிவு பெற்று தன் கையில் வைத்திருந்த கத்தியால் வேம்பையரின் நாக்கை அறுத்து விடுகிறார். அதன் கொடுக்கை உடைத்து அந்தக் கொடுக்கால் வேம்பையரைக் கொல்ல முயற்சிப்பதாக கதை போகிறது. விஞ்ஞான காலத்தில் இப்படி ஒரு கதையா ?

லொள்ளு சபா மாறன் , ஆதித்யா கதிர் , அர்ஷூ மஹாராஜ் , பேமா சாம்சோ , சுனிதாஷ்ரேஷ்டா ஆகியோர் நடிப்பால் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவுகின்றது.

துணை நட்சத்திரங்கள் :-

லொள்ளு சபா மாறன் , ஆதித்யா கதிர் , அர்ஷூ மஹாராஜ் , பேமா சாம்சோ , சுனிதாஷ்ரேஷ்டா ஆகியோர் நடிப்பால் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவுகின்றது.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
ஒளிப்பதிவு :- அருண் ராதாகிருஷ்ணன் தன் ஒளிப்பதிவால் அழகு படுத்தி இருக்கின்றார். கிராபிக்ஸ் முறையை சரிவர பயன்படுத்தி இருக்கின்றார்.

இயக்குநர் மாரியப்பன் சின்னாவின் முயற்சிக்கு ஒரு பாராட்டு.
கதையில் ஓட்டை இல்லாமல் சிந்தித்து ஏற்றுக் கொள்ளும் விதம் படம் எடுத்தால் வெற்றி பெறுவார்

இசை :- சாம்.சி.எஸ் இசையோ அதன் மூலம் கிடைத்த பாடலோ ஒட்டவில்லை . மனத்தில் நிற்கவில்லை G.V.பிரகாஷ் குமார் இதைக் கொஞ்சம் கவனித்து இருக்கலாம்.

படத்தொகுப்பு :- ராஜேஷ் எம். காட்சிகளை சுருக்கி வெட்டி படத்தினை வேகப் படுத்தி உள்ளார். பாரட்டலாம்.

திரை விமர்சனம் மூலம் சொல்லும் கருத்து படம் எடுக்கும் போது நம்பத் தகுந்தவை மட்டும் எடுங்கள். கற்பனை மெருகேற்றி ஒவ்வாததை எடுத்து விரையம் செய்ய வேண்டாம். எங்கள் பத்திரிகை குழு நடுநிலையோடு உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கிறது. மீண்டும் சந்திப்போம் அதுவரை உங்கள் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ,ஓகே டேக் ராஜேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *